ஆதி குரு

article சிவன் பற்றி
சிவனைப் பற்றிய கவிதை

துறவியின் விலகல்
இன்பதுன்ப சமநிலை

இத்தன்மைகள் வீற்று இருந்த அவர்கட்கு
கவனம் மறுக்க முடியவில்லை அவனால்.

தம் தேடலின் தீவிரத்தால் அவனின்
விடாப்பிடி நிலையை விலக வைத்தனர்.

தெய்வீக துறவிகள் எழுவர்
தேட முனைந்தது சொர்க்கத்தை அல்ல

ஒவ்வொரு மானுடர்க்குமான ஓர் வழியை
சொர்க்க நரகங்கள் கடந்து ஓர் வழியை

தம் இனத்திற்காக அவர்கள் ஏற்றது கடுமுயற்சி
தன் அருள்பொழிவை அடைக்க இயலவில்லை அவனால்

அவன் தென்திசை நோக்கி திருமுகம் திருப்ப
அவர்தம் இனம் மேல் அருட்பார்வை

இறைமுக தரிசனம் மட்டுமல்ல அவர்கள்
அருட்பெரும் மழையை உட்கொண்டுணர்ந்தனர்

ஆதியற்றவன் அவன் வெள்ளமாய் பெருக்கெடுத்தோட
ஞானத்தில் பொங்கிவழிந்தனர் முனிவர்கள் எழுவரும்

பழங்கால அச்சு வார்ப்புகளிலிருந்து
பாரினை விடுவிக்க

இத்தெய்வீக ஞானவெள்ளம் ஓடுகிறது இன்று வரை
ஓய மாட்டோம் நாம்
ஒவ்வொரு கடைநிலை உயிரும் உணரும் வரை