எல்லைகளை அழிப்பது

article ஆன்மீகம் & மறைஞானம்
அடிப்படையில், யோகா என்றால் எல்லைகளை அழிக்கும் அறிவியல். மிக எளிய உயிரினம் முதல் மனிதர் வரை, அவர்களது படைப்பின் மிக அடிப்படையான நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், எல்லைகளை நிர்ணயிப்பதைப் பற்றியே உள்ளது...

அடிப்படையில், யோகா என்றால் எல்லைகளை அழிக்கும் அறிவியல். மிக எளிய உயிரினம் முதல் மனிதர் வரை, அவர்களது படைப்பின் மிக அடிப்படையான நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், எல்லைகளை நிர்ணயிப்பதைப் பற்றியே உள்ளது. ஒரு நாய் எல்லா இடங்களிலும் சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு சிறுநீர் பிரச்சனை இருப்பதால் இப்படி செய்யவில்லை, அது தனது எல்லைகளை வகுத்துக்கொள்கிறது. இதைப்போலவே, ஒவ்வொரு உயிரினமும் மனிதர்கள் உட்பட, எல்லா நேரங்களிலும் தனக்கே உரிய எல்லைகளை தீர்மானித்துக்கொள்கின்றன.

ஆசிரமத்தில், நாங்கள் ஒவ்வொருவரின் எல்லைகளையும் அழிக்க முயற்சிக்கிறோம், ஆனால் அதற்குள்ளேயும் கூட மக்கள் தங்கள் எல்லைகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு ஒரு சிறிதளவுக்கு எல்லை வகுத்தாக வேண்டியிருக்கிறது, இல்லையென்றால் அவர்கள் வீடற்றவர்களாக உணருவார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்களுக்கு, இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் வெறுமனே வாழமுடிவதில்லை. அவர்கள் ஒரு சிறிய அறையில் வாழ்வதற்கு விரும்புகின்றனர். அவர்கள் உணர்வதற்கும், வசிப்பதற்கும் கிடைத்திருக்கும் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை.

நீங்கள் ஒரு எல்லையை உருவாக்கினால், அதை நீங்கள் வரையறுக்க வேண்டியிருப்பது ஒரு விஷயம் என்றால், அடுத்த விஷயம் அதை நீங்கள் பாதுகாக்க வேண்டியிருக்கிறது – எல்லை பெரிதாகிவிட்டால் நீங்கள் ஒரு இராணுவத்தை உருவாக்க வேண்டும்

consciousness perspective

யோகா என்றால், ஒரு மனிதரது எல்லைகளை சாத்தியப்படும் ஒவ்வொரு வழியிலும் மெதுவாக அழிக்கத் தயார் செய்வதன் மூலம் அவர் வெறுமனே இங்கே வாழ முடியும் என்பதுதான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் ஒரு எல்லையை உருவாக்கினால், ஒரு விஷயம் நீங்கள் அதை வரையறுக்க வேண்டும், அடுத்த விஷயம் அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும் – எல்லை பெரிதாகிவிட்டால் அதைப் பாதுகாக்க ஒரு இராணுவத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு இராணுவம் இருப்பது வேடிக்கைக்காக அல்ல. உங்களுக்கென்று ஒரு எல்லை இருந்துவிட்டால் நீங்கள் அதைப் பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் யாராவது அதனை அத்துமீற முயற்சிப்பார்கள். அந்த எல்லை உங்களுக்கு முக்கியமானது, அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும், அதற்காக நீங்கள் போராட வேண்டும், அதற்காக நீங்கள் உயிரை விடவேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் வரும். எனவே யோகா என்றால் இதிலிருந்து விடுபடுவது, இங்கு நீங்கள் எல்லைகளை அழிக்கிறீர்கள். நீங்கள் இங்கே உட்கார்ந்தால், இந்த பிரபஞ்சத்தில் இங்கே நீங்கள் வெறுமனே அமர்ந்திருக்கிறீர்கள்; உங்களுக்கே சொந்தமான ஒரு எல்லை உங்களுக்குத் தேவையில்லை. உங்களுக்கே உரிய இடம் என்றழைக்கப்படுவது உங்களுக்குத் தேவையில்லை. எப்படிப் பார்த்தாலும் “உங்களுக்கே உரிய இடம்” என்பது இல்லை. இது உங்களுடையது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது வெறும் மாயை.

