மண் காப்போம்

# மண் காப்போம் – ஒரு உலகளாவிய இயக்கத்தை கட்டமைப்பதற்கு, சமூக ஊடகம் எப்படி உதவுகிறது

விழிப்புணர்வான உலகம் தொடர்புடைய சமூக ஊடகம், 350 கோடி மக்களுக்கு மண் காப்போம் செய்தியைப் பரப்புவதற்கு உதவி செய்யும் ஒரு பெரும்பொறுப்பை அவர்களது கையில் எடுத்திருப்பதை ஆரம்பத்திலேயே அறிந்திருந்தது. ஆனால், உலகம் முழுவதிலும் இவ்வளவு மக்கள்தொகையினரைச் சென்றடைவதற்கான ஏதோ ஒரு வழி உண்டு என்றால், அது சமூக ஊடகம்தான் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

மண்ணைத் துளைத்துக்கொண்டு விதை முளைத்தபோது

2021 அக்டோபர் மாத இறுதியில், மண்ணில் ஏதோ ஒரு விஷயம் கொதிநிலையில் இருப்பதாக சமூக ஊடகக் குழுவில் ஒரு கிசுகிசு வளைய வந்து கொண்டிருந்தது. விரைந்தோடிய ஒரு மாதத்திலேயே, நவம்பர் 25ல் அது அதிகாரபூர்வமாக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் மண் காப்போம் இயக்கத்துக்காக ஒரு வீடியோ வெளியீடு இருக்கப்போகிறது. கடந்த இரண்டு வருடங்களாக, சத்குருவும், தன்னார்வலர்களின் ஒரு சிறு குழுவும், இந்த உலகளாவிய இயக்கத்தை பல்வேறு தளங்களில் ஒருங்கிணைக்க சப்தமில்லாமல் செயல்பட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போதிலிருந்து, இன்று வரை மண் காப்போம் இயக்கம் ஒரு பெரும் அற்புதமாக வளர்ந்து வந்துள்ளது.

கிளைபரப்பும் வேர்கள்  

2021 உலக மண் தினம் அன்று, சத்குருவின் ஒரு காணொளியுடன் பிரச்சாரம் தொடங்குகிறது. “ஆரம்பத்தில், எங்களிடம் இருந்ததெல்லாம் இந்த ஒரு வீடியோ மட்டும்தான், ஏனெனில் ஒவ்வொன்றும் எங்களுக்கு புதிதாகத்தான் இருந்தது,” என்று ரசிகா கூறுகிறார். இவர் விழிப்புணர்வான உலகம் சமூக ஊடக அவுட்ரீச் பொறுப்பிலிருக்கும் ஒரு தன்னார்வலராக இருப்பவர். அந்தக் காணொளியில் சத்குரு அவ்வளவு ஆற்றல் பொங்கப் பேசியுள்ள காரணத்தினால், நாங்கள் முன்னெடுக்கத் தேவைப்பட்ட ஒரு கூடுதல் வேகத்தை எங்களுக்கு வழங்குவதற்கு, அது உதவியது என்று நான் எண்ணுகிறேன். அவர் வெளிப்படையாக, அனைவரையும் சென்றடையும் விதத்தில் பேசுகிறார், ஆனால் அதேநேரம், அது உச்சந்தலையில் ஓங்கி அறைவதாகவும் இருக்கிறது.”

எதிர்பாராமல் அமைந்த இந்த இயக்கத்தின் தொடக்கத்தைப் போலவே, ரசிகா மற்றும் அவரது குழுவினரும் மிக வேகமாக ஒருங்கிணைந்தனர். “அந்த முதல் மாதம் ஒவ்வொருவருக்குமான கற்றல் அனுபவமாக இருந்தது, ஆனால் விரைவில் நாங்கள் ஒரு செயல்முறையை உருவாக்கினோம். எல்லாவற்றுக்கும் மேல், மக்களைச் சென்றடைவதில் சமூக ஊடகம் மிக விரைவானதும், எளிதானதுமாக இருக்கிறது. அத்துடன் நாங்கள் 350 கோடி மக்களைச் சென்றடைவதற்கு விரும்பினோம்!”

இப்பொழுது விழிப்புணர்வான உலகம் இயக்கத்துக்கு 43 மொழிகளில் டிஜிட்டல் இருப்பு உள்ளது. இந்தப் பக்கங்களுக்காக, அர்ப்பணிப்பான குழுவினர் ஓய்வில்லாமல் உள்ளடக்கங்களை (content) கடைந்தெடுக்கின்றனர். புதுமையான படைப்புக் கருத்துகள் மற்றும் நிகழ்ச்சிப் பதிவுகளிலிருந்து, நமது மண்ணின் நிலைமை குறித்து ஓங்கி அறையும் உண்மைகள் வரைக்கும், அவர்களின் தேடல் பரந்து விரிந்து செல்கிறது

மண் அல்லாதது எது?

