பிள்ளைப்பருவம் முழுமையும் கனவுகள் -
மரமேற, மலையேற,
நிலவுக்கோ செவ்வாய்க்கோ
பறந்து செல்ல...
பதின்பருவமும் தெளிவான கனவுகள் -
உடலின் சுரப்பிகளால் உந்தப்பட்டு.
விளைவு இதயத்தின், இடையின் வேதனைகள்
காதலின் காமத்தின் வேதனைகள்.
முதிர்பருவத்திலோ பல தொல்லைகள் -
வெற்றிக்கான கனவுகள்
தோல்வியின் பயங்கள்
வாழ்வை மேம்படுத்தும் எனத் தோன்றும்
வளம், பணம், உடைமை பற்றி கனவுகள்.
பிள்ளைகள், அவர் பிள்ளைகள் என கனவுகள்
அவர் மூலம் உங்களுக்குத் தடைப்பட்ட
மகிமைகள் சாதனைகளை
நிறைவேற்றும் கனவுகள்
கனவு காண்பதை நிறுத்தி
படைப்பில் அதன் மூலத்தில்
எப்போது வேரூன்ற போகிறாய் - தவறினால்
இவ்வாழ்க்கை என்றென்றும்
கனவாகவே தங்கும்
ஆம் - உனக்கொரு கனவுள்ளது
நிறைவேறாத இக்கனவுகளால்
முட்டாளென நீ உணர்வாய்
நிறைவேறிவிட்டாலோ
அடிமுட்டாளாய் நீ உணர்வாய்