பில்வாஷ்டகம் – ஆடியோ, பாடல் வரிகள் (Bilvashtakam Lyrics in Tamil) மற்றும் பாடலின் பொருள்

article சிவ ஸ்தோத்திரம்
புகழ்பெற்ற பில்வாஷ்டகம் பாடல் வரிகள் (Bilvashtakam Lyrics in Tamil) வில்வ இலையின் நன்மைகளையும், சிவனுக்கு அதன் மீதுள்ள அன்பையும் விவரிக்கிறது. இந்த அஷ்டகம் இங்கே சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவால் வழங்கப்படுகிறது..

 

 

பில்வாஷ்டகம் – பாடல் வரிகள் (Bilvashtakam Lyrics in Tamil) மற்றும் பாடலின் பொருள்

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபசம்ஹாரம் ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

சிவனுக்கு வில்வ பத்ரம் வழங்குகிறேன். இந்த இலை சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களை உள்ளடக்கியது. இந்த இலை மூன்று கண்கள் போன்றது, சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பு. இது மூன்று ஆயுதங்கள் போன்றது. இது முந்தைய மூன்று பிறப்புகளில் செய்த பாவங்களை அழிப்பவை. வில்வ பத்ரமுடன் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.

அகண்ட வில்வபத்ரேன பூஜிதே நந்திகேஷ்வரே
ஷுத்யந்தி சர்வ பாபேப்யோ ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

சிவனுக்கு வில்வ பத்ரம் வழங்குகிறேன். நந்திகேஷ்வரருக்கான பூஜையை நான் அவருக்கு வில்வ பத்திரத்தினால் முடிக்கிறேன், இதனால் பாவத்திலிருந்து விடுபடுகிறேன்.

ஷாலிகிராம் ஷிலாமா ஏகாம் விப்ராநாம் ஜாத்து ச்சார்பயேத்
சோமயத்ந்ய மஹாபுண்யம் ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

சிவனுக்கு வில்வ பத்ரம் வழங்குகிறேன். இந்த இலை மென்மையானது மற்றும் கறை இல்லாதது. அது தன்னிலேயே முழுமைபெற்றது. இது மூன்று கிளைகள் போன்றது. வில்வ பத்ரத்தினால் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.

தண்டிகோடிசஹஸ்ரனி வாஜபே ஷதானிச்ச
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

வில்வ பிரசாதம் யாகங்கள் மற்றும் உயிர்பலியை விட சக்தியில் பெரியது.

லக்ஷ்ம்யா ஸ்தனம் உன்பனம் மஹாதேவஸ்ய ச ப்ரியம்
வில்வ வ்ருக்ஷம் ப்ரயச்சாமி ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

வில்வ மரத்தை லட்சுமி தேவி உருவாக்கியுள்ளார். சிவபெருமானுக்கு வில்வ மரத்தின் மீது மிகுந்த பாசம் உண்டு. வில்வ பத்ரத்தால் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.

தர்ஷனம் வில்வ வ்ருக்ஷ்ய ஸ்பர்ஷனம் பாபனாஷனம்
அகோரபாப சம்ஹாரம் ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

வில்வ இலையை காண்பதும் அதனுடன் தொடர்பு கொள்வதும் எல்லா பாவங்களையும் அழிக்கிறது. வில்வ பத்ரத்தால் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.

காஷி க்ஷேத்ர நிவாசம் ச்ச காலபைரவ தர்ஷனம்
ப்ரயாக மாதவம் த்ருஷ்டவா ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

காசி நகருக்கு சென்று, கால பைரவரை தரிசித்து, மாதவர் கோவிலுக்கு விஜயம் செய்த பின்னர் சிவனுக்கு ஒரு வில்வ இலையை நான் அர்ப்பணிக்கிறேன்.

மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரதஹ ஷிவ ரூபாய ஏக வில்வம் ஷிவார்ப்பணம்

வில்வ இலையின் கீழ் பகுதி பிரம்மா, நடுத்தரமானது விஷ்ணு மற்றும் மேல் பகுதி சிவன். வில்வ பத்ரத்தால் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு: பில்வாஷ்டகம் த்ரிகுன் இசைத்தொகுப்பின் ஒரு பகுதியாகும். இது, Isha Downloads இணையதளத்தில் வாங்கவும், பதிவிறக்கவும் கிடைக்கிறது.

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!