ஈஷா சமையல்

கேரட் ஆப்பிள் பைனாப்பிள் மொறுமொறு சாலட்

தேவையான பொருட்கள்

சாலட் தயாரிக்க

1 பெரிய கேரட்

1 நடுத்தர அளவு ஆப்பிள்

½ கப் நறுக்கிய பைனாப்பிள்  

¼ கப் பொடியாக நறுக்கிய உலர்திராட்சை (அல்லது) பேரீட்சை

¼ கப் பொடித்த வேர்க்கடலை

½ கப் துருவிய தேங்காய்

¼ கப் வறுத்த எள்

சாலட்டுடன் கலப்பதற்கு

1 ஆரஞ்சு பழத்தின் சாறு

1 எலுமிச்சம் பழத்தின் சாறு

2 மேசைக்கரண்டி தேன்

சுவைக்கு கரகரப்பாக அரைத்த மிளகுத்தூள்

சுவைக்கு உப்பு

½ கப் ஆலிவ் எண்ணெய்

செய்முறை

  • கேரட்டை கழுவி, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.
  • ஆப்பிளை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • உலர் திராட்சை அல்லது பேரீட்சையை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • வேர்க்கடலையை வறுத்து, பிறகு சிறு துண்டுகளாக பொடிக்கவும்.
  • மெல்லிய தீயில் எள்ளை வறுக்கவும்.
  • கேரட், ஆப்பிள் மற்றும் பைனாப்பிள் துண்டுகளை ஒரு அகலமான கிண்ணத்தில் சேர்க்கவும். வேர்க்கடலை, உலர் பழங்கள், தேங்காய் மற்றும் எள்ளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • ஒரு சிறு கண்ணாடி கிண்ணத்தில், ஆரஞ்சு, எலுமிச்சை சாறுகள், தேன், உப்பு மற்றும் மிளகு இவைகளை கலக்கவும்.
  • ஆலிவ் எண்ணெயை பழங்கள் இருக்கும் கிண்ணத்தின் மேலாக மெல்லிய, சீரான கதியில் ஊற்றியவாறு, பழக்கலவையானது க்ரீம் போல ஆகும்வரை, கைவிடாமல் கிளறவும்.
  • சாலடை நன்றாக கலந்து பரிமாறவும்.