நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் குறித்த ஒரு கண்ணோட்டம்

குணால் நய்யார் சத்குருவுடன் கர்மா பற்றி உரையாடுகிறார்

22
மே

லாஸ் ஏஞ்சல்ஸில் “The Big Bang Theory” புகழ் நடிகர் குணால் நய்யார் சத்குருவை சந்தித்தார். இந்த உரையாடல் சத்குருவின் சமீபத்திய புத்தகமான "கர்மா"வை மையமாக வைத்து அமைந்தது. கர்மா என்பது நம்மிடமிருக்கும் மிகப்பெரிய அதிகாரம் என்றும், அதை விழிப்புணர்வுடன் கையாள்வது ஒருவர் பந்தங்களில் சிக்கிக்கொள்ளாமல் முழுமையான ஈடுபாட்டுடன் வாழ வழிவகுக்கும் என்றும் சத்குரு விளக்கினார்.

சத்குரு சத்சங்கம் - முழு நிலவில் அருள் மடியில்

26
மே

கலிபோர்னியாவின் சாட்ஸ்வொர்த்தில் ஒரு அழகிய நிலப்பரப்பின் பின்னணியில், சிறப்புமிக்க புத்த பூர்ணிமா தினத்தன்று சத்குருவுடன் ஒரு சிறப்பு ஆன்லைன் சத்சங்கம் நடைபெற்றது. கௌதம புத்தரின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியதோடு, சத்குரு, ஒரு சக்திவாய்ந்த தியான செயல்முறையை குறிப்புகளுடன் பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார்.

விஷேன் லக்கியானியுடன் மைண்ட்வேலி ஒலிபரப்பு

10
ஜூன்

கல்வி தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்வேலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஷேன் லக்கியானி அவர்கள் ஒரு எழுத்தாளராகவும், தொழில் முனைவோராகவும் மற்றும் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் விளங்குகிறார். ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலில், விஷேன், சத்குருவுடன் பல்வேறு தலைப்புகளில் கேள்விகளை முன்வைத்தார். இதில் சமுதாயத்தில் திரும்பத் திரும்ப கடைபிடிக்கப்படும் விஷயங்கள், தனித்தன்மை எனும் மாயை மற்றும் கர்மாவின் மேற்கத்திய பார்வை ஆகியவை அமைந்தன.

மனிதன் ஒரு வளமல்ல

11
ஜூன்

“மனித வள மேலாண்மை குறித்த பாரம்பரிய அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைக்கும் விதத்தில், 'மனிதன் ஒரு வளமல்ல' என்று பொருள்படும் “Human is Not a Resource” என்ற நிகழ்ச்சியை சத்குரு வடிவமைத்துள்ளார். துடிப்பு மிக்க தொழில்முனைவோர் குழுவினர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியின் பல்வேறு அமர்வுகள், நடைமுறைக்கு ஒத்துப்போகும் அறிவின் மதிப்புமிக்க கூறுகளையும், தொழில் தலைமைகளின் நிபுணத்துவ வழிகாட்டுதல்களையும் வழங்கின. சத்குரு இதில் ஒரு நிகழ்வை வழிநடத்தினார். அப்போது அவர், வணிகங்களில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் மற்றும் கிராமப்புற இந்தியாவின் திறன்கள் போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ளாதிருக்கும் நிலை குறித்தும் உரையாற்றினார். இந்த இரண்டு மணிநேர நிகழ்ச்சியில் கேள்வி-பதில் அமர்வும் இடம்பெற்றது. அதில் பங்கேற்பாளர்கள் சத்குருவிடமிருந்து தங்கள் கேள்விகளுக்கான விடையைப் பெற்றனர்.

“India@75” - மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு ஆரோக்கியம்

11
ஜூன்

விரைவில் இந்தியா தனது 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில், இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர மிஷன் மற்றும் ஜெனீவாவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் இணைந்து ஒரு ஆன்லைன் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில், மனித குலத்தின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் யோகா வகிக்கும் முக்கிய பங்கு குறித்து சத்குரு தனது உரையில் குறிப்பாக வலியுறுத்தினார். கேள்வி-பதில் அமர்வின் போது, ஆரோக்கிய கலாச்சாரத்தை வடிவமைத்தல், யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்த சரியான புரிதலை உண்டாக்குதல், இந்த பெருந்தொற்றை விழித்துக் கொள்வதற்கான ஓர் எச்சரிக்கை மணியாக அணுகுவது மற்றும் மனிதர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான தேவை ஆகியவை குறித்து பேசப்பட்டன.

