பக்திக்குப் பெயர்போன மார்கழியில் பைரவி வந்தாள் அருள் வழியில். ஆம்! மார்கழி மாதத்தில் சென்னையில் நடந்தேறிய பூஜைகளும், பெண்கள் சிவாங்கா தீட்சை நாள் கொண்டாட்டங்களும் உங்கள் கண் முன்னே!

சென்னையில் பைரவி புண்ணிய பூஜையும் யந்திர பூஜைகளும் வழக்கமானதுதான் என்றாலும், இம்முறை மார்கழி மாதமானதால் தனிச்சிறப்பு பெற்றது. பக்திக்கு என்று தனி இடம் கொண்டுள்ள மார்கழி மாதத்தில், சென்னை நகரம் பைரவியின் அருளில் திளைத்திருக்கிறது. பத்தே நாட்களில் முப்பது பூஜைகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4

பைரவி புண்ய பூஜையின் தனிச் சிறப்பு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், “சடங்குகளின் அழகு அதனை விஞ்ஞானப்பூர்வமாக நிகழ்த்தினால், அதை யார் நடத்தினாலும், அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களும்கூட அதனால் பயன்பெற முடியும். இது சமூகத்திற்கே சக்தி உருவாக்குகின்ற வழிமுறை; சமுதாய தியானம் போன்றது. சமுதாயத்திற்கு ஒருசேரக் கிடைக்கும் ஆன்மீக வாய்ப்பு.”

எவ்வித தவறும் நடந்துவிடாத வகையில், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மிக நேர்மையான மனிதர்கள், செய்யும்முறை அறிந்து சரியாகச் செய்யும் இந்தப் பூஜைகள், பலருக்கு ஆழமான அனுபவமாக மலர்ந்திருப்பதை, அவர்கள் கண்களில் வழிந்தோடும் கண்ணீராய் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.

மார்கழியின் ஆன்மீக முக்கியத்துவம்

மார்கழி மாதம் நம் உடலுக்கு ஸ்திரம் உண்டாக்கும். இம்மாதத்தில் தான் பூமி, அதன் சுழற்சியில் சூரியனுக்கு மிக அருகில் செல்லும். இருந்தாலும், இந்நெருக்கத்தில் அதன் கதிர்கள் பூமியை அடையும் கோணத்தில் சற்றே விரிந்து சென்றுவிடுவதால் பிற மாதங்களில் இருக்கும் அளவிற்கு வெப்பம் நம்மை வந்தடைவதில்லை.

வெப்பம் அதிகம் தென்படவில்லை என்றாலும், இந்நெருக்கத்தில் சூரியனின் புவியீர்ப்பு பூமியில் மற்ற மாதங்களை விட அதிகமாகவே வேலை செய்கிறது. அதனால் நம் உயிர்சக்தி, கீழ் நோக்கி இழுவை பெறும் - அதாவது உயிர் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறும். இம்மாதத்தில், உயிர் சக்தி வளர்ச்சிப் பரிமாணத்தில் குறைந்து இருப்பதால், நம் உடலை சமநிலைப் படுத்தவும், ஸ்திரப்படுத்தவும் இது ஏதுவான மாதம். இந்த ஸ்திரத்தை உண்டு செய்யவே ஆன்மீக வழிபாட்டுமுறைகளும், பக்தி சாதனாவும், கொண்டாட்டங்களும் நம் கலாச்சாரத்தில் கொண்டுவரப்பட்டன.

சென்னையில் இவ்வருட மார்கழி

5

சத்குரு வடிவமைத்து, 21 நாட்கள் விரதம் இருக்கும் பெண்களின் சிவாங்கா சாதனாவின் துவக்க விழா, டிசம்பர் 27 அன்று, தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்தது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும், 1500 க்கும் மேற்பட்டோர் இவ்விரதத்தை அன்று துவங்கினர்.

மைலாப்பூரில் பெரும் கொண்டாட்டமாக நடந்த துவக்க விழாவில், இந்த சாதனாவை மேற்கொள்பவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், தியான அன்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் திரண்டனர். வந்திருந்தவர்கள் தங்கள் அனுபவங்களை நெஞ்சுருகி பகிர்ந்து கொள்ள, அற்புதமாய் இவ்விழா நடந்தேறியது.

இது தவிர, சென்னையில் பத்து நாட்களில் 30 பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தனை பூஜைகள் ஒரே நகரத்தில் பத்தே நாட்களுக்குள் நடந்திருப்பது நம் சென்னை மக்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் நமக்கு உணர்த்துகிறது.

பாண்டிச்சேரியிலும் டிசம்பர் 6ம் தேதியன்று பிரம்மாண்டமான லிங்கபைரவி பூஜை நடந்தது.
1

2

3

அதன் பின்னர் சித்தூர், திருவண்ணாமல, காஞ்சியுரம் என்று பூஜைகள் நிகழ்ந்தன. செல்லும் வழியெங்கும் லிங்கபைரவி தன் அருளையும் கருணையையும் படரவிட்டுச் செல்வதுதான் மிக அற்புதம்!