அஷ்டகம் என்பது எட்டு வெண்பா அல்லது பாடல்களாக எதுகை போனையுடன் இயற்றுவதாகும்.
அஷ்டகம் என்பது எட்டு வெண்பா அல்லது பாடல்களாக எதுகை போனையுடன் இயற்றுவதாகும். ஆதியோகி சிவனைப் போற்றி இயற்றப்பட்ட இப்பாடல்களை வாசித்து மகிழுங்கள்.
சந்திரசேகர அஷ்டகம், முனிவர் மார்கண்டேயர் இயற்றியதாக கூறப்படுகிறது. அவரது பதினாறாவது வயதில் மார்கண்டேயரை மரணதேவன் (காலன் அல்லது யமன்) பிடியிலிருந்து சிவன் மீட்டெடுத்தார் என்று கூறப்படுகிறது. இப்பாடல் வரிகளில் மார்கண்டேயர் சிவனை சந்திரசேகரன் (பிறை நிலவை தன் தலைமேல் அணிந்திருப்பவனே) என்று அழைக்கிறார். “சிவன் என் பக்கம் இருக்கையில் யமன் என்னை என்ன செய்யமுடியும்?” என்று சிவனிடம் தஞ்சமடைகிறார்.
இந்திய பாரம்பரியத்தில், ஒருவர் வாழ்வில் ஒரு குரு இருப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த கலாச்சார அம்சத்தை குருவாஷ்டகம் வெளிப்படுத்துகிறது. இந்த 8 வெண்பாக்களின் தொகுப்பில், மனிதர்கள் பொதுவாக போற்றிக்கொண்டாடும் வாழ்க்கை அம்சங்களை ஆதிசங்கரர் பட்டியலிடுகிறார்: புகழ், அந்தஸ்து, செல்வம், அழகு, புத்திகூர்மை, திறமை, சொத்து, அற்புதமான குடும்பம். பின் அவை அனைத்தையும் புறந்தள்ளி, “ஒருவரது மனம் குருவின் திருவடியில் சரணடையவில்லை என்றால், இவற்றால் என்ன பயன்?” என்கிறார்.
ஷரீரம்சுரூபம்ததாவகலத்ரம்
யஷஸ்சாருசித்ரம்தனம்மேருதுல்யம்
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
கதத்ரம்தனம்புத்ரபௌத்ராதிசர்வம்
க்ருஷம்பாந்தவாசர்வமேதாதிஜாதம்
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
ஷடங்காதிவேதோமுகேஷாஸ்த்ரவித்யா
கவித்வாதிகத்யம்சுபத்யம்கரோதி
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
விதேசேஷுமான்யஹஸ்வதேசேஷுதன்யஹ
சதாசாரவ்ருத்தேஷுமத்தோனசான்யஹ
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
க்ஷமாமண்டலேபூபபூபாலவ்ருந்தை
சதாசேவிதம்யஸ்யபாதாரவிந்தம்
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
யஷோ மே கடம்தீக்ஷுதானப்ரதாப
ஜகத்தாஸ்துசர்வம்கரேயாப்ரசாதத்
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
நபோகேநயோகேநவாவாஜிராஜௌ
நகாந்தாமுகேநைவவித்தேஷுசித்தம்
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
அரன்யேநவாஸ்வஸ்யகேஹேநகார்யே
நதேஹேமனோவர்ததே மே த்வனர்கே
குரோரங்க்ரிபத்மேமனஸ்சேனலக்னம்
ததக்கிம்ததக்கிம்ததக்கிம்ததக்கிம்
அனர்கானி ரத்னானி முக்தானி சம்யக்
சமாலிங்க(இ)தா காமினி யாமினிஷு
குரோரங்க்ரிபத்மே மனஸ்சேன லக்னம்
ததாக் கிம் ததாக் கிம் ததாக் கிம் ததாக் கிம்
அற்புதமான உடல்கட்டும் அழகான மனைவியும் இருந்தாலும்
மேரு மலையைப் போன்ற புகழும் செல்வமும் இருந்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
மனைவி, செல்வம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும்
வீடும் உறவும் இருந்து, அற்புதமான குடும்பத்தில் பிறந்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
ஆறு அங்கங்களிலும் நான்கு வேதங்களிலும் தேர்ந்தவராயினும்
நல்ல இலக்கியமும் பாடலும் இயற்றுவதில் வல்லவராயினும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
பிற தேசங்களில் போற்றப்பட்டு தாயகத்தில் செழித்திருந்தாலும்
நன்னெறிகளிலும் வாழ்விலும் மிகவும் மதிக்கப்பட்டாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
மாபெரும் அரசரும் உங்கள் பாதங்களை எப்போதும் வழிபடலாம்
உலகத்து பேரரசரும் உங்கள் மகிமையை, அறிவை போற்றலாம்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
உங்கள் புகழ் எங்கும் பரவியிருந்தாலும்
உங்கள் கொடையாலும் புகழாலும் உலகமே ஆதரித்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
வெளிசுகங்கள், உடைமைகள், காதலர் அழகுமுகம் ஆகியவைமீது பற்றின்மை, யோக சாதனையால் மனம் ஆர்வமிழந்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
உங்களிடம் விலைமதிப்பில்லா நகைகள் இருந்தாலும்
அரவணைப்பான அன்பான மனைவி இருந்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
உங்கள் மனம் விலகியிருந்து வனத்தில் இருந்தாலும்
வீடு, கடமை அல்லது மகத்தான சிந்தனையில் இருந்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?
