உங்கள் வீட்டில் இருந்தபடியே மஹாசிவராத்திரியன்று சத்குருவுடன் இணைந்து, இந்த புனிதமிக்க இரவில் சிவனின் அருளைப் பெற்றிடுங்கள்.
(சத்குருவுடன்)
(விசேஷ இசை நிகழ்ச்சிகள்)
(ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்)
(யோகாவின் தோற்றத்தைக் கூறும் கண்கவரும் ஒளி -ஒலி காட்சி)
உங்கள் பகுதியின் நேரத்திற்கேற்ப இதில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் பகுதி நேரப்படி, மாலை 6 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் துவங்கலாம். நள்ளிரவு தியானம், உங்கள் பகுதியின் நேரப்படி நள்ளிரவிற்கு 20 நிமிடங்கள் முன்பாக உங்களுக்குத் துவங்கவேண்டும்.
நாங்கள் நேரலையில் ஒளிபரப்ப யூ-டியூப் செயலியை பயன்படுத்துகிறோம். சாதாரணமாக அலைப்பேசி அல்லது மேசைக்கணினியில் காணும்போது எந்த தடங்கலும் ஏற்படாது. ஒருவேளை தடங்கல் ஏற்பட்டால், உங்கள் செயலியில் வலைதள இணைப்பு அல்லது புரவுசரில் பிரச்சனை இருக்கலாம். இதை சரிசெய்ய கீழ்க்காணும் நடவடிக்கை பரிந்துரைக்கப்படுகிறது:
உங்கள் புரவுசரை ரிஃப்ரஷ் செய்யவும் (ரிஃப்ரஷ் பட்டன் அல்லது F5 பட்டனை அழுத்தவும்).
வேறு புரவுசரை பயன்படுத்த முயலவும். அதிகம் பயன்படுத்தப்படும் ஃபயர்ஃபாக்ஸ், க்ரோம் அல்லது சஃபாரி புரவுசர் சிறப்பாக வேலைசெய்யும். உங்கள் புரவுசரை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.
உங்கள் இணைய இணைப்பு வேலை செய்கிறதா என்று சரிபார்க்கவும். இணைப்பின் வேகம், 512kbps அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும்.
இதில் உங்கள் பிரச்சனை சரியாகவில்லை என்றால், இந்த பக்கத்தின் கீழ் வலதுபக்கம் உள்ள சாட் செயலியை பயன்படுத்தி எங்களை தொடர்புகொள்ளவும். தொழில்நுட்பரீதியான பிரச்சனைகளை சரிசெய்ய நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.
யூ-டியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் நேரலையில் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறோம். அதோடு பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
நேரலை நிகழ்ச்சி, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம், ரஷ்யன், ஸ்பேனிஷ், பிரஞ்சு, போர்த்துகீசியம் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட சீன மொழிகளில் ஒளிபரப்பப்படும்.
ஆம், யூ-டியூப் நேரலை ஒளிபரப்பு முழு HDயில் இருக்கும் (1080p).
யூ-டியூப் பிளேலிஸ்ட்டாக குறுகிய காலத்திற்கு நிகழ்ச்சியின் பதிவுகளைக் காணமுடியும். நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும்போது நீங்கள் அவற்றைக் காண விரும்பினால், அவ்வப்போது நீங்கள் இணைய பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்யவேண்டும், அப்போது பிளேலிஸ்ட்டில் புதிய வீடியோ பதிவுகளைக் காணலாம்.