logo
logo

ஆதியோகி – சிவன் பக்தி பாடல்கள் & உச்சாடனைகள்

இலவச டவுன்லோடு (Sivan Songs Tamil mp3 Download)

Wallpapers
Songs
Greetings
Videos
E-Books

சிவனை நம்பாதே

‘சிவனை நம்பாதே’ என்ற இந்த பாடல் ஆதியோகி – சிவனைப் பற்றி சத்குரு எழுதிய கவிதையை தழுவி அமைக்கப்பட்டது.

ஆதிகுருவே – ஆதியோகி சிவனுக்கு ஒரு அர்ப்பணம்

ஒரு நூற்றாண்டிற்கு முன் இந்த இடத்தில் வாழ்ந்து வந்த மகத்தான யோகியான சத்குரு ஸ்ரீ பிரம்மாவின் பக்தியின் வெளிப்பாடாக அமைந்த இப்பாடல், அவரது குருவிடம் சரணடையும் அனுபவத்தை கூறுகிறது.

ஷிவ… ஷிவ…!

மஹாசிவராத்திரி கொண்டாட்ட மனநிலைக்குள் உங்களை ஆழ்த்தக்கூடியதாக இந்த பாடல் அமைகிறது. இதனை கேட்டு நீங்களும் உற்சாகத்தில் அசைந்தாடுங்கள்!

திரிகுண்

முப்பெரும் சக்திகள், மூன்று வித குணங்கள், முப்பெரும் தேவர்கள்! மேலோட்டமாக பார்க்கையில் மூன்றும் தனித்தனியானவைகளாக தோன்றலாம்! ஆனால், சற்று ஆழமாக செல்லும்போது, பாகுபாடற்ற ஒருமையை அங்கே நீங்கள் காண்பீர்கள். ஒருமைக்கும் மும்மைக்கும் இடையே உள்ள இடைவெளிக்கு பாலம் சமைத்தால், அங்கே மஹாதேவனை கண்டறியலாம்!

நிர்வாண ஷடகம்

ஆதிசங்கரரால் இயற்றப்பட்டுள்ள உச்சாடனங்களுள் மிகப் பிரசித்திபெற்ற ஒன்று நிர்வாண ஷடகம்! சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் பாடப்பட்ட இந்த உச்சாடனம், ஒரு ஆன்மீக சாதகரின் தேடலை உணர்த்துவதாய் அமைந்துள்ளது!

குருபாதுகா ஸ்தோத்திரம்

குருவின் பாதுகைகளின் மகிமையைப் போற்றிப் பாடப்பட்டுள்ள குருபாதுகா ஸ்தோத்திரம் எனும் இந்த மந்திர உச்சாடனம், குருவின் அருளை சிறப்பாய் கிரகிக்க துணைநிற்கிறது. குருவின் பாதுகைகள் பிறவிப்பெருங்கடல் நீந்தி கரைசேர்க்கும் படகுக்கு ஒப்பாக போற்றப்படுகிறது இந்த பாடலில்!

டமரு

ஆதியோகியாம் சிவன் பயன்படுத்திய வாத்திய கருவி, டமரு! தற்போது சப்தரிஷிகளாக கொண்டாடப்படும் ஏழு பேருக்கும் ஆதியோகி குரு பௌர்ணமி நாளன்று ஆதிகுருவாக அமர்ந்து யோக விஞ்ஞானத்தை முதன்முதலாய் வழங்கினார்.

சிவ ஷடகம்

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் மந்திர உச்சாடனை வரிசையில், ஆதிசங்கரரின் இந்த பாடலை ஈஷா இசையமைத்து வழங்கியுள்ளது! குரு பௌர்ணமி கொண்டாட்ட சத்சங்கத்தில் பிரம்மச்சாரிகளால் உச்சரிக்கப்பட்ட மூலப்பதிவு இது!

ஆம் நமஹ் சிவாய

விழிப்புணர்வுடன் இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்யும்போது, ஒருவரின் உள்நிலை மண்டலத்தை தூய்மைப்படுத்துவதோடு தியானத் தன்மையையும் கொண்டுவருகிறது. ஐந்து பூதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் பஞ்சாக்ஷர மந்திரமான ‘ஆம் நமஹ் சிவாய’ மஹாமந்திர உச்சாடனையாகும்.

ஷம்போ

சிவனின் மிக மென்மையான வடிவமாக ‘ஷம்போ’ உச்சாடனம் உள்ளது! சிவனின் உக்கிரமான தீவிரம் நிறைந்த வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு மென்மையான வடிவமாக, சிவனின் அழகிய வடிவமாக அமைகிறது. கட்டுப்பாடுகளை கடந்துசெல்வதற்கான ஒரு திறவுகோலாக இந்த உச்சாடனம் அமையும்!

தட்சிணாயனம்

தட்சிணாயன காலம் துவங்குவதை முன்னிட்டு சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவால் இந்த உச்சாடனம் இசையமைக்கப்பட்டுள்ளது. ஆதியோகியாக இருந்த சிவன் ஆதிகுருவாக மாறி, யோக விஞ்ஞானத்தை தனது சீடர்களுக்கு வழங்கியது இந்த தட்சிணாயன துவக்கத்தில்தான்!