logo
logo
சிவ கணங்கள், Ganas of Shiva

சிவகணங்கள் – மதியற்றவைகளா அல்லது தெய்வீகமானவைகளா?

யோக மரபில் சிவகணங்கள் அவரது நிரந்தர துணைகளாக பிரசித்தி பெற்றவை. ஆனால் அவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. இந்த வலைப்பதிவில், சத்குரு இந்த மர்மமான ஜீவன்களைப் பற்றிய விஷயங்களை வெளிப்படுத்துகிறார்.

சத்குரு: யோக மரபில், கணங்கள் அனைவரும் சிவனின் நண்பர்கள். அவர்கள் தான் எப்போதும் சிவனைச் சுற்றியே இருந்தவர்கள். சிவனுக்கு சீடர்கள், மனைவி மற்றும் அபிமானிகள் என பலர் இருந்தபோதிலும், அவரது தனிப்பட்ட நட்பு எப்போதும் கணங்களுடன் தான் இருந்தது. கணங்கள் விகாரமான, மதியற்ற ஜீவன்களாக விவரிக்கப்படுகின்றனர். அவர்களின் உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகள் விசித்திரமான இடங்களில் இருந்து வெளிவந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் விகாரமான, மதியற்ற ஜீவன்களாக விவரிக்கப்படுகிறார்கள். அவர்கள் நம்மிடம் இருந்து வேறுபட்டவர்களாக இருந்தனர்.

ஏன் அவர்கள் இவ்வளவு வித்தியாசமாக இருக்க முடிந்தது? இந்த வாழ்க்கையின் அம்சத்தை இப்போது ஏற்றுக்கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். சிவன் கூட எப்போதும் யக்ஷஸ்வரூபமாக விவரிக்கப்பட்டுள்ளார். ‘யக்ஷா’ என்றால் தெய்வீக ஜீவன். தெய்வீக ஜீவன் என்றால் வேறு எங்கிருந்தோ வந்தவர் என்று பொருள். சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, சிவன் திபெத்திலுள்ள ஒரு ஏரியான மானசரோவருக்கு வந்தார். இது டெதிஸ் கடலின் எஞ்சியவற்றில் ஒன்று, இது மனித நாகரிகங்களின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இன்று இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் உள்ளது, ஆனால் இது உண்மையில் ஒரு கடல், மேலே நகர்ந்து ஏரியாக மாறியுள்ளது.

கணங்கள் தான் சிவனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள்.

கணங்கள், சிவனின் நண்பர்கள், மனிதர்களைப் போல் இல்லை. அவர்கள் எந்த மனித மொழிகளையும் பேசவில்லை என்று தெளிவாகக் கூறப்படுகிறது. அவர்கள் முற்றிலும் இரைச்சலான ஒலிகளில் பேசினார்கள். சிவனும் அவரது நண்பர்களும் உரையாடும்போது, யாருக்கும் புரியாத மொழியில் பேசினார்கள். எனவே மனிதர்கள் அதை ஒரு குழப்பமான இரைச்சல் என்று விவரித்தனர். ஆனால் கணங்கள் தான் அவருக்கு மிக நெருக்கமானவர்கள்.

கணபதி தனது தலையை இழந்த கதை உங்களுக்குத் தெரியும். சிவன் வந்தபோது இந்த சிறுவன் அவரைத் தடுக்க முயன்றதால், சிவன் அவனது தலையை வெட்டினார். பார்வதி மிகுந்த வேதனையுடன் சிவனிடம் தலையை திரும்பவும் பொருத்தும்படி கேட்டபோது, அவர் வேறொரு ஜீவனின் தலையை எடுத்து அந்த குழந்தையின் தலையில் பொருத்தினார். இந்த ஜீவன் யானையாக விவரிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், யாரும் அவரை கஜபதி (யானைகளின் தலைவன்) என்று அழைக்கவில்லை. நாம் எப்போதும் அவரை கணபதி (கணங்களின் தலைவன்) என்றே அழைக்கிறோம். சிவன் தனது நண்பர்களில் ஒருவரின் தலையை எடுத்து அந்த சிறுவனுக்கு பொருத்தினார்.

கணங்களுக்கு எலும்புகளற்ற உறுப்புகள் இருந்ததால், இந்த சிறுவன் கணபதி ஆனார். இந்த கலாச்சாரத்தில் எலும்புகள் இல்லாத உறுப்பு என்றால் யானைத் துதிக்கை என்று பொருள், எனவே கலைஞர்கள் அதை யானையாக மாற்றினர் - ஆனால் உண்மையில் அவர் கஜபதி அல்ல, கணபதி. அவர் கணங்களில் ஒருவரின் தலையைப் பெற்றார், மேலும் சிவன் அவரை கணங்களின் தலைவராக்கினார்.

    Share

Related Tags

Get latest blogs on Shiva