உள்ளடக்கத்துக்குப் பின் இருக்கும் உத்தி மற்றும் கருத்துருவாக்கம் பற்றிக் கேட்டபொழுது, ரசிகா விளக்குகிறார், “ஒரு சிந்தனைத்தளத்தை நாங்கள் உருவாக்கியதுடன், ஒரு சில குறுந்தொடர்களையும் உருவாக்கத் திட்டமிட்டோம். இரண்டுமே பார்வையாளர்களை ஈடுபடுத்தவும், அவர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தவும் ஏற்படுத்தினோம்.”

இந்த குறுந்தொடர்களுள் #WhatsNotSoil என்ற தொடர் மிகவும் வெற்றிகரமானது. மக்கள் பயன்படுத்தும் அனைத்தும், புத்தகங்கள் இசைக் கருவிகள், மேலும் அவர்களுக்கு விருப்பமான ஆடைகள் மற்றும் கலையின் வெளிப்பாடுகள் வரை எல்லாமே, மண்ணிலிருந்து வருகிறது என்ற உண்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும்.

சில கருத்துருவாக்கங்கள் நன்றாக செயல்பட்டன, மற்றவை திட்டமிட்டபடி செயல்படவில்லை. “மண் சிற்ப ஓவியம்” அல்லது “மண் கைகள்” பதிவுகள் பற்றி பேசுகையில், “அது உரிய நேரத்தையும் பொறுத்திருக்கிறது,” என்கிறார் ரசிகா.” மக்கள் உள்ளடக்கம் உருவாக்குவதில் அதிக உற்சாகத்துடன் இருந்தனர். இந்தத் தொடருடன், பிறகு அதிகாரபூர்வமான பதிவு வெளியானதை விட, பயன்பாட்டாளர் உருவாக்கிய உள்ளடக்கம் அதிகமாக இருந்தது.

இருந்தபோதிலும், சமூக ஊடக பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து கடைசி 3 மாதங்களுக்குள், பின்பற்றுபவர்களும், தனிப்பட்ட பதிவுகளும் இணைந்து அதிகரித்தன. சமூக ஊடக உலகில், 1% ஈடுபாட்டு விகிதமே மகத்தானது. ஆனால் பிப்ரவரியில் இருந்து, பூமியின் நண்பன் (Earth Buddy) என்று ஆர்ப்பரித்து எழுந்தவர்களுடன் நிகழ்ந்த சத்குருவுடனான முதல் சந்திப்புக்குப் பிறகு, எங்களது பதிவுகளின் மீது 10 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபாடு கொண்டனர் – அது விண்ணைத் தொட்டது!” என்று ஆச்சரியமடைகிறார் ரசிகா.

கிளை பரப்பி, மக்களிடையே சென்றடைவது

மண்ணுடன் உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்க உதவும் கற்பனைத்திறன் மிகுந்த பதிவுகளுக்கும் மற்றும் சூழலின் அபாயத்தை உணர்த்தும் உறுதியுடன் இணைந்த வேடிக்கையான பதிவுகளுக்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவது இந்தக் குழுவினர் எதிர்நோக்கிய முக்கியமான சவால்களுள் ஒன்று.

“ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தொடங்கியதில் இருந்து இப்போது வரை வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ளோம். சத்குரு இதற்காக அவரது உயிரைப் பணயம் வைத்துள்ளார்,” என்று சத்குருவின் 30,000 கிமீ மோட்டார் வாகனப் பயணம் குறித்து பேசுகையில், ரசிகா கூறுகிறார். “ஆகவே, சமூக ஊடக உள்ளடக்கத்தை மேலும் கூடுதலான முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் உணர்கிறோம். அதற்காக கற்பனைத்திறனான மற்றும் வேடிக்கையான விஷயங்களுக்கு “இடமில்லை” என்று கூறுவதல்ல. ஆனால், பிரச்சனையை மையப்படுத்தும் அதிக விவரிப்புகள் மற்றும் அதைக் குறித்து அதிகம் பேசுவதையும் நோக்கி நாமும் நகரத் தொடங்கவேண்டிய தேவை இருக்கிறது.”

ஐரோப்பா வழியாக சத்குருவின் பயணம் தொடரும்போது, அந்தந்த இடங்களுக்கு ஏற்றவாறு, குறிப்பிட்ட தேசத்தின் பிரச்சனைகளுக்கு ஆழமான முக்கியத்துவம் அளித்து, அதே தருணத்தில் நிலவாரி பிரச்சனைகளுக்கு உலகளாவிய கவனம் ஈர்க்கும் பாணியிலான உள்ளடக்கத்தை ஊடகக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, அந்தத் திசையில் உள்ளடக்கம் செல்லத் துவங்கிவிட்டது

மண்ணுக்கு ஒரு நடனம் – ‘மண் பாடல்’

கடினமான உண்மை நிலவரங்களை எடுத்துக்கூறுவதன் வாயிலாக மட்டுமே 350 கோடி மக்களையும் சென்றடைய முடியாது – இதை ஆரம்பத்திலிருந்தே ஊடகக் குழு உணர்ந்திருந்தது.

