நோய்களிலிருந்து விடுபட சிவன் உதவுவாரா?

article சிவன் பற்றி
மருத்துவம் என்றாலே பல்வேறு இரசாயன மருந்துகளை உட்கொண்டு நோயை சரிசெய்வது என்ற மனநிலை பரவலாகிவிட்டது. சிலர் வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருவதையும் பார்க்கிறோம். ஆதியோகி சிவன் வழங்கிச் சென்றுள்ள மருத்துவ விஞ்ஞானம் குறித்து எடுத்துரைக்கும் சத்குரு, அனைத்து நோய்களுக்கும் தீர்வாகும் சிவனின் ஒரு மருந்து பற்றியும் விவரிக்கிறார். நோய்களிலிருந்து விடுபட சிவன் உதவுவாரா? noikalilirunthu vidupada shivan uthavuvaara

சத்குரு:

சிவனின் மருத்துவமும், இசையும், அவன் தந்த யோகா அளவுக்கு பிரசித்தியாகவில்லை. சிவனுடைய மருத்துவத்தை இங்கு நாங்கள் பயன்படுத்துகிறோம். சிவனின் மருத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமா?

இவ்வுலகத்தில் உண்மையில் நோயால் பாதிக்கப்படுபவர்களை விட உடல்நலத்தால் தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கிக் கொள்பவர்களே அதிகம்.

நியூயார்க் நகரில், இந்த மருத்துவத்தினை செய்ய பிரச்சனை வரலாம். ஏனென்றால், அங்கு அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். சிவனின் முறைகளுக்கு அப்படி யாராலும் ஒப்புக்கொடுக்க முடியாது. இங்கு நமக்கு மருந்து ஒரு மீடியம்தான். வாயிற்குள் போட மாத்திரைகள் எதையும் தராவிட்டால், மருத்துவம் பண்ணவில்லை என்று எண்ணுவீர்கள். விரக்தி அடைவீர்கள். மேலும், வியாதியை அதிகமாக்கிக் கொள்வீர்கள். அதற்காக உங்களுக்கு மருந்து கொடுக்கிறோம். சிலரது பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையானதை செய்வோம். அதனால் மருத்துவர்களைக் கொண்டு சிலருக்கு மருத்துவம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஆன்மீக அமைப்புகள், சுகாதார நிறுவனங்களாக மாறியுள்ளன; யோகப் பயிலகங்கள் எல்லாம் சுகாதார நிறுவனங்களாகவே மாறிவிட்டன. அப்படித்தான் அந்நிறுவனங்களால் பிழைக்க முடிகிறது. நாம் அப்படி மாற விரும்பவில்லை. நாம் எப்போதும் எம்மை மருத்துவர்களாக காண்பித்துக்கொள்ள மாட்டோம். மருத்துவமனைகளையும் உருவாக்கமாட்டோம். ஏனென்றால், இவ்வுலகத்தில் உண்மையில் நோயால் பாதிக்கப்படுபவர்களை விட உடல்நலத்தால் தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கிக் கொள்பவர்களே அதிகம். நோயால் பாதிப்படைபவர்களை விட நலமாக உள்ளவர்களின் பாதிப்புகளே அதிகம். மக்கள் தங்கள் நலனையே பாதிப்பாக்கிக் கொள்கிறார்கள்.

நான் பேரானந்தத்துடன் இறப்பேன். நீங்களும் அவ்வாறே இறக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுதான் (சிவனின்) மருந்து.

அதனால், சிவனின் மருத்துவம்… தெலுங்கு மொழியில் ஒரு சொல்லாடல் உண்டு. “சர்வ ரோகாலுக்கு சாராயி மந்து.” அப்படியென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உலகில் உள்ள அனைத்து வியாதிகளுக்கும் சாராயம்தான் மருந்து என்று அர்த்தம். ஒருவகையில் இது உண்மைதான். நீங்கள் நினைக்கும் சாராயம் இல்லை… உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும், சிவ பித்தமே மருந்து. அவனைப் பருகினால், எல்லாம் சரியாகிவிடும் (சிரிக்கிறார்).

நாளைக்கே நீங்கள் இறக்க நேர்ந்தால் என்ன ஆகும்? நீங்கள் பேரானந்தத்தில் இறந்து போவீர்கள். அது பரவாயில்லை. நீங்கள் நூறாண்டு வாழ்ந்துவிட்டு இறப்பதைவிட பேரானந்த நிலையில் இறப்பது, எனக்குப் பெரியது. நான் பேரானந்தத்துடன் இறப்பேன். நீங்களும் அவ்வாறே இறக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுதான் (சிவனின்) மருந்து.

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!