சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் – மந்திரம், பாடல் வரிகள் மற்றும் பொருள்

article சிவ ஸ்தோத்திரம்
‘திருவைந்தெழுத்து’ என கொண்டாடப்படும் நமஷிவாய மந்திரத்தின் வலிமையையும், சிவனையும் போற்றுவதாக அமைந்திருக்கிறது சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம். திருவைந்தெழுத்து என போற்றி கொண்டாடப்படும் சிவ பஞ்சாட்சர தோத்திரம் சிவனைப் புகழ்ந்து பாடுவதுடன் ந-ம-ஷி-வா-ய என்னும் ஐந்தெழுத்துகளின் அசையில் புதைந்துள்ள சக்தியையும் விளக்குகிறது. இந்த மந்திரத்தை சௌண்ட்ஸ் ஆப் ஈஷா இசைக் குழுவினர் நமக்கு வழங்குகிறார்கள். சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் சிவனை புகழ்ந்து பாடும் ‘த்ரிகுண்’ இசைக்கோர்ப்பில் ஒரு பாடலாக இடம் பெற்றுள்ளது. . சௌண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் ...

‘திருவைந்தெழுத்து’ என கொண்டாடப்படும் நமஷிவாய மந்திரத்தின் வலிமையையும், சிவனையும் போற்றுவதாக அமைந்திருக்கிறது சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்.

திருவைந்தெழுத்து என போற்றி கொண்டாடப்படும் சிவ பஞ்சாட்சர தோத்திரம் சிவனைப் புகழ்ந்து பாடுவதுடன் ந-ம-ஷி-வா-ய என்னும் ஐந்தெழுத்துகளின் அசையில் புதைந்துள்ள சக்தியையும் விளக்குகிறது. இந்த மந்திரத்தை சௌண்ட்ஸ் ஆப் ஈஷா இசைக் குழுவினர் நமக்கு வழங்குகிறார்கள். சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் சிவனை புகழ்ந்து பாடும் ‘த்ரிகுண்’ இசைக்கோர்ப்பில் ஒரு பாடலாக இடம் பெற்றுள்ளது. .

சௌண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இதர இசை தொகுப்புகளை Sounds of Isha யூடியுப் சேனலில் கேட்டு ரசியுங்கள்.

பாடல் வரிகள்

தமிழ்

ஆஉம் நம ஷிவாய ஷிவாய நம ஆஉம்
ஆஉம் நம ஷிவாய ஷிவாய நம ஆஉம்


நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம ஷிவாய


மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ம காராய நம ஷிவாய


சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய
தஸ்மை ஷி காராய நம ஷிவாய


வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய
தஸ்மை வ காராய நம ஷிவாய


யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய காராய நமஷிவாய


பஞ்சாஷரமிதம் புண்யம் ய படேச் சிவ
சன்னிதௌ சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே


Sanskrit

नागेन्द्रहाराय त्रिलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय
तस्मै नकाराय नमः शिवाय

मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय
नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय ।
मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय
तस्मै मकाराय नमः शिवाय

शिवाय गौरीवदनाब्जबृंदा
सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठाय वृषध्वजाय
तस्मै शिकाराय नमः शिवाय

वशिष्ठकुम्भोद्भवगौतमार्यमूनीन्द्र देवार्चिता शेखराय ।
चन्द्रार्कवैश्वानरलोचनाय
तस्मै वकाराय नमः शिवाय

यज्ञस्वरूपाय जटाधराय
पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगम्बराय
तस्मै यकाराय नमः शिवाय

पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिवसंनिधौ ।
शिवलोकमावाप्नोति शिवेन सह मोदते

பொருள் :


ந – அகரம்
நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே,
திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே,
என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே,
‘ந’-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


ம – அகரம்
மந்தாகினி நதிநீர் கொண்டு வணங்கப்பட்டு, அரைத்த சந்தனம் பூசப்படுபவனே,
நந்தியால் வணங்கப்படும் தேவனே, பூதகணங்களாலும் வணங்கப்படும் தலைவனே மகேஸ்வரனே,
மந்தாரை மலரையும் இன்னும் பல மலர்களையும் கொண்டு வணங்கப்படுபவனே
‘ம’-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


‘ஷி’ – இகரம்
தாமரை முகத்தாள் கௌரியின் முகம் மலர காரணமான அதிகாலை சூரியனைப் போன்றவனே, மங்களகரமானவனே,
தட்சணின் யாக அர்ப்பணத்தை அழித்தவனே,
நீல நிறத்தில் கழுத்தும், காளை வாகனமும் கொண்டவனே,
‘ஷி’ கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


‘வா’ – ஆகாரம்
வஷிஷ்ட்டன், அகத்தியன், கௌதமன் போன்ற சிறந்த, பெரும் முனிவர்களாலும்,
வானுறை தேவர்களாலும் வணங்கப்படுபவனே, பிரபஞ்சத்திற்கே மகுடமாக இருப்பவனே,
சந்திரன், சூரியன். அக்னியைத் தனது மூன்று கண்களாகக் கொணடவனே,
‘வா’கார அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


ய – அகரம்
தியாகத்தின் திருவுருவானவனே, சடை முடி தரித்தவனே
ஆதியும் அந்தமும் இலாதவனே, திரிசூலம் ஏந்தியவனே,
தெய்வீகமானவனே, ஒளி பொருந்திய மேனியனே, நாற்திசைகளையும் ஆடையாக அணிந்தவனே,


‘ய’கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்
யாரொருவர் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை சிவனுக்கு அருகில் உச்சரிக்கிறாரோ,
அவர் சிவபாதம் சேர்ந்து பேரின்பத்தில் திளைப்பார்.