logo
logo

2023 கலைஞர்களின் நிகழ்ச்சிகள்

எல்லாராலும் கொண்டாடப்படும் கலைஞர்கள் வழங்கும் இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மஹாசிவராத்தின் இரவு முழுவதும் உங்களை விழிப்பாகவும் உற்சாகத்துடிப்புடனும் வைத்திருக்கும், இதனால் இந்த புனிதமிக்க இரவு வழங்கும் சாத்தியங்களிலிருந்து நீங்கள் மகத்தான பலன்களைப் பெற முடியும்

அனன்யா சக்ரபொர்ட்டி

கொல்கத்தாவைச் சேர்ந்த, திறமை மிக்க கலைஞரான அனன்யா சக்ரபொர்ட்டி அவர்கள், 2021ம் ஆண்டு “Sa Re Ga Ma Pa” என்ற ரியாலிட்டி ஷோவின் போது தனது இசைத் திறமையால் புகழ் பெற்றார். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகியுமான இவரது பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிப் பாடல்கள் நாடு முழுவதும் பெரும் அபிமானத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

நிலாத்ரி குமார்

பண்டிட் நிலாத்ரி குமார் அவர்கள் உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக்கலைஞர் ஆவார். ஒரு தனிநபராக இசை நிகழ்ச்சியை வழங்கும் மேவரிக் இசைக்கலைஞரான இவர், இந்திய பாரம்பரிய இசையில் மேதையாவார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை சிதார் இசைக்கலைஞரான இவர், தனது ஆறாவது வயதில் முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார். இசையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள நிலாத்ரி குமார் அவர்கள், இந்தியர்களுக்குப் பிரியமான இசைக்கருவியான சிதாரை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களிடையே மேலும் பிரபலப்படுத்தினார். சிதாரில் பாரம்பரிய பாணிகள் குறித்த அவரது ஆர்வம் மற்றும் ஆழமான புரிதலின் விளைவாக, அவரே சொந்தமாக உருவாக்கியுள்ள ஜிதார் (Zitar) இசைக் கருவியில் பிரமாதமான இசைக் கோர்ப்புகள் வெளிப்பட்டுள்ளன.

வேல்முருகன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுப்புற இசைப் பாடகரான வேல்முருகன் அவர்கள், 5000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும், நாடோடிகள் திரைப்படத்தில் “ஆடுங்கடா”, சுப்பிரமணியபுரம் படத்தில் “மதுர குலுங்க” மற்றும் ஆடுகளத்தில் “ஒத்த சொல்லால” போன்ற மிகவும் பிரபலமான பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர். இந்தியக் குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட நாட்டுப்புற நாயகன் விருது மற்றும் சிறந்த பின்னணிப் பாடகர் விருது உட்பட பல விருதுகளை திரு.வேல்முருகன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

மாமே கான்

ராஜஸ்தானி நாட்டுப்புற இசையின் நட்சத்திரப் பாடகரான மாமே கான் அவர்கள், புகழ்பெற்ற நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கேன்ஸ் திரைப்பட விழா உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராஜஸ்தானி நாட்டுப்புற இசையை எடுத்துச் சென்ற பெருமைக்குரிய இவர், பன்முகத் திறமைகொண்ட உத்வேகமிக்க ஒரு பாடகர் ஆவார். மாமே கான் தனது பின்னணி பாடலுக்காக பல விருதுகளை வென்றுள்ளார், மேலும், கடந்த 20 ஆண்டுகளில் பல பிரபலமான ஹிந்தி திரைப்படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளதன் மூலமும், மதிப்புமிக்க இசை விழாக்களில் பாடியதன் மூலமும் எண்ணற்ற ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

ராம் மிரியலா

சௌராஸ்தா ராம் என்றும் அழைக்கப்படும் ராம் மிரியலா அவர்கள் ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் மயக்கும் புல்லாங்குழல் இசைக் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர்! அவரது மனதைக் கவரும் "மாட்டி" எனும் பாடல், Conscious Planet - Save Soil பிரச்சாத்தில் பல லட்சக் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டது.

மாங்லி

ஒரு இந்திய பாடகியும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மாங்லி அவர்கள், 2013ல் முதன் முதலாக அறிமுகமானதிலிருந்தே அவரது பாடல்கள், குறிப்பாக தெலுங்கில், பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது. YouTubeல் லட்சக் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள விழாக்களில் பெரிதும் எதிர்பார்கப்படும் ஒரு கலைஞராகத் திகழ்கிறார்.

குட்லே கான்

குட்லே கான் புராஜெக்ட் என்பது, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இசை உலகிற்கான கான் அவர்களின் பயணமாகும்; உலகெங்கிலும் உள்ள பல்வேறு இசை பாணிகளின் சாரத்துடன் ராஜஸ்தானின் வலிமையான நாட்டுப்புற இசையுணர்வை புதுமையுடன் வழங்கும் இவர், GIMA விருது, 2015 மற்றும் 2019ல் சிறந்த நாட்டுப்புற பாடகருக்கான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

முன்பு இடம்பெற்ற நிகழ்ச்சிகள்