logo
logo

ஆதியோகி சிவன் - யோகத்தின் மூலம்

15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார்.

ஆதியோகி - சிவன்யோகத்தின் மூலம்

ஆதியோகி, தனிமனிதனின் உள்நிலை மாற்றத்திற்கான கருவிகளை வழங்கினார். தனிமனிதனின் மாற்றமே, உலக மாற்றத்திற்கு காரணமாய் அமையும். மனிதன் நல்வாழ்வும் முக்தியும் பெற, "உள்நோக்கி பார்ப்பது ஒன்றே வழி," என்பதுதான் அவரின் முக்கிய செய்தி. அறிவியல்பூர்வமான யோக முறைகளின் மூலம் மனித நல்வாழ்விற்கு வழிசெய்வதற்கான ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.

“அனைத்து மதங்களுக்கும் முன்தோன்றிய ஆதியோகியாம் சிவன், எந்நாட்டவருக்கும் பொருந்தும் விதமாய் வழங்கிய யோகமுறைகளை கொண்டாடிட, 112 அடி உயரத்தில் கம்பீரமான ஆதியோகி முகம்!”

சத்குரு

ஈஷா யோக மையத்தில் இருக்கும் 112 அடி உயரம் கொண்ட, பிரம்மாண்டமான ஆதியோகி சிலை, ஒருவர் தன்னுடைய தெய்வீக தன்மையை அடைய 112 வழிகள் இருப்பதை குறிப்பிடுகிறது. இந்த மஹாசிவராத்திரி நன்னாளில் வாருங்கள், தெய்வீகத்தின் அருளில் நனைந்திடுங்கள்.

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

சிவன் என்பவன் யார்: மனிதனா, வெறும் கதையா, அல்லது கடவுளா? (Shiva in Tamil)