“இசையும், நடனமும் மிகவும் பொதுவானது; சட்டென்று மக்கள் இணைந்துவிடுகின்றனர்” என்று மஹாசிவராத்திரி அன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட “மண் பாடல்” குறித்து ரசிகா கூறுகிறார்.

அந்த இரவு, எல்லா சமூக ஊடகத் தளங்களிலும், பாலோயர்ஸ் புதிய அலையாக எழுந்தனர். அவர்களின் ஈடுபாடு குறையாமல் இருப்பதற்கு “டான்ஸ்‌ ரீல்” சவால் விடுக்கப்பட்டது.

சமூக ஊடகத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்துபவர்களை சந்திக்கும் பொறுப்பிலிருக்கும் பவன் குமார் விவரிக்கிறார்,” சமூக ஊடகத்தில், ஆட்டமும் இசையும் அதிகளவு சென்றடைகிறது. அது ஒரு நல்ல நுழைவாயில். ஏதோ ஒரு விஷயம் ஏன் வைரலாகிறது என்பதை ஒருவர் கவனித்துவிட்டால், அவர்கள் இயல்பாகவே அது தொடங்கிய இடத்துக்கு வருகின்றனர். அதை நிகழச் செய்வதுதான் எங்களது நோக்கம்.”

மண்ணின் ஒலி

உலகெங்கும் இருக்கும் தன்னார்வலர்கள் விமானங்கள், இரயில்கள், விமான நிலையங்கள், மற்ற பொது இடங்களில் மண் பாடலை பாடிக்கொண்டு, இயக்கத்துக்கு பொதுவெளிகளில் கவனம் ஈர்க்கின்றனர். சமூக ஊடகத்தில் தாக்கம் உண்டாக்குபவர்களைச் சென்றடைவதற்கும்கூட அது உதவுகிறது. ஏற்கனவே அவர்களுள் பலரும் மண் காப்போம் ஆட்டத்தின் சவாலை மேற்கொண்டுள்ளனர்.

“ஏதோ ஒரு வழியில் சத்குருவுடன் தொடர்புகொண்டு, ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் ஐந்தாயிரம் நபர்களை சென்றடைய நாங்கள் விரும்புகிறோம். மண் காப்போம் இயக்கத்தில் அவர்கள் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்கு லலலேலலே லலலேலலேலே... ஆட்டம் நிச்சயமான வழிகளுள் ஒன்றாக உள்ளது,” என்கிறார் பவன்.

ஊடகத் தாக்கம் ஏற்படுத்தும் பலரும், மண் காப்போம் செய்தியால் உந்தப்பட்டும், சூழலின் அவசரத்தை உணர்ந்தவர்களாகவும் இயக்கத்தில் இயல்பாகவே இணைந்துகொண்டுள்ளனர். ஆனால் பவனின் அனுபவத்தில் இது எதிர்பாராதது அல்ல. “சத்குரு சாலையில் செல்லும்போது, அது நூறு மடங்கு அதிகரிக்கப்போகிறது. நதிகளை மீட்போம் இயக்கத்தின்போது இதைத்தான் நாங்கள் கண்டோம், “அவர் நினைவுகூர்கிறார். “அப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்தது மற்றும் இந்த முறை, மண்ணைக் காப்பதற்காக முழு உலகமும் இணையும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.”

நாம் அதனை நிகழச் செய்வோம்!

பவன் குமார், ரசிகா, மற்றுமுள்ள ஒட்டுமொத்த குழுவும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை ஆழமாக உணர்கின்றனர். பவன் மிகச் சரியாக கூறுவதைப்போல், “இணைத்துக்கொள்ளுதலைப் பற்றி சத்குரு கூறுவதெல்லாம் இதுதான் – இன்னமும் பிறந்திராதவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பற்றி சிந்திப்பது. அது அவ்வளவு பெருமைக்குரியதும், மகத்தான பொறுப்புமாகவும் இருக்கிறது.”

இதனை நிகழச் செய்வதற்கு ஒட்டுமொத்த குழுவும் ஒன்றாக இணைந்து வருவதற்கும்கூட இந்த தன்னார்வ முனைப்பு உதவியுள்ளது – உண்மையில் மண் காப்போம் இயக்கம் குறித்த செய்தி அனைத்தும் இதுதான்.

பவன் கூறுவதற்கிணங்க, “இப்போதுதான் மண் காப்போம் இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில், அது உலகத்தையே தீப்பிடிக்கவைக்கப் போகிறது!”

savesoil.org/join