மனித மூளையானது மேற்கொண்டு பரிணாம வளர்ச்சி அடைய முடியாது என்ற உண்மையை பல வருடங்களுக்கு முன்பே நரம்பியல் விஞ்ஞானிகள் திட்டவட்டமாக அறிவித்தனர். மூளையை இன்னும் நன்றாக உங்களால் பயன்படுத்தத்தான் முடியுமே தவிர, அது மேலும் கூடுதலாக வளர்ச்சியடைய முடியாது. கருத்துரீதியாக, மூளையின் திறனை அதிகரிப்பதற்கு அதன் அளவையோ அல்லது நரம்பணுக்களின் எண்ணிக்கையையோ அதிகரிப்பதால் மட்டுமே மூளையை பரிணாம வளர்ச்சி பெறச் செய்யமுடியும். நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், தெளிவு இல்லாமல் போகும். நரம்பணுக்களின் அளவை அதிகரித்தால், உடலால் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமான சக்தி தேவைப்படும்.
மனித மூளை ஏன் மேற்கொண்டு வளர்ச்சியடைய முடியாது
மனித மூளை மேற்கொண்டு வளர்ச்சியடைய முடியாது, ஏனென்றால் பௌதீக விதிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நரம்பியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரிய மண்டலத்தின் இயக்கவியல் மாற்றமடைந்தால் தவிர, அதாவது பூமி மீது பௌதீக விதிகள் மாற்றமடைந்தால் தவிர, உடலளவில் மனிதர்கள் மேற்கொண்டு வளர்ச்சியடைய முடியாது என்று ஆதியோகி கூறுகிறார்.
மிகத் தீவிரமான, முழுமுனைப்புடன் செயல் செய்வதற்கு நீங்கள் சம்மதித்தால், உங்கள் மூளையை நாம் மறு இணைப்பு செய்யமுடியும்.
ஆனால், பௌதீகமல்லாத வழிகளில் நீங்கள் பரிணாம வளர்ச்சி அடையமுடியும். தற்போது நீங்கள் இருக்கும் விதம் 100% முடிவானது அல்ல. நீங்கள் முயற்சித்தால், தற்போது நீங்கள் வாழும் எல்லைகளை உங்களால் கடந்து செல்லமுடியும். அதுதான் ஒரு மனிதருக்கான அதிகபட்சமான இயக்கவியலும், படைப்பாற்றல் செயல்முறையுமாக இருக்கிறது.
உங்கள் மூளையை மறு இணைப்பு செய்வது எப்படி செயல்படுகிறது
நியூரோப்ளாஸ்டிசிட்டி என்பது உங்கள் மூளையை முழுவதுமாக மறு இணைப்பு செய்வது. யோக முறைகளில் நாம் எப்போதும் அதை கூறிக்கொண்டிருக்கிறோம். மிகத் தீவிரமான, முழுமுனைப்புடன் செயல் செய்வதற்கு நீங்கள் சம்மதித்தால், உங்கள் மூளையை நாம் மறு இணைப்பு செய்யமுடியும். அதன் விளைவாக, 24 மணி நேரத்துக்குள் நீங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள், வித்தியாசமாக உணர்கிறீர்கள், வித்தியாசமாக செயல்படுகிறீர்கள். வித்தியாசமான விதத்தில் ஒரு எண்ணத்தைப் பண்படுத்துவதன் மூலம், வெவ்வேறு விதமான செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே, உங்கள் மூளையை நீங்கள் மறு உருவாக்கம் செய்யமுடியும். குறிப்பிட்ட பயிற்சிகளைச் செய்வதால், சில நாட்கள் அல்லது வாரங்களிலேயே, மூளையின் வெவ்வேறு பகுதிகளின் நியூரான் அணுக்கள் அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது.
இன்னர் இஞ்ஜினியரிங் செயல்முறையின் ஒரு பகுதியாகிய, எளிமையான 21 நிமிட ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்யும் மக்களிடம் நாம் அதை நிரூபித்துள்ளோம். இந்தப் பயிற்சியை மூன்று மாதங்களுக்கு அதிகமாக நீங்கள் செய்கிறீர்கள் என்றால், மூளையின் நியூரான் அணுக்களின் உற்பத்தியானது, வழக்கத்தைக் காட்டிலும் சுமார் 240% அதிகமாக இருப்பதை, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
யோக வழிமுறைகளில் “பயோஹேக்கிங்” – மூளைத் திறன் அதிகரித்தல்
ஒவ்வொருவரும் சற்று அதிக புத்திசாலித்தனத்துடன் இருக்கலாம் – மேலும் அதிகமாகக்கூட இருக்கலாம், ஏனென்றால் உங்களது முப்பது அல்லது நாற்பதுகளில் மூளையில் நியூரோ செல்களின் பெருக்கம் வேகம் குறையத் தொடங்குகிறது. அதாவது புதிய நியூரான்களை விட, இறந்துவிடும் நியூரான்கள் அதிகமாக இருக்கின்றன.
