பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

நீ இருக்கிறாயா

ஒளிமயமான காலையின் அழைப்பை ஏற்று

மல்லிகை மொட்டுகள் மலர்கின்றன -

நுனிகளில் நிற்கும் பனித்துளிகளின் அழகை

பகலில் நாம் பிரிந்துவிடக்கூடாது என்பதுபோல்


மண்ணின், மண்புழுவின் ஓயா உழைப்பிலிருந்து

இளைப்பாற சூரியன் நேரம் கொடுப்பதுபோல்

மனம்மயக்கும் நறுமணம் கமழ்வாள் ராத்திரிராணி

சந்திர ஒளிக்கு அழகு சேர்ப்பதுபோல்


இரவோ பகலோ, நம் சோக வாழ்வில்

அழகும் நறுமணமும் சேர்க்க பூமித்தாய்

அயராது உழைக்கிறாள்

ஓ மனிதனே! விண், மண், சமுத்திரத்தின்

பிரம்மாண்டத்தை ருசிக்கவும் நுகரவும் பார்க்கவும்

நீ இருக்கிறாயா?

- சத்குரு
Share This