logo
logo
The Story of Shiva’s Third Eye and Its Hidden Symbolism

சிவனின் மூன்றாவது கண் மற்றும் அதன் மறைக்கப்பட்ட குறியீட்டின் கதை

சிவனின் மூன்றாவது கண்ணின் அடையாளத்தையும், மூன்றாவது கண் திறக்கும்போது தெளிவும் உணர்வும் எவ்வாறு எழுகிறது என்பதையும் சத்குரு இங்கு விளக்குகிறார். மேலும் சிவன் தனது மூன்றாவது கண்ணால் காம தேவனை எரித்தது எப்படி என்பது தொடர்பான கதையையும் அவர் விவரிக்கிறார்.

சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தபோது


சிவன் தனது மூன்றாவது கண்ணை எவ்வாறு திறந்தார் என்பது பற்றி ஒரு கதை உள்ளது. இந்தியாவில், காமதேவன் என்ற காதல் மற்றும் காமத்தின் கடவுள் இருக்கிறார். காமா என்றால் காமம். காமம் என்பது பெரும்பாலான மக்கள் நேருக்கு நேர் விரும்பாத ஒன்று. உங்களுக்கு அதைச் சுற்றி சில அழகியல் வேண்டும், எனவே நீங்கள் அதை காதல் என்று சொல்கிறீர்கள்! காம தேவன் மரத்தின் பின்னால் ஒளிந்து சிவனின் இதயத்தில் அம்பு எய்ததாக கதை செல்கிறது. சிவன் சிறிது தடுமாறினான். அதனால் அவர் தனது மூன்றாவது கண்ணை, அது ஒரு தீப்பிழம்பான கண், காம தேவனை எரித்து சாம்பலாக்கினார். இது பொதுவாக அனைவருக்கும் சொல்லப்படும் கதை.

ஆனால் தயவுசெய்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், உங்கள் காமம் எங்கு எழுகிறது, உங்களுக்குள்ளா அல்லது ஒரு மரத்தின் பின்னாலா? அது நிச்சயமாக உங்களுக்குள் எழுகிறது. காமம் என்பது எதிர் பாலினத்தைச் சேர்ந்தது மட்டுமல்ல. ஒவ்வொரு ஆசையும் காமம், அது பாலியல், அதிகாரம் அல்லது பதவிக்காக இருந்தாலும். காமம் என்பது உங்களுக்குள் முழுமையடையாத ஒரு உணர்வு உள்ளது என்பதை குறிக்கிறது, அதாவது "என்னிடம் அது இல்லையென்றால், நான் முழுமை அடையவில்லை" என்ற உணர்வை ஏற்படுத்தும் ஒரு ஏக்கம்.

சிவனின் மூன்றாவது கண்: யோக பரிமாணம்

இதன் அடிப்படையில், சிவன் மற்றும் காம தேவனின் கதையில் ஒரு யோக பரிமாணம் உள்ளது. சிவன் யோகாவை குறித்து பணி செய்து செய்து கொண்டிருந்தார், அதாவது அவர் முழுமையடைவதை நோக்கி மட்டுமல்ல, எல்லையற்றவராக இருப்பதற்காகவும் உழைத்தார். சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து, தனது சொந்த காமம் மேலோங்கி வருவதை கண்டு அதை எரித்தார். உள்ளே உள்ள அனைத்தும் நல்ல விதமாக அடங்கிப் போனதைக் காட்டும் விதமாக. சாம்பல் மெதுவாக அவரது உடலில் இருந்து வெளியேறியது. மூன்றாவது கண்ணைத் திறப்பதன் மூலம், அவர் தன்னுள் உடலுக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணத்தை உணர்ந்தார், அவருடைய உடல் சார்ந்த அனைத்து நிர்பந்தங்களும் நீங்கியது.

சிவனின் மூன்றாவது கண் என்பது என்ன?

மூன்றாவது கண் என்பது உடல் அல்லாதவற்றைக் காணக்கூடிய ஒரு கண்ணைக் குறிக்கிறது. உங்கள் கையைப் பார்த்தால், அது ஒளியை நிறுத்திப் பிரதிபலிக்கும் என்பதால் அதைப் பார்க்க முடியும். ஒளியை நிறுத்தாததால் காற்றை பார்க்க முடியாது. ஆனால் காற்றில் சிறிது புகை இருந்தால், நீங்கள் அதைப் பார்க்க முடியும், ஏனென்றால் ஒளி நிறுத்துவதை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். ஒளியை கடக்க அனுமதிக்கும் எதையும் நீங்கள் பார்க்க முடியாது. இது புலன் சார்ந்த இரு கண்களின் இயல்பு.

