சத்குரு, குரு பூர்ணிமா ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் மற்றும் முதல் யோகியான ஆதியோகி குருவாக மாறி எப்படி அனைத்து எல்லைகளையும் கடந்து தன்னை வளர்த்துக்கொள்வது என்பதற்கான செயல்முறையை இந்த நாளில் வழங்கினார் என்பது குறித்தும் இங்கு நமக்கு விளக்குகிறார். கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கும் ஒருவர் வாழ்க்கை மற்றும் இறப்பின் வரம்புகளைக் கடந்து செல்ல முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார். மேலும், ஒரு வருடத்தில் ஒவ்வொரு பௌர்ணமியும் எப்படி ஒரு தனித்துவமான குணத்தைக் கொண்டிருக்கிறது என்பதையும், முழு நிலவு அல்லது பௌர்ணமி, மற்றும் அமாவாசை ஆகியவை ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு எவ்வாறு குறிப்பிடத்தக்கவையாக இருக்கிறது என்பதையும் அவர் விவரிக்கிறார். மேலும் சந்திர மற்றும் சூரிய சுழற்சிகளைப் பயன்படுத்தி, எப்படி இயற்கையின் உதவியைப் பெற முடியும் என்பதற்கான ஒரு யோக முறை குறித்தும் விளக்குகிறார்.