logo
logo

வீட்டில் மஹாசிவராத்திரி

மஹாசிவராத்திரி அன்று ஈஷா யோக மையத்திற்கு வர முடியாதவர்கள் அந்த இரவினை கீழ்க்கண்ட விதங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கண்விழித்து, விழிப்புடன், கிடைமட்டமாகப் படுக்காமல் இரவு முழுவதும் முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது சிறப்பான பலன் தரும்.

மேலும் உகந்த சூழ்நிலையை உருவாக்க உங்களது இடத்தில் சத்குருவின் படத்தினை வைத்து, விளக்கேற்றி, பூ வைத்து, ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.

பக்தி பாடல்கள் மற்றும் இசையினை நீங்கள் உச்சாடனம் செய்யலாம், பாடலாம் அல்லது கேட்கலாம்.

நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்றால், நடப்பது அல்லது இயற்கையுடன் இருப்பது நல்லது. குழுவாக இருந்தால், முடிந்தவரை மௌனத்தில் இருப்பது சிறந்தது.

நள்ளிரவு தியானத்தைக் கீழ்க்கண்ட முறையில் செய்ய முடியும்

இரவு 11:10 – 11:30 – நாடி சுத்தி

இரவு 11:30 – 11:50 – ஆஉம் உச்சாடனம்

இரவு 11:50 – 12:10 – "ஆஉம் நமஹ் சிவாய" உச்சாடனம்

நேரடி ஒளிப்பரப்பு அல்லது ஆன்லைன் மூலம் கொண்டாட்டங்களுடன் நீங்கள் இணைந்து வந்தால், அங்கு கொடுக்கப்படும் குறிப்புகளை நீங்கள் பின்பற்றலாம்.

நள்ளிரவு தியானம்

நள்ளிரவு வேளையில், சத்குரு மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த ஒரு தியானத்திற்கான தீட்சையை வழங்குவார். அந்த இரவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வு இது.

உங்களுடைய நேர மண்டலத்தின் படி, நள்ளிரவு வேளையில் ( நள்ளிரவுக்கு 20 நிமிடத்திற்கு முன்பு துவங்கவும்) நள்ளிரவு தியானத்தினை செய்ய வேண்டும் என்று சத்குரு கூறியுள்ளார்.

நேரலையை நீங்கள் இங்கு காண முடியும்.

ஒரு சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம்

ஒரு எளிய உச்சாடனம், தன்னையுணர்ந்த குருவின் முன்னிலையில், தன்னிலை மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த செயல்முறையாக மாறுகிறது. இந்த மஹாசிவராத்திரியில், சத்குரு வழிநடத்தும் இந்த தியானத்தில் நேரலை மூலம் எங்களுடன் இணையுங்கள்.