"ஓம் நமசிவாய" அல்ல "ஆஉம் நம ஷிவாய" (Aum Namah Shivaya)

ஒருவரை தியானநிலைக்கு தயார் செய்வதற்கு உதவும் அடிப்படையான மந்திரம் இது. நம்மை தூய்மைப்படுத்தி தியானநிலைக்கு தயார் செய்வது மட்டுமின்றி, சாதாரணமாக தியானத்தன்மையில் நிலைத்திருக்க முடியாதவர்களையும் இந்த மந்திரம் துணைநின்று தியானத்தன்மையில் நிலைத்திருக்கச் செய்கிறது. அனைவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் பற்றி விளக்கும் சத்குரு, இது ஓம் நமசிவாய அல்ல "ஆஉம் நம ஷிவாய" என்றே உச்சரிக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார்.

ஈஷா பிரம்மச்சாரிகளால் பாடப்பட்டுள்ள இந்த "ஆஉம் நம ஷிவாய" மந்திர உச்சாடனம், வைராக்யா என்ற இசைத்தொகுப்பில் நான்காவதாக இடம்பெற்றுள்ளது. 

"ஆஉம் நம ஷிவாய" (Aum Namah Shivaya) மந்திரத்தை உச்சரிக்கும் சரியான முறை

சத்குரு:

ஆஉம் எனும் சப்தத்தை ஓம் என்று உச்சரிக்கக்கூடாது. முழுமையாக வாய் திறந்து, "ஆ" சப்தம் எழுப்பியவாறு மெதுவாக வாயை மூடும்போது "உ" சப்தமாகி "ம்" என்று முடியும். இதுவே மந்திரத்தை உச்சரிக்க வேண்டிய சரியான முறை. இது இயல்பாகவே உருவாகும் சப்தம். நீங்கள் முயற்சி செய்து உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் வெறுமே வாயைத் திறந்து ஒலி எழுப்பியபடி காற்றை வெளியே விட, "ஆ" சப்தம் எழுந்து, வாய் மூடும்போது, "உ" சப்தமாக மாறுகிறது. அதுவே முழுமையாக வாய் மூடிய நிலையில் "ம்" சப்தமாகிறது. "ஆ", "உ" மற்றும் "ம" இந்த மூன்றும் படைப்பிற்கு மூலமாக இருக்கும் ஒலிகளாக அறியப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் சேர்த்து உச்சரிக்கும்போது என்ன சப்தம் எழுகிறது..? "ஆஉம்". எனவேதான் "ஆஉம்"-ஐ அனைத்திற்கும் அடிப்படையான மூலமந்திரம் என்கிறோம். எனவே "ஓம் நமஷிவாய என்று உச்சரிக்கக்கூடாது, "ஆஉம் நம ஷிவாய" என்றே உச்சரிக்க வேண்டும்.

ஒருவரை தூய்மைப்படுத்தும் அதே நேரத்தில் நாம் அடையக்கூடிய எல்லா தியானநிலைகளுக்கும் அஸ்திவாரமாகவே நாம் இந்த மந்திரத்தை பயன்படுத்த விரும்புகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குறிப்பாக தமிழ் மக்கள் பலரும் நமசிவாய என்று சாதாரணமாக உச்சரிப்பதைப் பார்க்கிறோம். "நமஹ்" என முடியும் இடத்திலும் "ஷிவாய" எனத் துவங்கும் இடத்திலும் அழுத்தம் கொடுத்து உச்சரிப்பதே சரியான முறை.

சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி தங்களுக்குள் தேவையான அளவுக்கு சக்தி நிலையை ஏற்படுத்த முடியாதவர்களாகவே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். தங்களை தாங்களே அந்தவித செயல்பாட்டுக்கு கொண்டுவர 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு மந்திரத்தின் துணை தேவையாக இருக்கிறது. மந்திர உச்சாடனம் இல்லாமல் அவர்களால் தியானத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை.

shiva, om namah shivaya in tamil, ஓம் நமசிவாய, ஓம் நமச்சிவாய, download om namah shivaya mp3 song

"ஆஉம் நம ஷிவாய" உச்சாடனையின் பலன்கள்

அடிப்படையான மந்திரமான "ஆஉம் நம ஷிவாய" சில குறிப்பிட்ட கலாச்சாரங்களில், மஹாமந்திரம் என அழைக்கப்படுகிறது. பலவிதமான பரிமாணங்களில் "ஆஉம் நம ஷிவாய" மந்திரத்தை உச்சரிக்க முடியும். ஐந்து மந்திரங்கள் சேர்ந்து ஒரே மந்திரமாக இருப்பதால் பஞ்ச அட்சரங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் அமைந்திருக்கும் பஞ்ச பூதங்களை குறிக்கும் அதே நேரத்தில், இவை மனித உடலில் உள்ள ஐந்து முக்கிய சக்தி மையங்களையும் குறிக்கிறது. அந்த ஐந்து மையங்களையும் செயல்படுத்தும் வழிதான் இந்த மந்திர உச்சாடனம். இது ஒருவரை தூய்மைப்படுத்துவதில் மிகுந்த சக்தி வாய்ந்தது.

இன்னும் பல பரிமாணங்களில் இந்த மந்திரத்தை நாம் பார்க்க முடியும். ஒருவரை தூய்மைப்படுத்தும் அதே நேரத்தில் நாம் அடையக்கூடிய எல்லா தியானநிலைகளுக்கும் அஸ்திவாரமாகவே நாம் இந்த மந்திரத்தை பயன்படுத்த விரும்புகிறோம். "ஆஉம் நம ஷிவாய" என்பது கெட்ட வார்த்தையில்லை. நீங்கள் தாராளமாக உச்சரிக்கலாம். உச்சரிப்பதற்கு “நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்பதே கேள்வி. இது வேறு யாரையோ பற்றியல்ல. நீங்கள் வேறு யாரோ ஒருவரை அழைக்கவில்லை. உங்களை நீங்களே கரைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள், சிவன் அழிப்பவர் என்பதால் அவரை அழைக்கிறீர்கள். அழிப்பவரை அழைத்துவிட்டு அவர் உங்களை காப்பாற்றுவார் என்று நம்பிக்கொண்டு இருக்கலாமா? அது தவறுதானே?

ஆஉம் நம ஷிவாய" உச்சாடனை mp3 இலவச டவுன்லோடு (download Om Namah Shivaya mp3 song):

விழிப்புணர்வுடன் இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்யும்போது, ஒருவரின் உள்நிலை மண்டலத்தை தூய்மைப்படுத்துவதோடு தியானத் தன்மையையும் கொண்டுவருகிறது. ஐந்து பூதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் பஞ்சாக்ஷர மந்திரமான ‘ஆஉம் நம ஷிவாய’ மஹாமந்திர உச்சாடனையாகும்.

இலவச டவுன்லோடு

குறிப்பு:

  • 'வைராக்யா' இசைத்தொகுப்பை இலவசமாக டவுன்லோட் செய்யுங்கள்

vairagya chants