இரத்தினம் முத்து போன்ற விலைமதிப்பற்ற கற்களைச் சேர்த்திருந்தாலும்
ஆடை அலங்காரங்களுடன் கூடிய அன்பான மணப்பெண்ணைக் கொண்டிருந்தாலும்
உங்கள் மனம் குருவின் கமலப்பாதங்கள்மேல் நிலைக்காவிடில்
அதனால் என்ன பயன்?–
இந்த அஷ்டகம், சிவனை “பார்வதி துணைவர்” எனத் துதிக்கும் பாடலாகும். முனிவர்களும் வேதங்களும் போற்றப்பட்டு, வரங்களின் தேவனாக அறியப்பட்டு, பிசாசுகளுக்கும் பேய்களுக்கும் ஒப்பிடப்படுவதோடு மிக அழகான சுந்தரராகவும் விவரிக்கப்படும் சிவனின் பல்வேறு குணங்களை வர்ணிக்கிறது. உயிர் இயற்கையாகவே இருக்கும் விதத்தில், பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் அரவணைத்து இணைத்துக்கொள்ளும் விதமாக அனைத்து குணங்களையும் உருவகப்படுத்துபவராக விவரிக்கப்படுகிறார்.
காசியின் கடவுளான சிவனின் உக்கிரவடிவான காலபைரவர் வடிவத்தைப் போற்றும் பாடல் இது.
தேவராஜசேவ்யமானபாவனாக்ரிபங்கஜம்
வ்யாலயக்னசூத்ரமிந்துஷேகரம்க்ருபாகரம்
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம்திகம்பரம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
பானுகோடிபாஸ்வரம்பவாப்திதாரகம்பரம்
நீலகண்டமீப்சிதார்ததாயகம்த்ரிலோசனம்
காலகாலமம்புஜாக்ஷமாக்ஷஷூலமாக்ஷரம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
ஷூல டங்க பாஷ தண்டபானிமாதிகாரனன்
ஷ்யாமகாயமாதிதேவமாக்ஷரம்நிராமயம்
பீமவிக்ரமம்பிரபும்விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
பூக்திமூக்திதாயகம்ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்த வத்சலம்ஸ்திதம்சமஸ்தலோகவிக்ரஹம்
விநிக்வனமனோஜ்ஞஹேமகின்கினிலசத்கடிம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
தர்ம சேதுபாலகம்த்வதர்மமார்கநாஷனம்
கர்ம பாஷ மோசகம்சுஷர்மதாயகம்விபும்
ஸ்வர்னவர்னகேஷ பாஷ ஷோபிதாங்கநிர்மலம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
ரத்னபாதுகாபிரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்டதைவதம்நிராமயம்
ம்ருத்யுதர்பநாஷனம்கராலதம்ஷ்ட்ரபூஷனம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
அட்ட ஹாசபின்னபத்மஜாண்டகோஷசந்ததிம்
த்ரிஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரஷாசனம்
அஷ்ட சித்தி தாயகம்கபாலமாலிகம்தரம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
பூதசங்கநாயகம்விஷாலகீர்திதாயகம்
காஷி வாச லோகபுன்ய பாப ஷோடகம்விபும்
நீதிமார்ககோவிதம்புராதனம்ஜகத்பதிம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம்பஜே
அவரது தாமரைப் பாதங்கள் தேவேந்திரனால் சேவிக்கப்பட்டு, கருணைமிக்க அவரது நெற்றியில் அவர் நிலவை சூடி, புனிதநூலாக பாம்பை அணிந்திருக்கிறார், திசைகளை ஆடையாக அணிந்து, நாரதர் போன்ற முனிவர்களால் வணங்கப்படும் காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
