ஈஷா இன்சைட் 2017 - இரண்டாம் நாள்
தொழில் செய்வதிலிருந்து அறிவியல் வரை - புதுமை, உள்ளார்ந்த பார்வை, கலந்தாய்வுகள் நிரம்பியதாய் இந்த நாள் அமைந்திருந்தது.

தொழில் செய்வதிலிருந்து அறிவியல் வரை - புதுமை, உள்ளார்ந்த பார்வை, கலந்தாய்வுகள் நிரம்பியதாய் இந்த நாள் அமைந்திருந்தது.
உங்கள் வாழ்வின் வெற்றியின் ரகசியம் என்ன?
திரு. ஹேமந்த் கனோரியா
Srei Infrastructure நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் MD திரு. ஹேமந்த் கனோரியா, தான் வெற்றிகரமாக வியாபாரத்தை எடுத்துச் செல்லும் ரகசியத்தை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
இவரது வெற்றிப்பயணம் மலர்கள் நிறைந்த பாதைகளால் ஆனதல்ல! பல சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு முறை சவால்களை சந்திக்கும்போதும் வியாபாரத்தை மீண்டும் பார்த்து அதனைச் சரி செய்வதைப் போலவே தன்னையும் மீண்டும் பார்த்து தனது உள்வளர்ச்சியையும் நிகழச்செய்திடுவார்.
திரு. ஹேமந்த் அவர்கள் பல சூழ்நிலைகள் மிகவும் அழுத்தத்தை அளிப்பதாக இருக்கிறது, இருப்பினும் அவற்றை வெற்றிகரமாக தான் கடந்து வந்ததன் காரணம் தனது யோகப் பயிற்சி தான் என்று கூறினார். தினமும் இரண்டு மணி நேரம் யோகப் பயிற்சி செய்யும் திரு. ஹேமந்த் ஒவ்வொரு நாளும் தனக்குள்ளே தன்னை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்.
தொழில்சார்ந்த மார்வாரி சமூகத்திலிருந்து வந்திருக்கும் அவர் நம் பாரம்பரிய தொழில்முறை பற்றி பேசினார். வியாபாரம் கற்றுக்கொண்டதும் கணக்கு வழக்குகள் கற்றுக்கொள்ளும் வழக்கம் போல் அல்லாமல் முதலில் கணக்கு வழக்குகளைக் கற்றுக்கொண்டு பின்னர் வியாபாரத்தை கற்றுக்கொள்ளும் தனது சமூகத்தின் வழக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பின்னர் சத்குரு பேசும்போது, "ஹேமந்தின் ஒரு முனிவரைப் போன்ற அணுகுமுறையே பல உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையிலும் அவரைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லச் செய்கிறது," என்றார்.
உலகம் இந்த தேசத்தை திரும்பிப் பார்த்தது!
Subscribe

சாதனைகளால் இந்த தேசத்தையே பெருமைப்பட வைத்தது ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம். வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட செய்திட இயலாத அசாத்தியமான திட்டங்களை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது ISRO.
ISRO நிறுவனத்தின் தலைவர் திரு. ஏ.எஸ் கிரண்குமார் ISRO வின் சாதனைப் பயணத்தை விளக்கினார்.
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது பற்றியும் அதற்கு சரியான பெயர்சூட்டுவது பற்றியும் அந்தப் பெயரை பிரபலப்படுத்துவதைப் பற்றியும் (branding) பல சுவாரஸ்மான கருத்துக்களை அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
IIM அஹமதாபாதின் CIO, CIIE திரு. சஞ்சய் ஜெயின், DDB முத்ரா குழுமத்தின் தலைவர் திரு. மதுகர், தெர்மாக்ஸ் குழுமத்தின் MD மற்றும் CEO திரு. எம்.எஸ் உன்னிகிருஷ்ணன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் உரை இருந்தது.


சித்சக்தி தியானம்
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் வியாபாரம் செய்வதைப் பற்றி மிக ஆழமான கலந்துரையாடல் நிகழ்ந்தது. மாலையில் சம்ஸ்கிருதி குழந்தைகளின் இதயம் ஈர்க்கும் நடனமும், கண்களை சிமிட்டிடவும் மறந்திட வைக்கும் களரிப்பயட்டும் இருந்தது. பிறகு சத்குருவின் முன்னிலையில் தியானம் நிகழ்ந்தது.
நம் சித்தத்தில் உதிக்கும் ஆசைகளை நிதர்சனமாய் கொண்டு வர மனத்தின் சக்தியை உபயோகப்படுத்தி வெற்றிக்கனியை பறித்திடும் சக்திவாய்ந்த தியானத்தை பங்கேற்பாளர்களுக்கு அளித்தார் சத்குரு.
உலகை அலசிய பிறகு உள்முகமாய் ஒரு பயணம்! மிகவும் அற்புதமான அனுபவமாய் முடிந்தது இன்சைட் இரண்டாம் நாள்!