ஒரு தேவியின் பிறப்பு

லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது....


லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்! லிங்கபைரவி பிரதிஷ்டையில் உலகமெங்கும் இருந்து வந்திருந்த சுமார் 5,000 பேர் கலந்துகொண்டோம். 2010 ஜனவரி 28, வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு நாங்கள் தியானலிங்கக் கோவிலைச் சுற்றி போடப்பட்டிருந்த பனை ஓலை பந்தலில் அமர்ந்து பிரதிஷ்டை ஆரம்பிப்பதற்காக ஆவலாகக் காத்திருந்தோம். நாங்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்து சிவப்பு வஸ்திரத்தை கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தோம். அனைவரும் ஒரே மாதிரி உடையில் வெள்ளையும் சிகப்புமாக உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பதே ஓர் அற்புதக் காட்சியாக இருந்தது.

சிறிது நேரத்தில் சத்குரு சிகப்புக் கரை போட்ட வெள்ளை வேஷ்டி அணிந்து வந்தார். லிங்கபைரவி திருக்கோயிலுக்குள் நுழைந்த சத்குரு பிரதிஷ்டை செயல்களைத் துவக்கினார். கூடியிருந்த மக்களுக்கு உரை நிகழ்த்திக்கொண்டே திடநிலைக்கு மாற்றப்பட்ட பாதரசத்தை. வைத்து சில உருவங்கள் செய்தார்.

Her liquid mercury “spine” inserted, there was only a short wait until Sadhguru revealed her form – eyes first...

இரண்டாம் நாளில் தொடர்ந்து பிரதிஷ்டை செயல்முறைகள் நிகழ, நாங்கள் தேவியின் பிறப்பை நெருங்கிச் சென்றோம். தேவிக்கு முதுத்தண்டாக திடப்படுத்தப்பட்ட பாதரசத்தை சத்குரு நிறுவினார். பின்னர் நாங்களே எதிர்பார்க்காத நேரத்தில் சத்குரு, தேவியின் அருகில் சென்று தேவியை மூடியிருந்த திரையை மெல்ல விலக்கினார். முதலில் கண்கள் தெரிந்தன. பிரகாசம், தீட்சண்யம், துளைத்தெடுப்பதுபோன்ற பார்வை தேவியின் கண்களில்! ஆனால், கண்கள் தெரிந்தவுடனே, கூட்டத்தில் இருந்து சப்தம், கதறல், அழுகை. என்னாலும் கதறுவதை நிறுத்த முடியவில்லை. ஆனாலும் விரைவில் நிதானத்துக்கு வந்தேன். அவளுடைய கண்கள் முதலில் பயமுறுத்துவது போல் இருந்தன. ஏதோ கோபமாக போருக்குப் புறப்பட்ட வீராங்கனையின் கண்களைப்போல் இருந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அதே கண்களில் கருணை பொங்குவதையும் பார்க்க முடிந்தது. தேவியின் பிறப்பிற்கு பின் சத்குருவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது. கண்களில் பரவச கண்ணீர் பெருக சத்குரு வீட்டிற்குச் சென்ற காட்சி அற்புதம் என்றே சொல்ல வேண்டும்!

அதிகாலை சுமார் 3 மணி அளவில், கிரேன் உதவியால் லிங்கபைரவிக்கு மேல் இருந்த வெற்றிடத்தில் ஒரு பெரிய முக்கோணக் கருங்கல் (16 டன்) பொருத்தப்பட்டது. அப்போது பலர் உட்சாடணங்கள் செய்தபடியும், ஈஷா இசைக் குழுவினர், தாள இசை வாசித்தபடியும் இருந்தனர். அந்த இசையும் பாடல்களும் தாள அதிர்வுகளும் அந்த நேரத்தில் எங்களை சக்திநிலை குறையாமல் மேலும் உற்சாகமாக இருக்கவைத்தன. நான் அந்த நிகழ்வில் நூறு சதவிகிதம் முழுமையாக பங்கேற்க விரும்பினேன். இந்த நிகழ்வை குறைவான நபர்களுடன் ஒரு சிறியதொரு நிகழ்வாக நிகழ்த்துவதே தனக்கு எளிதாக இருக்குமென்றும், ஆனால், பலருக்கு இந்த அற்புத வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வைத் தான் மேற்கொள்வதாகவும் சத்குரு முன்பே கூறியிருந்தார். எனவே நான் அந்த பொறுப்புணர்ச்சியை உணர்ந்தபடி, சத்குருவிற்கு ஒரு கூடுதல் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்.

என் முன்னே எது வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதுதான்! என் பாவப்பட்ட மனம் அதனை புரிந்துகொள்ள முயற்சித்து கடைசியில் தோற்றுப்போனது, இறுதியில் சரணடைந்தது. பேரானந்தத்துடனும் பக்தியுடனும் வாழ்வது குறித்து சத்குரு சொன்னதை நினைவு கூறுகிறேன். வறண்டுபோன மேற்கத்திய வாழ்வியலை தழுவியதன் காரணமாக நமது பல கொண்டாட்டங்கள் இன்று மறைந்துவிட்டன.

இறுதியில் பிரதிஷ்டையின் கடைசி செயல்முறையாக தேவி ஊர்வலம் நிகழ்த்தப்பட்டது. தேவி பல்லக்கில் சங்கு ஒலி முழங்க... சலங்கை ஒலி அதிர... சகலப் பரிவாரங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டாள். தியானலிங்கத்தின் முன் உள்ள நந்தி முன்பு சத்குரு முன்னிலையில் நெருப்பு நடனம் ஆராதனையாக தேவிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆண்கள் தீப்பந்தம் ஏந்தி நடனமாடினர் மற்றும் பெண்கள் உச்ச ஸ்தாயியில் உட்சாடணம் செய்தனர். இவையனைத்தும் மிகவும் பிரமிப்பு தருவதாக இருந்தது. “சத்குரு தெய்வீக பெண்மையின் தன்மையை தேவியாக உருவாக்கியுள்ளார். பூமியை நம் தாயாக நினைப்பதற்கும் பெண்மையை கடவுளாக வணங்குவதற்கும் ஏது வித்தியாசம் இருக்கிறதா?” கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷாம்பவி, செய்து வரும் நான் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது, என் முன்னே எது வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதுதான்! என் பாவப்பட்ட மனம் அதனை புரிந்துகொள்ள முயற்சித்து கடைசியில் தோற்றுப்போனது, இறுதியில் சரணடைந்தது. பேரானந்தத்துடனும் பக்தியுடனும் வாழ்வது குறித்து சத்குரு சொன்னதை நினைவு கூறுகிறேன். வறண்டுபோன மேற்கத்திய வாழ்வியலை தழுவியதன் காரணமாக நமது பல கொண்டாட்டங்கள் இன்று மறைந்துவிட்டன.

அந்த மூன்று நாட்களும் எனது தர்க்க அறிவு குழந்தைத்தனமாக ஒவ்வொன்றுக்கும் விடை தேடி அது முடியாததால், நான் தர்க்கத்தை விட்டுவிட்டு அதில் முழுமையாக மூழ்கினேன். நான் இங்கே சொல்வதெல்லாம் நான் அங்கே பெற்றவற்றின் சில துளிகள் மட்டுமே! லிங்கபைரவியின் அருள் நம் அனைவரின் இதயத்தையும் ஆனந்தத்ததாலும் பக்தியாலும் நிரப்பட்டும்!

Happy Birth, Devi, to You!