பலகோடி சூரியனைப் போல பிரகாசித்து, வாழ்வெனும் சமுத்திரத்தை கடக்க உதவி, அனைத்திலும் உயர்வான நீலகண்டனாகிய, முக்கண்ணனாகிய, நம் ஆசைகளை நிறைவேற்றி, மரணதேவனின் மரணத்திற்கு வழிசெய்து, தாமரை போன்ற கண்களுடைய, வீழ்த்தமுடியாத திரிசூலமுடைய காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
ஈட்டியும், கயிறும், குச்சியையும் தன் ஆயுதங்களாகக் கொண்டு, கருமைநிறமான, ஆதியான மூலமான, மரணமில்லாத, முதல் கடவுளான, அழிவும் நோயும் இல்லாத, தேவனான, மாபெரும் நாயகனான, தாண்டவத்தில் திளைப்பவனான, காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
ஆசைகளை நிறைவேற்றி முக்தியும் வழங்கி, மகிமை பொருந்திய முகத்திற்கு பெயர்போன, சிவனின் ஒரு வடிவமான, தன் பக்தர்களை நேசிப்பவரான, உலகம் முழுவதுக்கும் கடவுளான, பல வடிவங்கள் எடுக்கக்கூடிய, தங்கத்தால் ஆன நூலில் கின்கினி மணிகளை இடுப்பில் அணிந்திருக்கும் காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
வாழ்வில் தர்மத்தின் பாலத்தை பராமரித்து, அதர்மத்தின் பாதைகளை அழித்து, கர்மத்தின் பிணைப்புகளிலிருந்து நம்மை விடுவித்து, பல இடங்களில் கின்கினி மணிகள் கட்டப்பட்டிருக்கும் தங்கக்கயிறுடன் ஜொலிக்கும் உடலைக் கொண்ட காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
ரத்தினங்கள் பதித்த காலணிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதங்களுடன், நித்தியமான, நாம் கேட்கும் வரங்களெல்லாம் கொடுக்கும் நமக்குப் பிரியமான கடவுளான, மரணம் பற்றிய பயத்தை நீக்குபவரான, அவரது கோரப்பற்களால் மரணத்தைக் கொடுத்து விமோசனம் வழங்கும் காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
அவரது உரத்த கர்ஜனையால் பிரம்மன் உருவாக்கியவை அனைத்தையும் அழிக்கக்கூடியவரான, அவன் பார்வையே தவறுகள் அனைத்தையும் அழிக்கக்கூடியவரான, தந்திரமாக இருந்து கண்டிப்புடன் ஆட்சிசெய்பவரான, எட்டு சித்திகளை வழங்கக்கூடியவரான, மண்டை ஓடுகளின் மாலையை அணிந்திருப்பவரான காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
பூதங்களின் சங்கத்தின் தலைவரான, பெரும் புகழை வழங்குபவரான, காசியில் வாழ்வோரின் பாவ புண்ணியங்களுக்கு நீதி வழங்குபவரான, நீதியின் வழியில் நிபுணரான, காலம்கடந்த பழமையோடு பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கும் காசி நகரத்தின் கடவுள் காலபைரவரை நான் வணங்குகிறேன்.
சிவனின் பல்வேறு குணங்களைக் குறிப்பிட்டு வணங்கக்கூடிய பாடலிது. அர்த்தநாரீஷ்வரர் என்று அழைக்கப்படும் மகத்தான யோகி (தன்னில் சரிபாதியாக பெண்தன்மையை இணைத்திருப்பவர்), வெண்ணிற உடலுடையவர், தாளம்தப்பாது தனது உடுக்கையை அடிப்பவர் என்றெல்லாம் போற்றிப் பாடுகிறது.