த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபசம்ஹாரம் ஏக வில்வம் ஷிவார்ப்பணம்
சிவனுக்கு வில்வ பத்ரம் வழங்குகிறேன். இந்த இலை சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களை உள்ளடக்கியது. இந்த இலை மூன்று கண்கள் போன்றது, சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பு. இது மூன்று ஆயுதங்கள் போன்றது. இது முந்தைய மூன்று பிறப்புகளில் செய்த பாவங்களை அழிப்பவை. வில்வ பத்ரமுடன் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.
அகண்ட வில்வபத்ரேன பூஜிதே நந்திகேஷ்வரே
ஷுத்யந்தி சர்வ பாபேப்யோ ஏக வில்வம் ஷிவார்ப்பணம்
சிவனுக்கு வில்வ பத்ரம் வழங்குகிறேன். நந்திகேஷ்வரருக்கான பூஜையை நான் அவருக்கு வில்வ பத்திரத்தினால் முடிக்கிறேன், இதனால் பாவத்திலிருந்து விடுபடுகிறேன்.
வில்வ இலையின் கீழ் பகுதி பிரம்மா, நடுத்தரமானது விஷ்ணு மற்றும் மேல் பகுதி சிவன். வில்வ பத்ரத்தால் சிவனுக்கு பூஜை செய்கிறேன்.
ஆசிரியர் குறிப்பு: பில்வாஷ்டகம் த்ரிகுன் இசைத்தொகுப்பின் ஒரு பகுதியாகும். இது, Isha Downloads இணையதளத்தில் வாங்கவும், பதிவிறக்கவும் கிடைக்கிறது.