ஆதியோகியை நோக்கி செல்லும் லிங்கபைரவி மஹா யாத்திரையை சத்குரு காண்கிறார்.
பக்தர்கள் லிங்கபைரவி உற்சவ மூர்த்தியை லிங்கபைரவியின் இருப்பிடத்திலிருந்து 112 அடி ஆதியோகிக்கு கொண்டு வருகிறார்கள்.
2022 மஹாசிவராத்திரிக்கு சத்குரு அனைவரையும் வரவேற்கிறார்
மஹாசிவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி சத்குரு பேசுகிறார்
பேரழகுடனும் அருளுடனும் ஜொலிக்கும் 112 அடி உயர ஆதியோகி
சத்குரு உட்பட அனைவரையும் இசைக்கலைஞர்கள் எழுந்து நடனமாட வைத்தனர்
மண் காப்போம் - இதை நிகழ்த்திக் காட்டிட அனைவரையும் சத்குரு அழைக்கிறார்!
சத்குரு மண் காப்போம் இயக்கத்தை குறிப்பிட்டு சொல்கிறார். நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்களா?
சத்குரு மஹாசிவராத்திரி இரவில் கம்பீர தோற்றம் கொண்ட காளை மாட்டிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்
அங்காராக் மஹந்தா, பப்போன் என இசையுலகில் அறியப்படும் இவர், நாட்டுப்புற இசையுடன் நவீன இசையைக் கலந்து வழங்கும் தனது தனித்துவமான இசையால் நம்மை பரவசப்படுத்துகிறார்.
நேர்த்தியான நடன அமைப்புடன் உன்னதமான அபிநய வெளிப்பாடுகளை வழங்கிய ஈஷா சம்ஸ்கிருதி
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவும் ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷியும் இணைந்து வழங்கிய இசை
சத்குரு தனது உற்சாகத்தின் வெளிப்பாடாக நடனமாடுகிறார்
ருத்ராட்ச தீட்சைக்காக சுமார் ஐம்பது லட்சம் ருத்ராட்சங்களை சத்குரு பிரதிஷ்டை செய்கிறார்
சத்குருவுடன் நள்ளிரவு தியானத்தின் போது, தனது முழு பொலிவுடனும் அழகுடனும் ஆதியோகி ஜொலிக்கிறார்
சத்குரு தனது நகைச்சுவை உணர்வுடன் கூடிய ஞான உரைகளால் நிகழ்வை சிறப்பாக்குகிறார்
இரவு முழுவதும் தொடரும் நடனம்
கார்த்திக், சந்தீப் நாராயணன் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து மண்ணைப் பற்றிய மனதைத் தொடும் பாடலை வழங்குகிறார்கள்
பிரதிபா சிங் பாகேல் பாப்பனுடன் மேடையில் இணைகிறார்
ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற மானசா வாரணாசி கொண்டாட்டங்களை ரசிக்கிறார்
மச்செல் மாண்ட்டனோ, “King of Soca,” தனது உத்வேகமும் உற்சாகமும் மிக்க துள்ளல் இசை மூலம் அனைவரையும் கவர்ந்தார்
துடிப்பும் பன்முக கலாச்சாரமும் கொண்ட கோரஸ் எனப்படும் சேர்ந்திசை மச்செலுடன் இணைகிறது
மஹாசிவராத்திரி பங்கேற்பாளர்கள் சத்குருவுடன் நடனத்தில் இணைகிறார்கள். உங்களால் சத்குருவைக் காண முடிகிறதா?
சத்குரு மண் காப்போம் ஸ்டிக்கர்களை ஸ்டைலாக அணிகிறார்.
மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் 2022ம் ஆண்டு மஹாசிவராத்திரியை சத்குருவின் முன்னிலையில் கொண்டாடினார்.
சத்குரு பாடகர் கார்த்திக்குடன் மேடையில் இணைகிறார்
மக்களிடையே நடை மேடையில் சத்குரு ரேம்ப் வாக் செய்யும் நேரம்!
ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி சிவன் பக்தி பாடல்களின் மிகப்பெரிய தொகுப்பால் அனைவரையும் தன் வசப்படுத்துகிறார்.
சத்குரு நிகழ்த்தும் சிறப்பு நள்ளிரவு தியானத்தில் கங்கனா ரனாவத் பங்கேற்கிறார்
நள்ளிரவு தியானத்திற்குப் பிறகு, சத்குரு ஆதியோகிக்கு ஆரத்தியை அர்ப்பணிக்கிறார்.
ஆதியோகி திவ்ய தரிசனத்தின் பிரமிக்க வைக்கும் ஒளி-ஒலி காட்சி
இரவுக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் கலைஞர்கள் மேடையில் ஒன்று கூடி, மண் வளத்தை காக்க வேண்டியதன் அவசியத்தைப் பாடுகிறார்கள்
கேரள நாட்டுப்புற நடனத்தின் வண்ணமயமான காட்சி
ஐஸ்வர்யா நிகம் தன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பாடுகிறார்
பார்த்திவ் கோஹில் தனது உணர்ச்சிமிக்க குரல் வளத்தால் உற்சாக சூழலை உருவாக்குகிறார்
தீபாலி சஹாய் மஹாசிவராத்திரி மேடையில் போஜ்புரி இசையை கொண்டு வருகிறார்
ஹிமானி கபூர் தனது மெல்லிசைக்கு பார்வையாளர்களை தலையசைக்கச் செய்கிறார்
மாஸ்டர் சலீம் தனது ஆத்மார்த்தமான சூஃபி பாடல்கள், சுவாரஸ்யமிக்க சிறப்பு இசை உருவாக்கங்கள் மற்றும் சக்திவாய்ந்த குரல் வளத்தால் அனைவரையும் பரவசப்படுத்துகிறார்.
கிரிஸ்ட்ஜான் மற்றும் கமெலிஜா ஆகியோர் ஒரு கலை நயமிக்க வயலின் டூயட் வழங்குகிறார்கள்
மங்க்லி மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை அதிகாலையில் அனைவரையும் எழுந்து நடனமாட வைக்கின்றன
அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஜமாப் டிரம்மர்கள் உள்ளூர் கலாச்சாரத்தின் ஆற்றல்மிக்க வாத்தியக் கலை வடிவத்தை வழங்குகிறார்கள்.
மஹாசிவராத்திரி 2022, பரவச நிலையும் பேரமைதியும் நிறைந்த ஓர் இரவாக அமைந்தது