ஈஷா இன்சைட் - நேர்மை, சுயபரிசோதனை, நறுக்குத்தெரிக்கும் ஆழமான கலந்தாய்வுகள் என பங்கேற்பாளர்களுக்கு தெளிந்த வழிகாட்டியாய் அமைந்திருந்தது இவ்வருட நிகழ்ச்சி.

முதல் நாள் இரண்டாம் நாள்

பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பு!

சத்குருவின் உரை:

20171125_SUN_0013-e

20171125_SUN_0326-e

மூன்றாம் நாளன்று சத்குரு மிகவும் ஆழமான அறிவியலை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஈஷாவின் வடிவம்: ஈஷா யோக மையத்தின் வடிவியலை விளக்கிய சத்குரு யோக அறிவியலை மிகவும் ஆழமாக விளக்கத் துவங்கினார். உலகில் ஒரு செயலைச் செய்வதற்கு முன் எப்படி அதனை மக்களின் மனதில் விதைக்க வேண்டும் என்று விளக்கினார்.

தலைவர் என்பவர் ஒருவர் தானாகவே செல்ல இயலாத இடத்திற்கு அவரை அழைத்துச் செல்பவர். தலைவர் தான் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்பவர் அல்ல

ஒரு சக்கரத்தை வரைந்தார். வட்ட வடிவில் இருக்கும் இந்தச் சக்கரத்தின் மையத்தை நிர்ணயிக்க வேண்டும். இந்த மையத்தை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால் அது மெல்ல விரிந்து பெரிய வட்டமாகிவிடும். விரிவது உள்முகமாக இருக்கலாம் அல்லது வெளிமுகமாக இருக்கலாம். அது எவ்விதமாக இருந்தாலும் அது தொடர்ந்து விரிந்து கொண்டேதான் இருக்கும்.

முதலில் விதையினை மக்களின் மனத்தில் வைத்திட வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன் அது தாயின் கருவில் வளர்ந்திட வேண்டும். தாயின் கருவில் வளர்ச்சியடையாத குழந்தை இந்த உலகில் பிறந்தவுடன் உடல்நிலையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோக அறிவியலின் அம்சங்கள் இந்தப் பிரபஞ்சத்துடன் ஆழ்ந்த தொடர்பில் இருக்கிறது. மிகவும் ஆழ்ந்த அம்சங்களை சத்குரு விவரிக்க பங்கேற்பாளர்கள் மெய்மறந்து முற்றிலும் வேறொரு உலகில் ஆழ்ந்தனர். சத்குரு இடையில் தன் உரையை நிறுத்தி, "இது புரிந்துகொள்வதற்கு கடினமாக, தொழில்நுட்ப விளக்கமாக இருக்கிறதா?" எனக் கேட்டார். அதற்கு பங்கேற்பாளர்கள் இது ஆழமான அம்சமாக இருந்தாலும் இதுவரை கேள்விப்படாத புதிதான ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் உரையை தொடருமாறு கேட்டுக் கொண்டனர்.

"வெற்றி வேண்டுமானால் அங்கே உண்மையைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. உண்மை என்றால் உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் எது உண்மையாகவே வேலை செய்கிறதோ அதுவே உண்மை.

தலைவர் என்பவர் ஒருவர் தானாகவே செல்ல இயலாத இடத்திற்கு அவரை அழைத்துச் செல்பவர். தலைவர் தான் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்பவர் அல்ல," என்று வெற்றியின் சூத்திரத்தை விளக்கினார்.

வியாபாரம், இடையிடையே ஆரவாரம்!

சூப், சாலட், பழங்கள், உப்மா மற்றும் தெப்லாவுடன் இன்றைய மதிய உணவு முடிந்தது.

மதிய உணவு இடைவேளையின்போது மைசூரிலிருந்து டொல்லு குனிதா குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்தது. நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து சத்குருவும் நடனமாட ஸ்பந்தா ஹால் முழுக்க பலத்த ஆரவாரமும் மகிழ்ச்சியும் நிறைந்தது.

இடைவேளை முடிந்தது என்பதை தெரிவிக்க மீண்டும் இசை துவங்கியது. பங்கேற்பாளர்கள் ஏற்கனவே அங்கே வந்து அமர்ந்திருந்து ஆனந்தமாக நடனமாடத் துவங்கினர். இதைப்போன்ற ஒரு சூழ்நிலையை வியாபாரக் கருத்தரங்குகளில் காண இயலாது.

20171125_SLH_0148-e

20171125_SLH_0137-e

20171125_SLH_0274-e

20171125_SLH_0269-e

20171125_SLH_0242-e

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்

திருமதி. கிரண் மஜும்தர் ஷாவின் பேச்சு!

