"நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்," இயக்கத்தை துவக்கி வைத்தார் சத்குரு

இந்திய நதிகளின் இக்கட்டான நிலை குறித்து, தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கும் "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்," எனும் இயக்கம் சத்குரு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவினை இதற்கு வழங்கியுள்ளார்கள். உங்கள் ஆதரவை தெரிவிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு மிஸ்டுகால்... 7000 பேர் கூடி துவங்கிய இயக்கத்தின் துவக்க காட்சிகள் இங்கு உங்களுக்காக...
 

"Rally for Rivers" எனும் விழிப்புணர்வு இயக்கம், சத்குரு அவர்களால் ஜூலை 9, 2017ல் துவங்கப்பட்டது. இந்திய நதிகளின் இக்கட்டான நிலை குறித்து, தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கும் "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்," எனும் இயக்கத்தின் துவக்க விழாவில், 7,000க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

இந்த இயக்கத்திற்கு கைகொடுக்கும் பெருந்திரளான மக்களின் ஒரு சிறுபகுதியே இந்த 7,000 பேர். பொங்கிப்பெருகும் வெள்ளத்தின் சிறுதுளி மட்டுமே இவர்கள். இவர்களைப்போல், நம் நதிகளை மீட்பதற்கு பல லட்சக்கணக்கான மக்கள் உறுதி எடுத்திருக்கிறார்கள்.

நகரவாசிகள், கிராம மக்கள், இளைஞர்கள், வயதானவர்கள், அமைச்சர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள், விவசாயிகள், சமூகத் தலைவர்கள், அரசு நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு துறைகளை சேர்ந்த இன்னும் பலர், "நதிகளை மீட்டு, பாரதம் காக்கும்," இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் இதில் நிச்சயம் பங்கேற்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரே ஒரு மிஸ்டுகால் மட்டுமே.

80009 80009 என்ற எண்ணிற்கு இன்றே மிஸ்டுகால் கொடுங்கள்.

மேலும் தகவல்களுக்கு: RallyForRivers.org

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1