logo
logo
தமிழ்
தமிழ்

புலியின் பாதங்களை வேண்டிய சிவ பக்தர்!

புலிப்பாதர் என்ற யோகி சிவனிடம் தனக்காக ஒரு விநோத வேண்டுதலை முன்வைக்கிறார்…! தான் கொண்ட சிவபக்தியின் காரணமாக அவர் வேண்டியது என்ன என்பதை இங்கே படித்தறியலாம்!

சிவன் அழிக்கிற கடவுள் என்றாலும், அவரே மிகவும் கருணையானவரும்கூட. சிவனின் கருணையை எடுத்துரைக்கும் பல கதைகள் யோக மரபில் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்புவதற்கு அரிதாக ஒருபுறம், மற்றொரு புறம் மிக விளையாட்டுத்தனமாய். ஒருபுறம் ஆச்சரியமிக்கவனாய், அதேசமயம் சாதரணமானவனாய் என சிவனின் அன்புள்ளத்தை பிரதிபலிக்கும் பல கதைகள் கூறப்பட்டுள்ளன.

புலிப்பாதர் என்ற யோகியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வியாக்ரபாதர் என்றும் அவரை அழைப்பர். அவர் மத்திய இந்திய பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு யோகி, சிவபக்தர். சிவனுக்கு அர்ப்பணிப்பதற்காக தினமும், காட்டிற்குச் சென்று வில்வ இலையைப் பறிப்பது அவரது வழக்கம். காட்டின் கடினமான நிலப்பரப்பும், முட்களும் அவர் பாதங்களைக் கிழித்தன. இது அவரது திருப்பணிக்குத் தடையாகக் இருந்தது. அதனால், எந்தவித தடையும் இன்றி சிவனுக்கு வில்வ அர்ப்பணம் செய்ய, தனக்கு புலிப்பாதங்களைத் தருமாறு சிவனிடம் வேண்டினார், சிவனும் அவர் கேட்டவுடனே அவருக்கு புலிநகங்களை அருளினார்.

புலிப்பாதங்களைப் பெற்றதால் இவர் புலிப்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

    Share

Get latest blogs on Shiva

Related Content

குரு பூர்ணிமா: முதலாம் குரு பிறந்த போது