உடல் ஒரு எல்லையைக் கொண்டுள்ளது, பிரச்சனை அது அல்ல – அதுதான் உடலியலின் அடிப்படையான சிறப்புப் பண்பு. இருப்பினும், அது உங்கள் உளவியலுக்குள் ஊடுறுவியுள்ளது. இப்போது உங்கள் மனம் ஒரு எல்லையை விரும்புகிறது, உங்கள் உணர்ச்சிகள் ஒரு எல்லையை விரும்புகின்றன. ஏனென்றால் உங்கள் எல்லையை உருவாக்குவதில் நீங்கள் நேரத்தையும் ஆற்றலையும், ஏன் உங்கள் புத்திசாலித்தனத்தையும் முதலீடு செய்துள்ள காரணத்தினால், உங்களுக்குள் எல்லையற்றதாக இருப்பது எதுவோ அதை உங்களால் அடைய முடியவில்லை, அது உங்கள் அனுபவத்தில் இல்லை. இது அவ்வளவுதான்.

நாம் ஆதியோகியைப் பற்றி பேசும்போது, அவரை ஒரு யோகி என்று அழைக்கிறோம், தனக்குள்ளேயே எல்லைகளை உடைத்துவிட்ட அல்லது எல்லைகளை அழித்துவிட்ட எந்த ஒருவரையும் நாம் யோகி என்று அழைக்கிறோம்.

பிரபஞ்சத்திலிருந்து நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதற்கு உங்களது செயல்கள், உங்களது கர்மாதான் காரணமாக இருக்கிறது. அவ்வளவு உயிரோட்டத்துடனும், அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் ஒன்றுடன் நீங்கள் தனித்திருப்பதாக உணர்கிறீர்கள். நாம் ஆதியோகியைப் பற்றி பேசும்போது, அவரை ஒரு யோகி என்று அழைக்கிறோம், தனக்குள்ளேயே எல்லைகளை உடைத்துவிட்ட அல்லது எல்லைகளை அழித்துவிட்ட எந்த ஒருவரையும் நாம் யோகி என்று அழைக்கிறோம். நாம் அவரை இங்கே நிலைநிறுத்தியபோது, அது அவரது சக்தியாகவே இருந்தது. மக்கள் வந்து இங்கே அமர்ந்தால், அவர்களது வாழ்க்கையின் எல்லைகளை அழிப்பதை நோக்கி மெல்ல அவர்கள் நகரத் தொடங்குவதுடன், எல்லையற்றதை நோக்கி பயணப்படுவார்கள். அது ஒன்றுதான் நோக்கமாக இருக்கிறது; நாம் செய்வது என்னவாக இருந்தாலும் எப்போதும் இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

Obliterating Boundaries

இப்போது நாம் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் ஆதியோகி திருத்தலங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதன் உண்மைச் சூழலை நாம் மக்களுக்குப் புரிய வைப்பது முக்கியமானது. இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைத் திறம்படத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகளை முதன்முறையாக வழங்கியவர் ஆதியோகி. வாழ்க்கை பரிணாமம் அடைய முடியும் என்ற கருத்து அவருடையது; அந்தப் பரிணாம வளர்ச்சியை உடல்தன்மையான வடிவத்திற்கு மட்டும் வரையறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுடன் ஒருவர் தன்னுணர்வுடன் பரிணாமம் அடைய முடியும் என்கிற இந்த விட்டுவிடுதலையாகும் சாத்தியம் அவரால்தான் வழங்கப்பட்டது. யோகாவின் முழு அறிவியலும் அவருடையது. இவ்வளவு அற்புதமான கொடையை நமக்கு அளித்த இத்தகைய மகத்தான உயிருக்கு நன்றி பாராட்டுவதே எனது முயற்சியாக இருக்கிறது. இவை மனித விழிப்புணர்வை வளர்ப்பதற்கான சக்திவாய்ந்த வழிகளாக இருப்பதால், இதை நிறைவேற்றுவதில் எனக்கு உறுதுணையாக இருங்கள்.

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!