சத்குரு 10 நிமிடங்களில் இயற்றிய 7 கவிதைகள்

article சிவன் பற்றி
கணப்பொழுதில் ஊற்றெடுத்த வெளிப்பாடாக, இந்த 7 கவிதைகளை 10 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் சத்குரு இயற்றினார்.

கணப்பொழுதில் ஊற்றெடுத்த வெளிப்பாடாக, இந்த 7 கவிதைகளை 10 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் சத்குரு இயற்றினார்.

பாறையைப் போன்ற
உறுதியான ஸ்திரமான இதயமென பெருமைப்பட்டேன்
பின்பு அவன் அழைப்பின்றி வந்தான்
ஒவ்வொரு உயிருக்கும் பாறைகளுக்கும்
என் இதயத்தை துடிக்கவைத்து உதிரம்சிந்த வைத்தான்

இறக்கும் இந்த உடலை வெல்வதற்கு
நூற்றுப்பன்னிரண்டு வித்தைகள்
ஆனால் இந்த வித்தைகளில் எனை சிக்கவைத்தான்
தந்திரக்காரன், இப்போது நான் சிக்கிவிட்டேன்
எனக்காகவோ என்னுடையதாகவோ
என்னால் எதுவும் சிந்திக்கவோ செய்யவோ முடியாது

மிக இனிய சப்தங்கள் அனைத்தும் கேட்டபின்பு
மகத்தான காட்சிகள் அனைத்தும் கண்டபின்பு
அழகிய உணர்வுகள் அனைத்தும் உணர்ந்தபின்பு
என் அறிவனைத்தையும் அவனுக்காக இழந்தேன், ஏகன்
இல்லாதவன் ஆனால் ஈடுஇணையில்லாது இருக்கிறான்

அவன் அன்பில்லை
அவன் கருணையுமில்லை
அவனை சௌகரியத்திற்காக தேடாதீர்கள்
ஏனெனில் அவன்தான் கடைநிலை.

உருவமில்லாதவனின் பெயரில்லாத
பரவசநிலைகளை வந்துணருங்கள்
மனநிறைவின் மகிழ்ச்சிகளையல்ல
இது தன்னை அழிக்கும் விளையாட்டு
ஏதும் கிடைக்காத விளையாட்டிற்கு நீங்கள் தயாரா

அசைவில்லாத அவனை நம்பிவிடாதீர்கள்
அவனது அசைவற்ற நிலையால் என்னை ஈர்த்தான்
அவன்தான் பாதையென்று நான் நினைத்தேன்
அவன்தான் முடிவென்ற எச்சரிக்கையுடன் இருங்கள்.

உங்கள் இறுதி சடங்கிற்கும்
ஆரவாரமான தகனத்திற்கும்
நீங்கள் இருப்பீர்களா. மயானத்தை காப்பவனின்
நெருப்புக் காட்சி. என் சிவன்

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!