வீடியோ

 • Kashiyin ragasiyam

  காசி – உண்மையைத் தேடி

  பாகம் 1ல், காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். இந்த பாகத்தில், சத்குரு, காசியின் இதர சிறப்புகள் பற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார். சத்குரு அவர்களின் இந்த விளக்கங்களை கேட்பவர்களுக்கு – ஏற்கனவே காசியை சுற்றிப் பார்த்திருந்தாலும் – இன்னொரு முறை காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படும்.

  இந்த வீடியோவிலிருந்து உதாரணத்திற்கு சில கேள்விகள்:

  1. எப்படி கங்கை நீருக்கு சக்தி வந்தது? சாதாரண நீரை தீர்த்தமாக்குவது சாத்தியமா?
  2. நதிகள் சங்கமத்தின் முக்கியத்துவம் என்ன?
  3. காசியில் ஒருவர் மரணமடைகிறபோது என்ன நடக்கிறது?
  4. ஏன் அனைவரும் காசியில் உடல்விட விரும்புகிறார்கள்?
  5. காசியில் ஏன் மரண சடங்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம்?
  6. காலபைரவர் வழிபாட்டின் அடிப்படை என்ன? காலபைரவர் சிவனின் அம்சமா?
  7. பைரவி யாத்னா முக்கியத்துவம் என்ன?
  8. அகோரிகள் பற்றி சொல்லுங்களேன்…

 • Imayathin-Ragasiyam-ebook-cover-940x528

  இமயத்தின் ரகசியங்கள்

  சாதுக்கள், ஆன்மீகத் தேடல் உள்ளோர் ஏன் இமயமலையைத் தேட வேண்டும்? அப்படி அங்கு என்னதான் இருக்கிறது?

  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யோகிகள் செய்துவரும் ஆன்ம சாதனைகளால், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட பல ரகசியங்களை இமயம் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அத்துடன் இன்றி, நடுங்கும் குளிரிலும் உடலில் ஆடை இல்லாது நடந்து செல்லும் சாதுக்கள் ஓர் அதிசயம், குப்தகாசி/கேதாரம் போன்ற மலை முகடுகளில் பொதிந்துள்ள மறைஞானம் ஓர் அதிசயம், இமயத்திற்கும் ஈஷாவிற்குமான பூர்வஜென்மத் தொடர்புகள் ஆர் அதிசயம்… இப்படித் தொடரும் பல ரகசியங்களுக்கான விடைகளை சத்குரு இப்புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார்.

  இமயத்தின் மீது தீராக்காதல் கொண்ட சத்குருவுடன் இப்புத்தகம் வாயிலாக பயணம் செய்யும் அனுபவம் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இமயத்தின் ஆழத்தை உணரச் செய்யும் இப்புத்தகம், அதன் அழகை வெறுமனே கண்டு ரசித்து எழுதிய பதிவுகள் அல்ல, ஆழம் வரை உணர்ந்து இமயத்தின் அதிர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஞானப்பெட்டகம்!