“யோகக் கலாச்சாரத்தில், சிவன் கடவுளாக வழிபடப்படவில்லை. ஒரு குருவாகத்தான் வழிபடப்படுகிறார். நாம் சிவா என்று குறிப்பிடும் ஒன்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. நீங்கள் எவர் ஒருவருக்கும் குறிப்பிடுகிற குணங்கள் எல்லாமே சிவனுக்கும் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவா என்று நாம் சொல்லும்போது, அவர் இது போன்றவர், அது போன்றவர் என்றெல்லாம் சொல்வதில்லை” என்கிறார் சத்குரு.
பொதுவாக, அறநெறி சார்ந்த கலாச்சாரத்தில், தெய்வீகத்தன்மை என்பது எப்போதும் நல்லாதாகவே உணரப்படும். ஆனால் சிவனை நீங்கள் பார்த்தால் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவுக்கு வந்துவிட முடியாது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அவரிடம் ஒரு அங்கமாக இருக்கும். அவர் அப்படித்தான் இந்தக் கலாச்சாரத்தில் விவரிக்கப்பட்டு இருக்கிறார்.
சிவனின் 108 பெயர்களின் பிறப்பிடம்
சத்குரு மேலும் சொல்கிறார்,” அவருக்கு எண்ணிலடங்கா வடிவங்களும், வெளிப்பாடுகளும் இருந்தாலும், அடிப்படையில் ஏழு பிரிவுகளில் அவரை வகைப்படுத்தலாம். தொலைதூரத்தில் இருக்கும் கடவுள் தன்மையாக இருப்பதை நாம் ஈஸ்வரா என்கிறோம். கருணைமிகுந்த கடவுளாக இருப்பதை ஷம்போ என்கிறோம். எந்தச் சிக்கலும் இல்லாத துறவியாகவோ அல்லது “போ”வாகவோ, எளிமையான அன்பு நிறைந்த சம்பலேஸ்வரா அல்லது போலா என்கிறோம். வேதங்களின் நல்ல ஆசிரியராக இருக்கும்போது தக்ஷிணாமூர்த்தி என்கிறோம். அனைத்து கலைகளின் ஊற்றாக இருக்கும்போது நடேசன் என்கிறோம், பொல்லாதவர்களை கடுமையாக அழிக்கும்போது, காலபைரவர் அல்லது மஹாகாலா என்கிறோம். காதலோடு மயக்கும்போது, நிலவை விட அழகானவர் என்னும் பொருளில் சோமசுந்தரர் என்று நாம் அழைக்கிறோம். அடிப்படையான ஏழு வடிவங்களை வைத்து பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடுகளை நாம் வருவிக்க முடியும்.
யோகக் கலாச்சாரத்தில், அகண்ட இந்த ஏழு பிரிவுகளின் கீழ் 1008 பெயர்கள் சிவனுக்கு உள்ளது. இந்த 1008 பெயர்களில், 108 பெயர்கள் அதிகமாக அறியப்பட்டு உள்ளது.