logo
logo
தமிழ்
தமிழ்

தமிழ் தெம்பு
தமிழ் மண் திருவிழா

தேதி: பிப்ரவரி 19 (ஞாயிறு) முதல் 26 (ஞாயிறு) வரை

நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

ஈஷா யோக மையம், கோயம்புத்தூர்

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

தமிழ் மொழி, தமிழ் மண், தமிழ் மண்ணில் விளையும் விளைபொருள், அதைக்கொண்டு தமிழர்கள் சமைக்கும் தனித்துவமான உணவு பதார்த்தங்கள், என்று தமிழர் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்களைக் கொண்டாடும் திருவிழா. மஹாசிவராத்திரியைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நிகழும் இந்த கலாச்சாரக் கொண்டாட்டம், நம் பண்பாட்டிலேயே பொதிந்துள்ள ஆன்மீக அம்சங்களைக் கொண்டாட்டமாகப் புதுப்பிக்க விழைகிறது. ஆதியோகியின் முன்பு நிகழவிருக்கும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பாரம்பரிய உணவு பதார்த்தங்கள்

தமிழர்கள் பாரம்பரியத்தில் உருவாக்கியுள்ள சுவையான சத்தான பாரம்பரிய உணவு பதார்த்தங்களை இங்கே வாங்கி சுவைத்து மகிழலாம். கம்பு கூழ், பதனீர், ஜவ் மிட்டாய், கோலி சோடா, பஞ்சுமிட்டாய், மணப்பாறை முருக்கு போன்றவை இங்கு கிடைக்கும்.

மதுரை சுங்குடி சேலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போன்ற பாரம்பரிய பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படும்.

காய்கறி சந்தை

அருகிலுள்ள கிராமங்களில் உழவர்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், கனிகள், தேன், வெல்லம், பூக்கள் ஆகியவற்றை இங்கே வாங்கலாம்.

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்

பறையாட்டம், ஒயிலாட்டாம், சலங்கையாட்டம் போன்ற பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

நாட்டுமாடுகள் கண்காட்சி

பலவகை நாட்டு மாடுகளும், தொன்றுதொட்டு நம் கலாச்சாரத்தில் அவை பயன்படுத்தப்பட்ட விதத்தைக் காட்டும் செக்கு, ஏறு, மாட்டுவண்டி ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.

தேவாரம்

சம்ஸ்கிருதி மாணவர்கள் தினமும் தேவாரப் பாடல்கள் பாடுவார்கள். 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் தேவாரம் பாடி சிறப்புப் பரிசுகளைப் பெறமுடியும்.

சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி

சித்தர்கள் தந்த நம் தமிழ் மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். சித்த மருத்துவ உணவு அறிவியலைப் பற்றியும் சித்த மருந்துகளைப் பற்றியும் அறிந்து, உடல், மன ஆரோக்கியத்தை பற்றிய உங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம்.

கபடி விளையாட்டு

பிப்ரவரி 24, 25 & 26 தேதிகளில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கபடி போட்டிகள் நடைபெறும். தமிழ்நாடு கபடி சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த போட்டிகளைக் கண்டுகளிக்க அனைவரையும் வரவேற்கிறோம்.

நாயன்மார்களின் கதைகள்

காலங்காலமாகவே, சிவனுக்கும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

அதனால் தான், 

"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று சொன்னார்கள்.

இப்படி சிவனை பக்தி எனும் மொழியால் கட்டிப்போட்டவர்கள் தான் நாயன்மார்கள்...

இவர்களுடைய பக்தி, 

சாதி, மதம், வயது, ஆண் பெண் பேதம், செய்யும் தொழில்,  ஏழை பணக்காரன் என்று எந்த வேறுபாடும் இல்லாத ஒரு தூய்மையான பக்தி... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு ஆழமான பக்தி... சிவனையே பாடல்களால் பணிய வைக்கிற பக்தி, சிவனுடைய கைபிடித்து, அவனருளால் முக்தியை அடைந்த ஒரு வீரமான பக்தி...

இவர்களுடைய கதை, வெறும் கதை மட்டுமல்ல… ஒரு ஆன்மிக பக்திப்புரட்சி. நாயன்மார்களின் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களை நாம் கதைகளாகக் கேட்டு அதைத்தழுவிய தேவாரப் பாடல்களையும் கேட்டு மகிழலாம். 

தினமும் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவாரப்பாடல், கிராமிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் களரிபயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

கைலாச வாத்தியம்

பஞ்ச வாத்தியம் எனப்படும் கைலாச வாத்தியம், சிவ வாத்தியம் என்றும் அழைக்கப்படும். ஐந்து வித வாத்தியக் கருவிகளால் பூதகணங்களால் சிவபெருமானுக்கு மட்டும் இது வாசிக்கப்படும்.

ஆதியோகி திவ்ய தரிசனம்

மனிதகுலத்திற்கு ஆதியோகி வழங்கியுள்ள பங்களிப்பை சித்தரிக்கும் வகையில் நிகழும் பிரமிக்க வைக்கும் வீடியோ இமேஜிங் காட்சி. நேரம்: மாலை 7:20 மணி

ஆதியோகி மஹா ஆரத்தி

ஆதியோகி முன்பு அமைந்துள்ள யோகேஷ்வர லிங்கத்தின் முன் மஹா ஆரத்தி நடைபெறும்.

விழாவில் பங்குபெறுவோர் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்படும்.