யக்ஷா -பாரம்பரிய இசை நாட்டிய திருவிழா

ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 முதல் 10 வரை (மஹாசிவராத்திரிக்கு முன்பு)

கலைஞர்கள் தம் இசையை வெளிப்படுத்தவும், இசை ஆர்வலர்கள் நம் பாரம்பரியக் கலைகளின் நயத்தை ரசிக்கவும் ஒரு பொதுவான மேடையை நம் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகளின் தனித்துவம், தூய்மை, பன்முகத்து தன்மையை பாதுகாத்து அவற்றை வளரச் செய்யும் முயற்சி இவ்விழா. மிக நுட்பமாக, தீவிரமாக அதேநேரம் அழகுநயம் மிளிர இருக்கும் இந்நிகழ்ச்சிகள், நம் இந்திய கலாச்சாரத்தின் சாரத்தையும், ஆழத்தையும், விஸ்தாரத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் நம் கலைகளைப் பற்றி அறியவும், அதில் லயிக்கவும் இது வாய்ப்பாக இருக்கிறது.

நேரலையில் இணைந்திருங்கள்

நம் பாரம்பரிய கலை வடிவங்களில் பொதிந்துள்ள ஆழத்தையும், மென்மையையும், ரசித்து உணரும் வாய்ப்பாக அமைந்துள்ள யக்ஷா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

detail-seperator-icon

கலை நிகழ்ச்சிகள்

ஒவ்வொரு வருடமும் நம் கலாச்சாரத்தையும் பாரம்பரிய இசை நடன கலைகளையும் போற்றும் விதமாக 3-நாள் யக்ஷா திருவிழா நம் ஈஷா யோக மையத்தில் நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவ்வருட யக்ஷா திருவிழாவிற்கு ஈஷா யோக மையம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

 

மார்ச் 1

Kalapini Komkali

திருமதி. கலாபினி கொம்கலி

இந்துஸ்தானி இசைக் கச்சேரி

தற்கால தலைமுறையில் பாரம்பரிய இசைக்கலையில் கற்றுக் கைதேர்ந்த சிறந்த பாடகிகளில் ஒருவராக அறியப்படும் திருமதி கலாபினி அவர்கள், மிக வளமான, இனிமையான, தனித்துவமான குரல்வளம் பெற்றவர். புகழ்பெற்ற பண்டிதர் குமார் கந்தர்வா அவர்களின் மகளான இவர், நுணுக்கங்கள் பலவற்றை கையாளும் திறனையும், படைப்பாற்றலையும் மரபுவழியாகவே பெற்றிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். மரபு வழியாய் பெற்ற இஞ்ஞானத்தை தெளிவோடு கையாளும் அதேநேரம், தன் கற்பனைவளத்தையும் தொலைநோக்கையும் இயல்பாக இணைத்து, கடந்த 10 வருடங்களில் தனக்கென அழகான, ஆழமான ஒரு பாணியை இவர் உருவாக்கி இருக்கிறார். இளமைக்கே உரிய கற்பனையும், அழகுநயம் பெருகேற்றிய சிந்தனையும், பாரம்பரிய இசையில் அவருக்கு இருக்கும் பண்பட்ட ஆளுமையும் அவரது பாடல்களில் வெளிப்படுகிறது.

 

