மிகவும் ஆற்றல்வாய்ந்த ஒரு சக்திமூலத்தை தனக்குள் உள்வாங்கிக் கொள்ள, அதனை வலம் வருவதை பிரததட்சணம் என்கிறோம். நம் கலாச்சாரத்தில் இது தொன்றுதொட்டு நிலவிவரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. 11 டிகிரி அட்சரேகையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், இப்படி செய்வது இன்னும் கூடுதல் சக்திவாய்ந்ததாகும். ஆதியோகியின் அருளை அனைவரும் பெற்று, அதன்மூலம் ஆன்ம விடுதலைக்கான தனிமனிதரின் தேடுதலைத் துரிதப்படுத்த, சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்த பிரதட்சணம் உறுதுணையாய் இருக்கிறது.
இந்த ஆதியோகி பிரதட்சணத்தை செய்வதற்கு அரிசி, தூபம், பச்சை பயிறு, கருப்பு எள்ளு ஆகிய அர்ப்பணிப்புகளை ஒரு துணிப்பையில் பெற்றுக்கொள்ளவும் (ஆதியோகியின் உருவப்படம் போடப்பட்ட துணிப்பை விற்பனைக்குக் கிடைக்கும்). பிரதட்சணத்தைத் தொடங்குவதற்கு முன், ஆதியோகியின் முன், மூன்று சுற்று ‘யோக யோக யோகேஷ்வராய’ உச்சாடனம் செய்யவேண்டும். பின், யோகேஷ்வர லிங்கத்திற்கு தண்ணீர் அர்ப்பணம் செய்யவேண்டும் மஹாசிவராத்திரி நாளன்று, இதனைச் செய்ய இயலாது). அதன்பின் ஆண்கள் சூர்யகுண்டத்திற்கு செல்லவேண்டும். சூர்யகுண்டத்திலிருந்து பெறப்படும் ஒரு சொம்பு தண்ணீர் அவர்களின் தலை மீது ஊற்றப்படும்.
அங்கிருந்து த்ருமூர்த்தி பேனல் இருக்கும் இடத்திற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள உருளியில்/தூப மண்டபத்தில் தூபத்தை அர்ப்பணிக்கவும். தேவி கோவிலுக்குச் சென்று அங்கு பச்சைப்பயிறை அர்ப்பணிக்கவும். பெண்கள் சந்திரக்குண்டத்திற்கு செல்லவேண்டும். சந்திரக்குண்டத்திலிருந்து பெறப்படும் ஒரு சொம்பு தண்ணீர் அவர்கள் தலை மீது ஊற்றப்படும். அங்கிருந்து தியானலிங்கத்திற்கு சென்று, கருப்பு எள்ளை அங்கு அர்ப்பணிக்கவும். அதற்குபின், ஆதியோகிக்கு திரும்பச் செல்லவும். ஆதியோகியின் முன் அரிசியை அர்ப்பணித்து பிரதட்சணத்தை நிறைவுசெய்யவும். இது ஒரு சுற்று பிரதட்சணம்.
ஒவ்வொரு சுற்றிற்கும் அரிசி, தூபம், பச்சை பயிறு, கருப்பு எள்ளு ஆகியவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும். ஒரு வருடத்திற்கு எத்தனை சுற்று பிரதட்சணம் செய்யவேண்டும் என்பதை ஒருவர் தேர்வுசெய்து கொள்ளமுடியும். 1, 3, 5, 7, 9, 12, 18, 21, 24, 33, 48, 64, 84, 96, 108, 208, 308, 408, 508, 608, 708, 808, 909 or 1008 போன்ற எண்ணிக்கைகளில், சுற்றுகள் அமையவேண்டும். ஒரு வருடத்திற்கு எத்தனைச் சுற்றுகள் செய்ய ஒருவர் முடிவுசெய்கிறாரோ, அத்தனை சுற்றுக்களையும் ஒரு வருடத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும்.
