logo
logo

யக்க்ஷா - பாரம்பரிய இசை நாட்டிய திருவிழா 2023
பிப்ரவரி 15, 16 & 17

உலக பிரசித்திப் பெற்ற கலைஞர்கள் வழங்கும் பாரம்பரிய இசை மற்றும் நாட்டியத்திற்கான ஒரு உற்சாக திருவிழா.

யக்க்ஷா

ஆயிரக்கணக்கான வருடங்களாக பரிணமித்து வந்துள்ள இந்தியாவின் பற்பல கலை வடிவங்கள் அனைத்தும் இந்த நிலத்தின் பல்வேறு கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக இருப்பதோடு, , ஆன்மீக கலாச்சாரத்தின் மூலமாகவும் இருக்கின்றன.


இந்த கலைவடிவங்கள் இந்த நாட்டினை தலைமுறை தலைமுறையாக வளப்படுத்தின. ஆனாலும் நம் வாழ்க்கையில் நாம் வெகுவாக மறந்து கொண்டிருக்கும் ஒரு பரிமாணமாக இவை ஆகிவருகின்றன. நம் நாட்டின் கலை நிகழ்ச்சிகளின் தனித்தன்மை, புனிதம் மற்றும் பன்முகத்தன்மையை பேணிப்பாதுகாப்பதற்கும் அவற்றினை வளர்ப்பதற்குமான ஒரு முயற்சியாக ஈஷா அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் யக்க்ஷா நிகழ்ச்சியினை வழங்குகிறது. இது பிரசித்தி பெற்ற கலைஞர்கள் கலந்துக்கொண்டு வழங்கும் கலை, இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழா.

இந்தியப் புராணங்களில் வரும் விண்ணுலக உயிர்களின் பெயரைக்கொண்ட இந்த யக்க்ஷா திருவிழா, மாபெரும் கலைஞர்கள் தங்களது நிகழ்ச்சிகளை வழங்குவதற்கும், இந்த பழமையான கலைகளை விமர்சகர்கள் பராட்டுவதற்கான மேடையை வழங்குகிறது.

2023 நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள்

நாள் 1 - பிப்ரவரி 15

ஜெயதீர்த் மேவுண்டி

ஹிந்துஸ்தானி பாரம்பரிய குரலிசை

இந்துஸ்தானி பாரம்பரிய இசைப் பாடகரான ஜெயதீர்த் மேவுண்டி அவர்கள், பிப்ரவரி 15 அன்று கோவை ஈஷா யோக மையத்தில், பாரம்பரிய இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழாவான யக்ஷாவின் முதல் நாள் நிகழ்ச்சியை வழங்குகிறார்.

நாள் 2 - பிப்ரவரி 16

ஷஷாங்க் சுப்பிரமணியம்

கர்நாடக புல்லாங்குழல் இசை

ஈஷா அறக்கட்டளையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் மூன்று நாள் திருவிழாவான யக்ஷாவில், இரண்டாம் நாளான பிப்ரவரி 16 அன்று, கர்நாடக இசையில் புல்லாங்குழல் கலைஞரான ஷஷாங்க் சுப்பிரமணியம் அவர்களின் குழலிசையைக் கேளுங்கள்.

Live Today @ 7 pm

நாள் 3 - பிப்ரவரி 17

மாதவி முத்கல் நடனக்குழு

ஒடிசி

ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் மூன்று நாள் திருவிழாவான யக்ஷாவின் இறுதி நாளில், கோவை ஈஷா யோக மையத்தில் மாதவி முத்கல் குழுவினரின் ஒடிசி நடனத்தை நேரலையில் காணுங்கள்.

முன்பு இடம்பெற்ற நிகழ்வுகள்

Partners

Elite Partner

Prime Partner

Co-Partners

Support Partners