logo
logo
தமிழ்
தமிழ்

Pay as you wish

தேவாரம்

சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்களால் சிவனைப் போற்றி பாடப்பட்ட பக்திப் பாடல்கள் தான் தேவாரம். பெரும்பாலான இந்திய பாரம்பரிய இசை அமைப்புகளுக்கு முந்தைய பழங்கால இசைப் பாணியில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பாடல்கள், 7ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியா முழுவதும் பரவிய பக்தி அலையைப் பற்றிய நுண்ணறிவை நமக்குத் தருகின்றன.

தேவாரம் இசைத் தொகுப்பு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களால் தனித்துவமான பாணியில் வழங்கப்பட்ட 6 பாடல்களின் தொகுப்பாகும், மேலும் இந்த செழுமையான மற்றும் புகழ்பெற்ற கலாச்சார பொக்கிஷத்தின் ஒரு பகுதியை உலகிற்கு வழங்கும் ஒரு தாழ்மையான முயற்சியாகும்.

உள்ளெழுச்சி பாடல்

(தேவாரம் ஒரு அறிமுகம்)

பக்தியின் சாராம்சம், கொண்டாடப்பட்ட நாயன்மார்கள் மற்றும் இந்த மண்ணில் நடந்து வந்த லட்சக்கணக்கானவர்களிடையே பிரகாசித்த பல மறக்கப்பட்ட முனிவர்கள் மற்றும் மகான்கள் பற்றி சத்குரு பேசுகிறார். அத்தகைய, முற்றும் துறந்த மற்றும் பரவச நிலைகளை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அணுகுவது என்பது பற்றி அவர் பேசுகிறார். அவரது உரைக்கு முன் உள்ள இறைவணக்கப் பாடல், எந்தவொரு தேவாரத்தையும் பாடுவதற்கு முன்பு பாரம்பரியமாகப் பாடப்படும்.

1) தில்லை வாழ் அந்தணர்

இது ஒரு திருத்தொண்டர் தொகை (புனிதப் பட்டியல்) அல்லது தில்லை நடராஜர் கோயிலில் உள்ள சிவபக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் பாடப்படும் ஒரு பாடலாகும். இந்த தேவாரத்தில் நாயன்மார்களைப் பற்றி முதன்முதலாக பேசிய பெருமை சுந்தரருக்கு உண்டு, அதன் அடிப்படையில் சேக்கிழரால் நாயன்மார்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு முழு காவியமும் எழுதப்பட்டது - பெரியபுராணம். இந்த தேவாரத்தில், சுந்தரர் 63 நாயன்மார்களையும் தனது தனித்துவமான வழியில் போற்றி, இந்த சிவபக்தர்களை வணங்குகிறார்.

View Lyrics

2) மந்திரம் ஆகும் நீறு

7ஆம் நூற்றாண்டில் மதுரையை கூன் பாண்டியன் என்ற மன்னன் ஆண்டான். அந்தக் காலத்தில் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத நோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். சம்பந்தர் "மந்திரம் ஆகும் நீறு" பாடலைப் பாடி, புனித சாம்பல் அல்லது திருநீரைப் பயன்படுத்தியதன் மூலம், அவரையும், அவரது கூன் முதுகையும் குணப்படுத்தினார்.

View Lyrics

3) பித்தா பிறை சூடி

பித்தா பிறை சூடி என்பது 16 வயதில் சுந்தரரின் முதல் கவிதை வெளிப்பாடு ஆகும். சுந்தரரின் திருமணத்திற்கு சிவன் மாறுவேடத்தில் வந்து, தான் சிவனுக்கு உரியவர் என்பதை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது. அந்த நினைவூட்டலுடன், சுந்தரர் தனது பக்தியை இந்தப் பாடலின் மூலம் ஊற்றினார்.

View Lyrics

4) தோடுடைய செவியன்.

மூன்று வயதில், சம்பந்தர் ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் முன் சிவனும் பார்வதியும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, தந்தை, குழந்தையின் உதடுகளில் பால் துளிகளை கவனித்தார். பார்வதி தேவியால் அவருக்கு ஞானத்தின் பால் ஊட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி கேட்டபோது, ​​குழந்தை உடனே ஒரு பாடலை பாடியது - தோடுடைய செவியன்.

View Lyrics

5) வானனை மதிசூடிய

திருவண்ணாமலை கோயிலில் உள்ள சிவபெருமானின் திருவுருவத்தைப் போற்றி வாணனை மதி சூடிய பாடலைப் பாடினார் ஞானி திருநாவுக்கரசர். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை, அக்னி மூலத்தின் சக்தி வாய்ந்த பிரதிஷ்டையாகும்

View Lyrics

6) மாதர் பிறை கன்னி யானை

வயது முதிர்ந்த போதிலும், அப்பர், கைலாயத்தைப் பார்க்க வேண்டும், சிவனைக் காண வேண்டும் என்ற தீவிர ஆசை கொண்டிருந்தார். அவர் நடக்கத் தொடங்கினார், ஆனால் 80 வயதைத் தாண்டியதால், அவரது கால்கள் விரைவில் கைவிட்டன. பின்னர் கைலாயத்தை நோக்கி ஊர்ந்து சென்றார், விரைவில் அவரது கைகளிலும் கால்களிலும் பல காயங்கள் ஏற்பட்டன, ஆனாலும் அவர் தொடர்ந்தார். அவரது பக்தியில் கவரப்பட்ட சிவன், அவர் முன் தோன்றி அவரது விருப்பத்தை நிறைவேற்றினார். அப்போது அவர் பாடியது "மாதர் பிறை கன்னி யானை"

View Lyrics

தேவாரம் உருவானது எப்படி?

தேவாரம் எப்படி தோன்றியது என்பது பற்றிய கதை இங்கே

திருஞானசம்பந்தர்

3 வயது நாயன்மார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தனது பெற்றோருடன் சிவன் கோயிலுக்கு சென்ற கதை இங்கே. பார்வதி தேவியே அவருக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது.

view more
சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தில், முதியவர் வேடமிட்டு வந்து சிவன் குறுக்கிடும்போது என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

திருநாவுக்கரசர்

அப்பர் என்ற திருநாவுக்கரசர் பல நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர். தனது எண்பதுகளில் சிவனைத் தேடி கைலாயத்திற்கு சென்ற ஒரு சம்பவம் இங்கே. இந்த தொகுப்பில் வரும் “மாதர் பிறை கன்னி யானை” பாடலின் கதை.

நாயன்மாரின் கதை

பக்தி என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படை. பக்தியின் அழகிய நிலைகளில் வாழ்ந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ்நாடு ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தின் வெளிப்பாடாக இருந்த இலக்கியப் பணியின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.