20171125_SUN_0233-e

இவர் தற்செயலாய் தான் ஒரு தொழிலதிபர் ஆனதாகக் கூறுகிறார். இவரிடம் வியாபாரம் செய்யவேண்டும் என்ற திட்டம் எதுவும் இருக்கவில்லை. இவரது அதிரடியான பேச்சிலிருந்து சில துளிகள்...

  • சவால்களை சந்திக்கும் திறனும் துணிவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தொழிலதிபர் ஆகலாம்.
  • துவங்கும் தொழிலில் கட்டுக்கடங்கா ஆர்வமும் குறிக்கோளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தொழிலதிபர் ஆகலாம்.
  • தோல்விகளைத் தாங்கும் திறன் ஒரு தொழிலதிபருக்குத் தேவையான சக்திவாய்ந்த திறன்.
  • உணவு மற்றும் ஆடை தொழிலில் பூர்த்தி அடையாத தேவைகள் அதிகம் இருப்பதை உணர்ந்த கிரண் அந்த தொழிலில் நுழைந்தார்.
  • இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகமாக பரவி வருவதும் அதற்கான மருந்தை அதிக செலவுசெய்து வாங்க வேண்டியிருப்பதையும் கிரண் உணர்ந்தார். அதன் செலவைக் குறைக்க, இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய நினைத்தார்.
  • இதே போல புற்றுநோய்க்கும் மருந்து தயாரிக்க விரும்பினார்.
  • தனது இருபத்தைந்தே வயதில் தான் சந்தித்த சவால்களைப் பற்றி விவரித்தார்.
  • 10,000 ருபாயைக் கொண்டுத் துவங்கிய தொழில் தற்போது எப்படி 4 பில்லியன் டாலர்களைத் தாண்டியது எனக் கூறினார். மேலும், ஒரு தொழிலதிபர் தான் கடந்து வந்தப் பாதையை பகிர்ந்துகொள்வது அவசியம் என்றார். அப்போது தான் பல முதலீட்டாளர்களைப் பெறமுடியும் என்று கூறினார்.
  • வியாபாரத்தில் முடிவுகளை எடுக்க பகுத்தறிவுதான் தேவைப்படுகிறது.
  • பயோகான், சிஞ்ஜீன் என்ற அவரது இரண்டு நிறுவனங்களுமே IPO வின் முதல் நாளிலேயே ஒரு பில்லியன் டாலரை எட்டியது.
  • கிரண் தனது உரையை முடிக்கும் முன் சுவாரஸ்யமான அதிரடி சுற்றுடன் (Rapid fire round) முடித்தார்.
  • ஒன்றாக சேர்ந்து சிந்திப்பது ஒரு நிறுவனத்தில் மிகவும் முக்கியம். இல்லையென்றால் அது தனித்தனி தீவுகளாகப் பிரிந்துவிடும் என்பதை அழுத்தமாக பகிர்ந்துகொண்டார்.

இவரது உரை இன்சைட் நிகழ்ச்சிக்கு பொருத்தமான முடிவுரையாக அமைந்தது.

இறுதியில், சத்குரு நதிகளை மீட்போம் திட்ட அறிக்கையை கிரண் அவர்களிடம் கொடுத்தார். "இது மிகவும் முக்கியமான ஒரு இயக்கம். இதனை தலையாய பணியாக மேற்கொண்டு செயலாற்றிட வேண்டும்," என்றார் கிரண்!

20171125_SUN_0390-e

"பலருக்குள்ளும் வெளிப்படாமலேயே போய்விடும் திறமையை வெளிக்கொண்டு வருவதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். கலந்தாய்வுகள் மற்றும் செயல்முறை விளக்கங்களையும் தாண்டி உங்களை வேறு ஒரு பரிமாணத்தில் உயர்ந்த திறனுடையவர்களாக மாற்றுவதற்காகத்தான் இன்சைட்," எனக் கூறி நிகழ்ச்சியை முடித்தார் கிரண்.

வெற்றிப் பெற்றவர்களின் அனுபவங்கள், யோகப் பயிற்சி மற்றும் தியானம் மட்டுமல்லாமல் தன்னுள் சுயமாற்றம் பெற்று சக்திவாய்ந்த மனிதர்களாய் விடைபெறுகிறார்கள் நம் ஈஷா இன்சைட் பங்கேற்பாளர்கள்! புதிய தலைவர்கள், புதிய சந்திப்புகள், புதிய வாய்ப்புகள். இத்துடன் புதிய உலகமும் இவர்கள் கண்முன் விரிகிறது. இவர்கள் உயர உயர பறக்கவேண்டும் என்பது நம் ஆசை. செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றோம். மீண்டும் அடுத்த ஆண்டு இணைவோம். நன்றி.