logo
logo

வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது?

இந்தியாவில், வில்வம் அல்லது பில்வ இலைகளைப் பற்றி புராணக்கதைகள் உள்ளன. புகழ்பெற்ற பில்வாஷ்டகம் எனும் சிவஸ்தோத்ரம் வில்வ இலையின் நற்பண்புகளையும், அது சிவபெருமானின் விருப்பத்திற்கு உகந்ததாக இருப்பதாகவும் விவரிக்கிறது.

வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது?


இந்தியாவில், வில்வம் அல்லது பில்வ இலைகளைப் பற்றி புராணக்கதைகள் உள்ளன. புகழ்பெற்ற பில்வாஷ்டகம் எனும் சிவஸ்தோத்ரம் வில்வ இலையின் நற்பண்புகளையும், அது சிவபெருமானின் விருப்பத்திற்கு உகந்ததாக இருப்பதாகவும் விவரிக்கிறது. வில்வத்திற்கு இத்தனை மதிப்பு ஏன்?

பொதுவாக நாம் அறிந்த வகையில், இந்த மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக புனிதமானதாக போற்றப்படுகிறது என்பதையும், சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் மலர்களாக மட்டுமல்லாமல், வில்வ இலைகள் இல்லாமல் பூஜை முழுமை அடையாது என்பதையும் நாம் அறிகிறோம்.

இந்த இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளன: ட்ரைஃபோலியேட் இலைகள் அல்லது திரிபத்ரா இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது - படைத்தல், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூவரின் தொழில்களையும், சத்வா, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்கள் அல்லது A-U-M என்ற மூன்று எழுத்துக்கள் சிவனின் சாரத்தை எதிரொலிக்கும் ஆதிகால ஒலி. மூன்று இலைகளும் மகாதேவனாகிய சிவனின் மூன்று கண்கள், அவர் ஏந்தும் ஆயுதமான திரிசூலத்தைக் குறிப்பதாக கருதப்படுகின்றன.
புராணத்தில் கூறப்பட்டவை அவ்வளவுதான். ஆனால் வாழ்க்கைக்கு, வில்வம் எவ்வாறு இவ்வளவு புனிதமாக கருதப்படுகிறது? சத்குரு இதற்கு பதில் அளிக்கிறார்.

சத்குரு: இந்த ஒரு இலை மற்றவற்றை விட ஏன் புனிதமானது? இது ஒருவித பாரபட்சமா? எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்தும் மண்ணிலிருந்துதான் வருகிறது. வேப்பம்பழம், மாம்பழம் இரண்டும் ஒரே மண்ணிலிருந்து வந்தவை, ஆனால் அவை வெவ்வேறு விதமாக ருசிக்கின்றன, இல்லையா? ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையை கொண்ட தாவரம் அதே மண்ணை தனக்கு ஏற்றவாறு செயலாக்குகிறது, மற்றொரு உயிர் அதே மண்ணை எவ்வாறு செயலாக்குகிறது என்பது வேறுபட்டது. ஒரு புழுவுக்கும், பூச்சிக்கும் உங்களுக்கும் இன்னொரு மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? இது எல்லாமே ஒரே மாதிரியானவை, ஆனால் இன்னும் நாம் அதை உருவாக்கும் விதம் வேறுபட்டது.

மக்கள் ஆன்மீகப் பாதையில் செல்லும்போது, சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் அவர்கள் தொடர்ந்து ஆதரவைத் தேடுகிறார்கள், ஏனெனில் இது அறியப்படாத வழியாகும். இந்திய கலாச்சாரத்தில் பூக்கள், பழங்கள், இலைகள்கூட விடவில்லை. குறிப்பாக, உங்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூர்மையான கவனிக்கும் திறனின் மூலமும் தியானத்தின் மூலமும் அடையாளம் கண்டனர். வில்வம் புனிதமானதாக கருதப்படுவது ஏன்? வில்வம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்று எப்போதும் கூறப்படுகிறது. அவருக்கு இதன் மீது என்ன பிரியம்? இது சிவனுக்கு பிரியமானது என்று அல்ல. இது சிவனுக்கு பிரியமானது என்று நாம் கூறும்போது, ஒருவிதத்தில் அதன் அதிர்வுகள் சிவன் என்று நாம் குறிப்பிடுவதற்கு மிக நெருக்கமாக உள்ளது என்று சொல்கிறோம்.

இதுபோன்ற பல பொருட்களை நாம் அடையாளம் கண்டிருக்க¤றோம். அவைகள் மட்டுமே அர்ப்பணிக்கப் படுகின்றன, ஏனெனில் நீங்கள் தொடர்பில் இருக்க அவை உறுதுணையாய் இருக்க¤ன்றன. நீங்கள் சிவனுக்கு வில்வ இலையை அர்ப்பணம் செய்யும்போது, அந்த இலை ஒருவிதமான அதிர்வை தக்க வைத்துக்கொள்கிறது. இந்த குறிப்பிட்ட இலை அந்த அதிர்வலையை உறிஞ்சுவதற்கான மிக உயர்ந்த திறனைக் கொண்டிருப்பதால், அது அர்ப்பணிக்கப்பட்ட பிறகு அதை உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும். நீங்கள் அதை சிவலிங்கத்தின் மீது வைத்து அதை எடுத்துக்கொண்டால், அது நீண்டகாலத்திற்கு அதிர்வொலியைத் தக்கவைக்கும் திறனைக் கொண்டுள்ளது. அது உங்களுடன் இருக்கும். நீங்கள் இதை முயற்சி செய்யலாம்: வில்வ இலையை அர்ப்பணித்து பிறகு, அதை உங்கள் மார்பருகே உள்ள பாக்கெட்டில் வைத்து சுற்றி நடக்கவும், இது உங்கள் உடல்நலம், நல்வாழ்வு, மனநிலை - எல்லாவற்றையும் பொறுத்தவரை ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற பல பொருட்கள், மக்கள் பயன்படுத்த அடையாளம் காணப்பட்ட புனிதமான கருவிகளாக உள்ளன. இது தெய்வங்களைப் பற்றியது அல்ல, இது உங்களைப் பற்றியும், நீங்கள் திறந்தநிலையில் இருப்பதைப் பற்றிய ஒரு விஷயம்.

    Share

Related Tags

மறைஞானம்

Get latest blogs on Shiva

Related Content

7 விஷயங்கள் – இந்த மஹாசிவராத்திரியில் செய்ய தவறாதீர்கள்!