மூப்படைவதை நிறுத்தவோ அல்லது பின்னோக்கச் செய்வதுகூட ஷாம்பவியால் இயலும். இது விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சியின் மூலம் மருத்துவக் கழகங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
நீங்கள் தினமும் ஷாம்பவி பயிற்சி செய்தால், இறந்துபோன நியூரான்களுக்கு பதிலான புதிய மாற்று நியூரான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதாவது, மூப்படைவதால் உங்களது புத்திசாலித்தனம் குறையவேண்டியதில்லை. ஷாம்பவி, ஓஜஸ் உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுடன் உள்ளது. இது சக்தியின் பௌதீக நிலை கடந்த ஒரு பரிமாணம். உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும், அதனுடன் சுற்றிலும் மூடுவதற்கான போதிய ஓஜஸை நீங்கள் உற்பத்தி செய்தால், நீங்கள் ஆரோக்கியத்தில் துள்ளுவீர்கள்.
மூப்படைவதை நிறுத்தவோ அல்லது பின்னோக்கச் செய்வதுகூட ஷாம்பவியால் இயலும். இது விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சியின் மூலம் மருத்துவக் கழகங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தினமும், உங்கள் உடலின் பழைய செல்கள் இறந்துகொண்டும், புதிய செல்கள் பிறந்துகொண்டும் இருக்கின்றன. பொதுவாக, ஏழிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒருமுறை, முப்பதிலிருந்து நாற்பது ட்ரில்லியன் பழைய செல்களுக்கு பதிலாக முற்றிலுமாக புதிய செல்கள் உருவாகின்றன. அதன் பொருள், ஒவ்வொரு ஏழிலிருந்து பத்து வருடங்களுக்கும், உங்களுக்கு உண்மையில் ஒரு புதிய உடல் கிடைக்கிறது.
உங்கள் செல்லுலார் வயதை, ஷாம்பவி எப்படி பின்னோக்கச் செய்கிறது
உடலில் பழைய செல்கள் இறந்து, புதிய செல்கள் பிறக்கும் இந்த புத்துயிரூட்டும் செயல்முறையை ஷாம்பவி மஹாமுத்ரா பெரிதும் மேம்படுத்துகிறது. ஆறு வாரப் பயிற்சிக்குள், உங்கள் உடலின் வலிமை, சக்தி, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், மற்றும் உங்கள் உடலை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் போன்ற அம்சங்கள் உங்கள் காலவரிசைப்படியான வயதைவிடக் குறைந்தபட்சம் பதினெட்டு மாதங்கள் இளமையாக இருக்கும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு நீங்கள் ஷாம்பவி பயிற்சி செய்தால், உங்கள் காலவரிசைப்படியான வயதைக் காட்டிலும் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் இளமையாக இருப்பீர்கள். நீங்கள் இரண்டரை வருடங்கள் இடைவெளி இல்லாமல் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்தால், உங்கள் வயதை விடக் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்து வருடங்கள் இளமையாக இருப்பீர்கள்.
சரியான விதத்தில் புத்துணர்வு அளிப்பதால் ஒரு நபரின் செல்லுலார் வயதைக் குறைக்கமுடியும் என்பது மருத்துவரீதியாக நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருவரது உடலிலும் மாற்று செல்கள் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு சக்தி நிரம்பியவராகவும், எவ்வளவு இளமையாகவும் உணர்கிறீர்கள் என்பதை, அது என்ன வேகத்தில் நிகழ்கிறது என்பது முடிவு செய்கிறது. இளமை என்பது வருடங்கள் குறித்த கேள்வி அல்ல – நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் மற்றும் உங்களால் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கமுடிகிறது என்பதுதான் கேள்விக்குரியது. உடலுக்கு புத்துயிரூட்டும் இந்த செயல்முறையை, குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் மூலம் மேம்படுத்த முடியும்.