logo
logo
தமிழ்
தமிழ்

ஆதியோகி சிவன் - ஒரு ட்ரண்ட் செட்டர்!

ஒரு காலத்தில் இந்தியாவில் பல கோவில்கள் சிவனுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டன. ஆனாலும், முன்னோர்கள் சிவனை தம் பாதுகாப்பிற்காகவோ, தம் வளமைக்காகவோ வணங்கவில்லை; தம் அழிவிற்காக வணங்கினர். அவர்கள், சிவன் தங்களின் குறுகிய வாழ்வை நிர்மூலமாக்கி முக்தி, விடுதலை, அருள்தர வேண்டினர்.

காற்றில் அலையோடும் கட்டுக்கடங்காத குழல். குலையாத மோனநிலையில் நிலைத்திருக்கும் அரைக்கண் பார்வை. அவரின் நேர்த்தியான உடல், தனித்துவமான ஓர் ஆடலசைவில்.

யார் இவர்?


புகைப்பவர், குடிப்பவர், போதையிலிருப்பவர், தீவிரமானவர் - விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதர். அடர்ந்த காடுகளில் மலைகளில் தன் விதிகளை தானே அமைத்து வாழ்பவர். ஆடலிலும் தவத்திலும் இலயித்திருப்பவர். உலகின் முதல்யோகி. சிவன் என அழைக்கப்படுபவர்.

மிக இயல்பான இவர், இன்றைய உலகின் இளைய தலைமுறையினருக்கு நவீனனாய் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை, குறிப்பாக இந்தியாவில். ரசிகர்களிலிருந்து பிரபல ஹிப்-ஹாப் பத்திரிக்கைகளின் தலையங்கம் வரை சிவன் மறுமுறை வலம் வருகிறார் - இம்முறை தனக்கே உரிய தனி பாணியில்.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் சிவனை தன் உடம்பில் பச்சை குத்திக் கொள்கின்றனர். விளையாட்டு நட்சத்திரங்கள் சிவனை மிக யதார்த்தமான கடவுள் எனக் கருதுகின்றனர். புதினங்கள் சிவனை கற்பனையான வேற்றுலகவாசி போல் சித்தரிக்கின்றன. ராக்ஸ்டாராய் கொண்டாடுகின்றன.

உண்மையில் ராக்ஸ்டார் என்னும் தளைகளில் எல்லாம் அடங்காதவர் சிவன். மிக தீவிரமான நடனர். அதேயளவு அசைவின்றி தவமேற்கும் துறவி. பனிபடர்ந்த இமாலயச்சாரலில் வாழும் முனிவன், ஆனாலும் அன்புமயமான கணவன், இருவரின் தந்தை. கடவுளரே வணங்கும் மஹாதேவன். பூதகணங்களின் அன்பிற்குரிய இறைவன். காதலின் தலைவன் ஆனாலும், காமதேவனை தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தவன்.

இவர் நல்லவரா? கெட்டவரா? சில வேளைகளில் அனைத்து நன்மைகளுக்கும் ஆதாரமாய் திகழ்கிறார். சில வேளைகளில் அதிபயங்கரமாய் அருகில் செல்ல முடியாத ஆக்ரோஷத்துடன் இருக்கிறார். படைக்கும் பிரம்மாவை போல் சாந்தமாகவோ, காக்கும் திருமாலை போல் புன்சிரிப்போடும் இவர் இருப்பதில்லை. சிவன் - அழிக்கும் கடவுள். இந்து மறைநூட்களின் குறிப்புப்படி இவர் அண்ட சராசரங்களின் வேலை முடியும்போது அவற்றை உருத்தெரியாமல் அழிக்கும் தாண்டவம் புரிபவர்.

"இந்தியா டுடே" பத்திரிக்கையின் பதிப்பாசிரியர், சிவன் பற்றிய தன் கட்டுரையின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்: "பிற மேற்கத்திய நாடுகளைப் போலவே, நகர்புற நவீன இந்தியா, தன் மரபுவழி சார்ந்த அம்சங்களை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. இந்திய இளைஞர்களுக்கு சிவன் யதார்த்தமானவன், இயல்பானவன். 21-ஆம் நூற்றாண்டால் ஏற்றுக்கொள்ள கூடிய, நவீன மாறுதல் கொண்ட, பழமையின் சின்னம் அவன்."

