logo
logo
Illustrative Image of Shiva | Isha Foundation

வசிஷ்ட முனிவர் இயற்றிய தாரித்ரயதஹன சிவ ஸ்தோத்திரம்

வசிஷ்ட முனிவர் இயற்றிய தாரித்ரயதஹன சிவ ஸ்தோத்திரம்

தாரித்ரயதஹன ஸ்தோத்திரம் - தமிழ் பாடல் வரிகள்



விஷ்வேஷ்வராயநரகார்னவதாரனாய
கர்நாம்ருதாயஷஷிஷேகரதாரனாய
கர்பூரகாந்திதவலாயஜடாதராய
தாரித்ரயதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

கௌரிப்ரியாயரஜனீஷகலாதராய
காலாந்தகாயபுஜகாதிபகங்கனாய
கங்காதராயகஜராஜவிமர்தனாய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

பக்திப்ரியாயபவரோகபயாபஹாய
உக்ராயதுர்கபவசாகரதாரனாய
ஜோதிர்மயாயகுணகானசுநிருத்யகாய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

சர்மாம்பராயஷவபஸ்மவிலேபனாய
பாலக்ஷானாயமணிகுண்டலமண்டிதாய
மஞ்ஜீரபாதயுகலாயஜடாதராய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

பஞ்சானனாயபனிராஜவிபூஷனாய
ஹேமாம்ஷுகாயபுவனத்ரயமண்டிதாய
ஆனந்தபூமிவரதாயதமோமயாய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

பானுப்ரியாயபவசாகரதாரனாய
காலாந்தகாயகமலாசனபூஜிதாய
நேத்ரத்ரயாயஷுபலக்ஷனலக்ஷிதாய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

ராமப்ரியாயரகுநாதவரப்ரதாய
நாகப்ரியாயநரகார்னவதாரனாய
புன்யேக்ஷுபுன்யபரிதாயசுரர்ச்சிதாய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய

முக்தேஷ்வராயபலதாயகணேஷ்வராய
கீதப்ரியாயவ்ருஷபேஷ்வரவாஹனாய
மாதங்கச்சர்மவசனாயமஹேஷ்வராய
தாரித்ரதுக்கதஹனாயநமஹ்ஷிவாய


தாரித்ரயதஹன ஸ்தோத்திரம் - தமிழ் பொருள்



பிரபஞ்சத்தின் தேவனான,
பிரச்சனைகளின் கடலை கடக்க உதவுபவனான,
செவிக்கு இனியவனான,
பிறைநிலவை ஆபரணமாக அணிபவனான,
கற்பூரத்தின் வெண்மையை ஒத்தவனான,
வெட்டப்படாத ஜடாமுடியை அணிந்திருப்பவனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

தேவி பார்வதிக்கு பிரியமானவனான,
இரவின் தேவனின் பிறைநிலவான,
மரணத்தின் தேவனுக்கு மரணமானவனான,
பாம்புகளின் அரசனை வளையலாக அணிபவனான,
கங்கையை தலையில் சுமப்பவனான,
யானைகளின் அரசனைக் கொன்றவனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

தன் பக்தர்களுக்குப் பிரியமானவனான,
மனித வாழ்வின் நோய் பற்றிய பயத்தை அழிப்பவனான,
பயங்கரமானவனான,
கடினமான வாழ்வெனும் கடலை கடக்கச்செய்பவனான,
ஒளியின் உருவமானவனான,
தனது நற்பெயர்களில் நடனமாடுபவனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

ஒரு விலங்கின் தோலைத் தரித்தவனான,
எரிந்த உடல்களின் சாம்பலைப் பூசுபவனான,
நெற்றிக்கண்ணைக் கொண்டவனான,
மதிப்பான ரத்தினங்களால் ஆன காதணிகளை அணிந்தவனான,
கால்களின் கின்கினி சலங்கையை அணிந்தவனான,
வெட்டப்படாத ஜடாமுடியை அணிந்திருப்பவனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

ஐந்து முகங்கள் கொண்டவனான,
பாம்புகளின் அரசனை ஆபரணமாக அணிந்தவனான,
பொன்னால் ஆன உடையை அணிந்தவனான,
மூவுலகங்களின் ஆபரணமாக இருப்பவனான,
வரங்களை வழங்குபவனான,
ஆனந்தத்தின் களஞ்சியமான,
இருளின் உருவமான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

கௌரி அருளின் உலகமானவனான
மகாதேவனான,
சிங்கத்தைப் போன்றவனான,
வரம்தரும் கற்பகவிருட்சமானவனான,
அவன் அடைக்கலம் தேடுவோருக்கு அனைத்துமானவனான,
அனைத்து உலகங்களுக்கும் அரசனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

சூரிய தேவனுக்குப் பிரியமானவனான,
பிறப்பெனும் கடலைக் கடக்க உதவுபவனான,
மரணத்தின் தேவனைக் கொன்றவனான,
பிரம்ம தேவனால் வழிபடப்படுபவனான,
அனைத்திலும் புண்ணியமானவனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

ராமனுக்குப் பிரயமானவனான,
ராமனுக்கு வரங்களை வழங்கியவனான,
பாம்புகள்மீது தனிப்பிரியமுடையவனான,
நரகத்தை அழிப்பவனான,
புனிதமானதில் மிக புனிதமானவனான,
தேவர்களால் வழிபடப்படுபவனான,
ஏழ்மையின் துயரை எரிப்பவனான சிவனை வணங்குகிறேன்.

    Share

Related Tags

சிவ ஸ்தோத்திரங்கள்சிவ பக்தர்கள்

Get latest blogs on Shiva

Related Content

மஹாகாலேஷ்வரர் கோவில் – இளகிய மனம் படைத்தவர்களுக்கு அல்ல