“This is Paris” வலையொலி நிகழ்ச்சியில் பாரிஸ் ஹில்டனுடன் சத்குரு

14
ஜூன்

பாரிஸ் ஹில்டன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், ஊடக ஆளுமை, சமூக ஆர்வலர், மாடல், பாடகி, நடிகை மற்றும் டிஸ்க் ஜாக்கி (DJ) என பன்முகத் தன்மை கொண்ட பெண்மணி. சமூக ஊடகங்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான பின்பற்றுபவர்களைக் கொண்ட இவர், சத்குருவுடன் நிகழ்த்திய இந்த கலந்துரையாடல், ஒரு புதிய தளத்திலிருக்கும் பார்வையாளர்களுக்கு சத்குருவை அறிமுகப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமைந்தது. ஒரு குருவாக இருப்பதன் அர்த்தம், இந்த ஷணத்தில் வாழ்வது மற்றும் "கர்மா" என்ற வார்த்தையைச் சுற்றியுள்ள தவறான கருத்துகள் குறித்து பாரிஸ், சத்குருவிடம் கேட்டறிந்தார்.

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தடுக்கும் நோக்கில் UNCCD உலக தினம்

17
ஜூன்

இந்த உலகளாவிய ஆன்லைன் நிகழ்வு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தினத்தை முன்னிட்டு பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிலம் பாலைவனமாகும் பிரச்சனையை சத்குரு ஒரு தனித்துவமான கோணத்தில் முன்வைத்தார். நமது சொந்த உடலே எப்படி நாம் பாதம் பதித்து நடக்கும் இந்த மண்ணால் ஆகியுள்ளது என்பதையும், நமது மண் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அந்தளவுக்கு, நம் உடலும் வலிமையாகும் என்பதையும் அவர் விளக்கினார். வருங்கால சந்ததியினருக்கு மண்ணை வளமாகவும் செழிப்பாகவும் விட்டுச்செல்ல முயற்சிக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மாதத்தில் பிற நிகழ்வுகள்:

ஆனந்த அலை: தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பரவிய ஆனந்த அலை

25-29
ஜூன்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2011ல் மாபெரும் அளவில்  ஈஷா யோகா வகுப்புகளை தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சத்குரு நேரில் நிகழ்த்தினார். இந்த  முதல் ஆனந்த அலை தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பத்து வருடங்களுக்கு பிறகு ஆனந்த அலை மேலும் ஆர்ப்பரிக்கும் விதமாக, வழிகாட்டுதலுடன் கூடிய ஷாம்பவி மஹா முத்ரா க்ரியா, பல்வேறு தலைப்புகளில் சத்குரு அவர்களின் தீர்க்கமான உரையினைக் கொண்ட வீடியோக்கள், ஈஷா யோகா வகுப்பின் கருவிகளை சற்று ஆழமாகப் பார்த்தல் போன்ற அடிப்படைக்கு  வலுவூட்டும் பயிற்சி வகுப்புகள் ஈஷா யோக வகுப்பை பூர்த்தி செய்த அனைவருக்கும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சமீபத்தில் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டது.

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐந்து நாள் ஆன்லைன் ஆனந்த அலை வகுப்பில் சுமார் 11,000 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். தங்கள் உள்நிலை வளர்ச்சி எனும் நெருப்பை இந்த வகுப்பு தூண்டியதாகவும், இந்த பெருந்தொற்று காலத்தில் பெரும் ஆதரவாக இருந்ததாகவும் பங்கேற்பாளர்கள் பலரும் பகிர்ந்து கொண்டனர்.

மற்றமொழிகளிலும் இதே போன்ற ஆன்லைன் வலுஊட்டும் பயிற்சி வகுப்புகள் வரும் நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு:

“சத்குரு பேசுவதை மீண்டும் கேட்கும்போது, ஒவ்வொரு முறையும், பூட்டியிருக்கும் ஒன்றை திறப்பது போலும், ஏறக்குறைய நம் உள்ளே ஒரு தூய்மை நிகழ்வது போலும் இருந்தது. இதுதான் எனக்கு தேவையாக இருந்தது. இது நடக்க சாத்தியமாக இருந்த ஒவ்வொரு தன்னார்வலருக்கும் நான் தலை வணங்குகின்றேன்.”

குருவே

எனக்குள் நீங்கள் ஏற்றிய தீபம்

காற்றுநடுவில் அதை விட்டுவிட்டேன்

இருள் சூழ்ந்தது வாழ்க்கை மங்கியது

இருப்பினும் விளக்கு அணையாமல் பாதுகாத்தீர்-

காற்று சூறாவளியாக வீசினாலும்.

இப்போது விளக்கு மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது

ஒரு துணிச்சலான முட்டாள் நான்

உங்களிடமிருந்து அதை

என் பொறுப்பிலெடுக்க விழைகிறேன்

இந்த தீபம் ஒளிரட்டும்

என்றென்றும் பிரகாசிக்கட்டும்.

- ராஜசேகர், சென்னை