மஹாசிவராத்திரி
ஈஷா யோக மையத்தில்
ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையை கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது.
இந்த இரவு முழுவதும் கண் விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆன்மநலனுக்கு மிக உகந்தது.
மஹாசிவராத்திரி கொண்டாட்டம்
- சத்குருவுடன் ஞானம் தியானம் ஆனந்தம்
- கோலாகலமான இசை நடன நிகழ்ச்சிகள்
- சவுன்ட்ஸ் ஆப் ஈஷா. இன்னும் பல கலைநிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன
- ஆதியோகியின் அருளில் திளைத்திட வாருங்கள்
பலன்கள்
மஹாசிவராத்திரிஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மஹாசிவராத்திரி மிக முக்கியமான இரவாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்களும் தம் வாழ்வில் வளர இந்நாள் பெரும் துணையாக இருக்கும்.
கோள்களின்
அமைப்புமஹாசிவராத்திரி இரவன்று இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி எழச் செய்கிறது.