சத்குரு வழங்கும் யோக யோக யோகேஷ்வராய உச்சாடணம், ஆதியோகியான சிவன் மனிதகுலத்திற்கு வழங்கிய ஈடுஇணையற்ற பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மனித மனத்தால் கிரகிக்கக்கூடியதையும், அதைத் தாண்டியும் சாத்தியமான அனைத்து குணங்களையும் உள்ளடக்கிய பல்வேறு வடிவங்கள் சிவனுக்கு உண்டு. இவை அனைத்திலும், ஐந்து வடிவங்கள் அடிப்படையானவையாக கருதப்படுகின்றன. அவை யோகேஷ்வரா, பூதேஷ்வரா, காலேஷ்வரா, சர்வேஷ்வரா மற்றும் ஷம்போ. மேலும் தெரிந்துகொள்ள…
இந்த உச்சாடணத்தை உச்சரிப்பது உடலில் உஷ்ணம் அல்லது சூட்டினை உருவாக்குவதால், இது ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவக்கூடியதாக இருக்கிறது.
உச்சாடணத்தை இங்கே கேளுங்கள்:
தமிழில் உச்சாடணத்தின் வரிகள்:
யோக யோக யோகேஷ்வராய பூத பூத பூதேஷ்வராய கால கால காலேஷ்வராய ஷிவ ஷிவ சர்வேஷ்வராய ஷம்போ ஷம்போ மஹாதேவாய
இந்த உச்சாடணத்தின் பொருள்:
“பொருள்தன்மையைக் கடந்த யோகேஷ்வரனுக்கு, பஞ்சபூதங்களை ஆட்கொண்ட பூதேஷ்வரனுக்கு, காலத்தை ஆட்கொண்டு அதன் சுழற்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் காலேஷ்வரனுக்கு, எங்கும் நிறைந்து, அனைத்திற்கும் அடிப்படையாய் இருக்கும் சர்வேஷ்வரனுக்கு, அனைத்திலும் உயர்ந்த ஷம்போ, மகாதேவனுக்கு வணக்கங்கள்”