மார்ச் 2

Ranjani-Gayatri

திருமதி.ரஞ்சனி – திருமதி காயத்ரி

கர்நாடக இசைக் கச்சேரி

மேல்மட்ட மக்களுக்கே உரிய, எளிதில் புரியாத, சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்று, என்று பரவலாக அறியப்படும் கர்நாடக இசையை சுவாசமாக உள்வாங்கி ரத்தினங்களாய் ஜொலிக்கும் இந்த ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள், இசை ஆர்வலர்களை ஈர்ப்பது மட்டுமின்றி சாதாரண மக்களையும் தங்கள் இசையால் ஆனந்தத்தில் ஆழ்த்தி சிலிர்க்க வைக்கிறார்கள். தலைசிறந்த கர்நாடக இசைக் கலைஞர்களான இவர்கள், தங்கள் இசைப் பாரம்பரியத்தின் தனித்துவமான அழகைப் போற்றிப் பாதுகாக்கும் அதேநேரம், தங்கள் இசையில் புதுமையான நுணுக்கங்களையும் கையாள்கின்றனர். பல பிரசித்தி பெற்ற இடங்களிலும், பல உலக இசைத் திருவிழாக்களிலும் இவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ‘தி கென்னடி சென்டர்’, லண்டனில் உள்ள ‘சவுத்பாங்க் சென்டர்’, இத்தாலியின் ரவென்னா இசைத் திருவிழா, போலந்தின் வார்சாவில் நடைபெற்ற பன்னாட்டு கலாச்சாரத் திருவிழா, தாகாவில் நடைபெற்ற வங்காள இசைத் திருவிழா, சிங்கப்பூரின் ‘எஸ்ப்ளனாட் தியேட்டர்’ ஆகியவை இவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்ற இடங்களில் சில.

 

மார்ச் 3

யக்ஷா திருவிழாவின் கடைசி நாளன்று, நம் நாட்டின் பல்வேறு விதமான கலைகளை வெளிப்படுத்தும் விதமாக, பல கலைநிகழ்ச்சிகள் நாள்முழுவதும் நடைபெறவுள்ளன.
Leela-Samson

திருமதி.லீலா சாம்சன் மற்றும் ஸ்பந்தா டான்ஸ் கம்பெனி
“நதி – தி ரிவர்”

பரதநாட்டியக் கலைக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்பவர் திருமதி லீலா சாம்சன் அவர்கள். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவரது நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் அவர் தனியாகவும் நிகழ்ச்சிகள் வழங்குகிறார், ஸ்பந்தா டான்ஸ் கம்பெனியுடன் சேர்ந்து ஒரு குழுவாகவும் அவர் பணியாற்றுகிறார். 1982ல் சன்ஸ்கிருதி விருது, 1990ல் பத்மஸ்ரீ விருது, 1997ல் நிருத்திய சூடாமணி விருது, 2000ல் சங்கீத நாடக அகாதமி விருது, 2015ல் நாட்டிய கலா ஆசார்ய விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

கலை நிகழ்ச்சி ஈஷா சம்ஸ்கிருதி
கலை நிகழ்ச்சி ஃபகீரா கேட்டா கான் அவர்கள் மற்றும் குழு (ராஜஸ்தான் கிராமிய கலை)

“சேலை – ஒர் அனுபவம்”
108 விதங்களில் சேலை கட்டும் விதத்தை எடுத்துக்காட்டும் ஃபாஷன் ஷோ பாணியிலான அணிவகுப்பு மற்றும் சேலை கட்டுவதற்கான சிறப்பு பயிலரங்கத்தில் பங்குபெறுங்கள். “Saris: Tradition and Beyond” (சேலைகள்: பாரம்பரியமும் அதற்கு மேலும்) எனும் புத்தகத்தின் ஆசிரியர் திருமதி ரிடா கபூர் சிஷ்டி அவர்கள் இந்நிகழ்ச்சியை வழங்குகிறார்.

detail-seperator-icon

யக்ஷா 2021 – தங்களை வரவேற்கிறோம்

ஈஷா யோக மையம், கோவை
மாலை 6.30 – 8.30 (மாலை 6:20க்குள் யக்ஷா நடைபெறும் இடத்தில் அமரவும்)
மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்:
தொலைபேசி: 83000 83111 or மின்னஞ்சல்: info@mahashivarathri.org

detail-seperator-icon

சென்ற வருட கலைஞர்கள்

Vidushi Bombay Jayashri – Carnatic Vocal

Shri Ganesh and Shri Kumaresh – Carnatic Violin

Padmashri Geeta Chandran – Bharatanatyam

Padma Bhushan TV Sankaranarayanan – Carnatic Vocal

Ustad Sayeeduddin Dagar – Hindustani Vocal

Malladi Brothers – Carnatic Vocal

Rajan Mishra and Sajan Mishra – Hindustani Vocal

Rama Vaidyanathan – Bharatanatyam

Pandit Ajoy Chakrabarty – Hindustani Vocal

Mysore Brothers – Carnatic Violin

Padmashri Meenakshi Chitharanjan – Bharatanatyam

Bijayini Satpathy and Surupa Sen – Odissi

detail-seperator-icon