புலன் சார்ந்த கண்களால், உடல் ரீதியாக இருப்பதை கிரகிக்க முடியும். பொருள் நிலையில் இல்லாத ஒன்றை நீங்கள் பார்க்க விரும்பும் போது, ​​அதற்கு ஒரே வழி உள்நோக்கி பார்ப்பது. நாம் "மூன்றாவது கண்" என்று குறிப்பிடும் போது, ​​இரு புலன் சார்ந்த கண்களால் பார்க்க முடியாத ஒன்றைப் பார்ப்பதைப் பற்றி குறியீடாகப் பேசுகிறோம்.

புலன் சார்ந்த கண்கள் வெளிப்புற நோக்குடையவை. மூன்றாவது கண் உங்கள் உட்புறத்தைப் பார்ப்பது - உங்கள் இயல்பு மற்றும் உங்கள் இருப்பு. இது உங்கள் நெற்றியில் கூடுதல் இணைப்பு அல்லது விரிசல் அல்ல. உடலுக்கு அப்பாற்பட்டதை உணரக்கூடிய அந்த உணர்வின் பரிமாணம் தான் மூன்றாவது கண் என்று குறிப்பிடப்படுகிறது.

மூன்றாம் கண் மூலம் வாழ்க்கையைப் பார்ப்பது

மற்றொரு அம்சம் என்னவென்றால், புலன் சார்ந்த கண்கள் கர்மாவால் ஆழமாக மாசுபட்டுள்ளன. கர்மா என்றால் கடந்த கால செயல்களின் எஞ்சிய நினைவகம். நீங்கள் பார்க்கும் அனைத்தும் இந்த கர்ம நினைவகத்தால் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் அதைத் தடுக்க முடியாது. நீங்கள் ஒருவரைப் பார்த்தால், "அவர் நல்லவர், அவர் நல்லவர் அல்ல, அவர் பக்குவமானவர், அவர் பக்குவமற்றவர்" என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் எதையும் அது இருக்கும் விதத்திலேயே பார்க்க முடியாது ஏனெனில் உங்கள் கர்ம நினைவுகள் உங்கள் பார்வை, நீங்கள் பார்க்கும் விதம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது உங்கள் கர்மா எப்படி அமைந்திருக்கிறதோ அப்படித்தான் அதை பிரதிபலிக்கும், உங்கள் கடந்த கால நினைவுகள் எப்படி உள்ளதோ அதையே காட்டும்.

எல்லாவற்றையும் அப்படியே பார்க்க, ஆழ்ந்த ஊடுருவல் கொண்ட ஒரு கண் - இது நினைவுகளால் பாதிக்கப்படாதது - திறக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக இந்தியாவில், தெரிந்து கொள்வது என்பது புத்தகங்களைப் படிப்பது, ஒருவரின் பேச்சைக் கேட்பது அல்லது தகவல்களைச் சேகரிப்பது என்று அர்த்தமல்ல. தெரிந்து கொள்வது என்பது வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய பார்வை அல்லது நுண்ணறிவைத் திறப்பதாகும். எந்த அளவிலான சிந்தனையும் தத்துவமும் உங்கள் மனதில் தெளிவைக் கொண்டுவர முடியாது. நீங்கள் உருவாக்கும் தர்க்கரீதியான தெளிவு எளிதில் சிதைக்கப்படலாம். கடினமான சூழ்நிலைகள் அதை முற்றிலும் கொந்தளிப்பில் தள்ளலாம்.

உங்கள் உள்நோக்கிய பார்வை திறக்கும் போதுதான் சரியான தெளிவு எழுகிறது. உலகில் உள்ள எந்த சூழ்நிலையோ அல்லது நபரோ இந்த தெளிவை சிதைக்க முடியாது. உண்மையான அறிவு மேலோங்குவதற்கு, உங்கள் மூன்றாவது கண் திறக்கப்பட வேண்டும்.

ஆசிரியரின் குறிப்பு: இந்தக் கட்டுரையில், சத்குரு மூன்றாவது கண்ணைத் திறக்க இரண்டு வழிகளைப் பற்றி பேசுகிறார்.

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

ஆதியோகியை எண்ணற்ற பெயர்கொண்டு அழைக்க காரணம்...