பிரதட்சணையை நிறைவுசெய்யும் வரை, “யோக யோக யோகேஷ்வராயா,” என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செல்லவேண்டும்.
யோக யோக யோகேஷ்வராயா
பூத பூத பூதேஷ்வராயா
கால கால காலேஷ்வராயா
சிவ சிவ சர்வேஷ்வராயா
ஷம்போ ஷம்போ மஹாதேவாயா
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, எந்நேரத்தில் வேண்டுமென்றாலும் பிரதட்சணம் செய்யமுடியும். மஹாசிவராத்திரி நாளன்று, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பிரதட்சணம் செய்யமுடியும்.
நீங்கள் எத்தனை சுற்று பிரதட்சணம் செய்யப் போகிறீர்களோ, அதற்குத் தேவையான அர்ப்பணப் பொருட்களை தயார்செய்து வைத்துக் கொள்ளவும்.
ஆண்கள் பிரதட்சணத்தை துவங்கும் முன், தங்களது மேல் ஆடையைக் கழற்றிவிட வேண்டும்.
பிரதட்சணம் செய்யும்போது காலணிகள் அணியக்கூடாது.
பிரதட்சணம் செய்யும்போது, மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
ஒவ்வொரு பொருளையும் (அரிசி, தூபம், பச்சை பயிறு, கருப்பு எள்ளு) எவ்வளவு அர்ப்பணிக்க வேண்டும்?
நீங்கள் ஒவ்வொரு பொருளையும் எவ்வளவு வேண்டுமானலும் அர்ப்பணிக்கலாம்.
வீட்டிலிருந்து அர்ப்பணிப்புகளைக் கொண்டு வரலாமா?
கொண்டு வரலாம்.
பிரதட்சணம் செய்யும்போது காலணிகளை அணியலாமா?
கூடாது.
ஈஷா யோக மையத்தில் இந்த அர்ப்பணப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுமா?
வைக்கப்படும்.
சூரியகுண்டம்/ சந்திரகுண்டம் ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?
தேவையில்லை.
யோகேஷ்வர லிங்கத்திற்கு தண்ணீர் அர்ப்பணம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?
தேவையில்லை.
லிங்கபைரவி மூடப்பட்டிருக்கும் நேரத்தில் (மதியம் 1.20 முதல் மாலை 4.20 மணி வரை) அங்கு அர்ப்பணம் செய்யமுடியுமா?
அந்த நேரத்தில் லிங்கபைரவி முன் இருக்கும் லிங்கபைரவி குடியில் அர்ப்பணங்களை சமர்பிக்க முடியும்.
பஞ்சபூத ஆராதனையின்போது, தியானலிங்கம் மூடப்பட்டிருக்கும் அந்த நேரத்தில், அங்கு அர்ப்பணம் செய்யமுடியுமா?
அப்போது சர்வதர்ம ஸ்தம்பத்தின் முன் வைக்கப்படும் தியானலிங்க புகைப்படத்திற்கு முன் அர்ப்பணம் செய்யலாம்.
ஒருவர் எத்தனை சுற்றுகள் செய்யலாம்?
உங்கள் விருப்பப்படி எத்தனை சுற்றுகள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், சுற்றுகள் இந்த எண்ணிக்கைப்படி நடைபெற வேண்டும் – 1, 3, 5, 7, 9, 12, 18, 21, 24, 33, 48, 64, 84, 96, 108 போல…
தூபத்தை எவ்வாறு அர்ப்பணம் செய்யவேண்டும்?
த்ருமூர்த்தி பேனல் இருக்கும் இடத்தில், அதன்முன் வைக்கப்பட்டுள்ள உருளியில்/ தூப மண்டபத்தில் தூபத்தை அர்ப்பணிக்கவும்.
ஒவ்வொரு சுற்றின்போதும் அர்ப்பணங்கள் செய்யப்பட வேண்டுமா?
ஆம்.