என்ன ஒரு மாற்றம் இது!


அமிஷ் த்ருபாதியின் "Shiva Trilogy" எனும் மூன்று தொகுதிகளை கொண்ட நூலை எடுத்துக்கொள்வோம். அதில் சிவன் மனிதனாக, கி.மு. 1900ல் - அதாவது இந்து சமவெளி நாகரிகம் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அமிஷின் நாயகனான சிவன், தன் மனைவி மேல் இருந்த அன்பாலும் உடனிருந்த மனிதர்கள் மேல் கொண்டிருந்த பாசத்தாலும் தூண்டப்பட்டவன். ஒரு தவறான அதிகார வர்க்கத்தை எதிர்த்து போரிட்டு கடவுள் போன்ற உன்னத நிலைக்கு தன் தொண்டர்கள் கண் முன்னே உயர்ந்தவன். இந்நூலின் மூன்று தொகுதிகளும் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் இந்நூலை திரைப்படமாக எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

சிவனின்பால் இருக்கும் இந்தப் பற்றுதல் ஒரு புது பிரமை அல்ல. ஒரு காலத்தில் இந்தியாவில் பல கோவில்கள் சிவனுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டன. ஆனாலும், முன்னோர்கள் சிவனை தம் பாதுகாப்பிற்காகவோ, தம் வளமைக்காகவோ வணங்கவில்லை; தம் அழிவிற்காக வணங்கினர். அவர்கள், சிவன் தங்களின் குறுகிய வாழ்வை நிர்மூலமாக்கி முக்தி, விடுதலை, அருள்தர வேண்டினர்.

சிவனைப் பற்றிய ஆன்மீக எண்ணம், காலத்தால் அழியாமல் இன்றும் வாழ்கிறது. ஒரு எழுத்தாளர் தன் வலைப்பதிவில்: "சிவனை நோக்கிய ஈர்ப்பு எதனால் எழுகிறதென்றால், அவன் பல்வேறு வேறுபாடுகளை ஒருசேர கொண்டவன். திருமணமானவன் என்றாலும் புலனடக்கிய யோகி. தீவிரமாய் நடனமாடுபவன் என்றாலும் அசைவற்று தவம் மேற்கொள்ள வல்லவன். தன் மனைவி சதியின் மரணத்தால் துன்பத்தின் எல்லைக்கே சென்றவன், என்றாலும் தன் மகன் கணேசனின் தலையை சுலபமாய் கொய்தவன். மனிதத்தன்மையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியவன். இந்த எழுச்சியூட்டும் பன்முகத்தன்மை கொண்டவனோடு ஒன்றிணைந்தால், இந்த பேரண்டத்துடனும் அதன் ஒவ்வொரு துகளோடும் ஒன்றிணைந்தது போல்," என்கிறார்.

சிவனை மனிதனாக, கடவுளாக அல்லது பழங்கதையாக பார்த்தாலும் சரி, அவனை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, அவனை ஒதுக்குவது மட்டும் சாத்தியமில்லை. அதனினும் கடினம் அவனை விவரிக்க முயல்வது. அவனை நெருங்க நெருங்க அவன் பற்றிய குழப்பங்களும் தீவிரமாகும். ஒருவேளை இதுவே இந்த "சிவன்" என்னும் அனுபவத்தைப் பற்றி அறியும் விருப்பத்தை பசுமையாய் நிலைத்திருக்க செய்கிறது போலும்.

அவனின் பல்வேறு அம்சங்கள் இன்று புறத்தூண்டுதலில் வேரூன்றியிருக்கும் தலைமுறையினரால்கூட அலட்சியம் செய்ய முடியாதவை. சிவனை பற்றிய ஆன்லைன் தேடல்கள் கடந்த சில வருடங்களில் அதிகமாகியிருப்பதை Google Trends நிரூபிக்கிறது. அவன் ஆண்மையோ, தீவிரமோ, எல்லாம் கலந்த தன்மையோ - எதுவாயினும் அவனைப் பற்றிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள், Tattoo என எதுவும் குறுகிய காலத்தில் மாறுவதாய் தெரியவில்லை.

    Share

Get latest blogs on Shiva

Related Content

சிவனின் பிறப்பு ரகசியம்!