நடப்புகள்

உலகெங்கும் 'முழு நிலவில் அருள் மடியில்'

புதிய ஆன்லைன் பௌர்ணமி சத்சங்க தொடர் மூலம் நம்மை அரவணைக்கும் சத்குரு

மதி நிறைந்த பௌர்ணமி மாலைப் பொழுதினை முறையாக பயன்படுத்திக்கொள்ள ஒரு ஞானியுடன் இணைந்திருப்பதை விட வேறென்ன சிறப்பாக செய்திட இயலும்? சத்குருவுடன் இணைந்திருக்க நமக்கு கிடைத்துள்ள இந்த புதிய வாய்ப்பு பற்றியும், உலகம் முழுவதும் இது உயிர்களை எப்படி தொட்டு, மாற்றிவருகிறது என்பது பற்றியும் இந்த பகுதியில் அறிய இருக்கிறோம்.

யோக பாரம்பரியத்தில் பௌர்ணமியின் முக்கியத்துவம்

முழு நிலவு நாள் அல்லது பௌர்ணமி தினம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தங்களின் உச்சபட்ச இயல்பை உணர்வதற்கான உந்துசக்தியாகவும் பலருக்கும் இருந்துள்ளது. இந்த நாளில், தன் கட்டுப்பாடுகளைக் கடந்து தியான நிலையை அடைய முயலும் ஒருவருக்கு கோள்களின் அமைப்பானது இயற்கையிலேயே ஆதரவாக அமைந்திருக்கிறது. இதனால்தான் பௌர்ணமி தினத்தை தியானத்திற்கும் ஆன்மிக சாதனாவிற்கும் உரியதாக பாரம்பரியமாகவே யோக மரபு பரிந்துரைத்து வந்துள்ளது.

இந்த புனிதமான பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்து, பௌர்ணமியை தன் இருப்பில் உணரும் ஒரு வீரியமான சாத்தியத்தை சத்குரு வழங்குகிறார். 'முழு நிலவில் அருள் மடியில்' சத்குரு சத்சங்கம் தனித்துவமான 12 மாதாந்திர ஆன்லைன் சத்சங்கங்களை கொண்ட ஒரு தொடர். இதில் சத்குருவின் ஞானம், சத்குரு வழிநடத்தும் சக்திவாய்ந்த தியானம் மற்றும் தீர்க்கமான கேள்வி பதில் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

அசைவற்ற நிலையில் உறைந்தனர்

28 மார்ச் 2021 அன்று முதல் சத்சங்கம் துவங்கியதும், சத்குரு முற்றிலும் புதிதான வித்தியாசமான ஒன்றை திட்டமிட்டு இருக்கிறார் என்பது தெளிவானது. உலகம் முழுவதும் இருந்து இந்த நேரலை ஒளிபரப்பில் மக்கள் இணைய, தாம் ஏன் இந்த சத்சங்க தொடரை அருள் மடியில் என்று குறிப்பிடுகிறார் என்பதைப் பற்றி விளக்கினார். அடுத்து, ஒருவரின் உள்நிலையை ஆழமாக தொடும் விதத்தில் இந்த நெருக்கமான குழுவினரை ஒரு சக்திவாய்ந்த தியான செயல்முறையில் வழிகாட்டி அழைத்துச் சென்றார் சத்குரு.

தமிழகத்தை சேர்ந்த ப்ரீத்தா தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்:

“முழு நிலவில் அருள் மடியில்' சத்சங்கம், நான் யார் என்பது பற்றி நான் அறிந்திராத என் எல்லைகளுக்குள் ஆழமாக மூழ்கியெழும் ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது. இது நான் எப்போதுமே இழக்க விரும்பாத ஒரு அனுபவமாக, குளுமையும் அதேசமயம் தீவிரமும் இணைந்த ஒரு அனுபவமாக அமைந்திருந்தது. சத்குரு வழிகாட்டலில் தியானத்தில் ஈடுபட்டது ஒரு உடனடி சக்தி வழங்கும் அனுபவமாக இருந்தது. எனக்குள் சக்திநிலை மிக தீவிரமாக அதிகரித்திருப்பதை உணர்ந்தேன்! மௌனம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து, பேரானந்தத்தின் கண்ணீர் துளிகள் என்னிலிருந்து முடிவில்லாத பிரவாகமாக பொங்கிக் கொண்டிருந்தது. சத்குருவின் அருள் அமுதத்தில் முழுவதுமாக மூழ்கியதாக நான் உணர்ந்தேன்.”

தன்னை உணர்ந்த ஞானியின் இருப்பில் பௌர்ணமி மாலைப்பொழுதின் சக்தியை உணர்ந்த அனுபவம் பற்றி தமிழகத்தைச் சேர்ந்த டோலா பகிர்கிறார்:

“பௌர்ணமி மாலைப்பொழுதின் அழகில் மட்டுமின்றி சத்குருவின் அருளிலும் திளைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக இந்த சத்சங்கம் அமைந்திருந்தது. சத்குரு வழிநடத்திய தியானங்கள் சிறந்த பங்களிப்பாக இருந்தன. பௌர்ணமி இரவின் அமைதியிலும், அசைவற்ற தன்மையிலும் நான் மூழ்கி இருந்தேன்.”

பல வழிகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் செயல்முறை

'வழிகாட்டுதல் தியானங்கள்' ஒருமுறை மட்டும் நிகழ்ந்து முடிபவை அல்ல. இந்த புதிய செயல்முறைகளை பங்கேற்பாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வோடு இணைத்துக் கொண்டு, தினமும் இதன் பலன்களை அறுவடை செய்ய ஊக்கமளிக்கப் படுகிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தொழில்நுட்பம் இன்று மிக எளிமையாகவும் நவீனமாகவும் மாறியிருப்பதால் இந்த சக்தி வாய்ந்த செயல்முறை நமது உடல்நலத்தில் ஏற்படும் தாக்கத்தையும் நம்மால் உடனடியாக அளவிட முடிகிறது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ரேணு, "சத்குரு வழங்கியுள்ள புதிய சாதனாவை ஒரு வெடி என்றே சொல்லலாம். என்னுடைய இயல்புநிலை இதயத் துடிப்பின் வேகத்தை வழக்கமாக ஆராரிங் என்னும் ஒரு கருவியின் மூலமாக அளவிடுகிறேன். கடந்த ஒரு ஆண்டாக எனது சராசரி ஓய்வு நேர இதயத்துடிப்பு 66 ஆக இருக்கிறது. இந்த தியானத்தை நான் தினமும் செய்ய துவங்கியதும், முதலில் அது 57 ஆக குறைந்தது, பிறகு 53 ஆனது, நேற்று 47 ஆகி இன்ப அதிர்ச்சி அளித்தது!" என பகிர்கிறார்.

வாழ்வில் இடையூறுகளையும் வாழ்வாதாரங்களை சிதைத்தும் உள்ள இந்த பெருந்தொற்று காலகட்டத்தின் சவால்களை சந்திக்க  இந்த மாதாந்திர சத்சங்க தொடர் சரியான நேரத்தில் கிடைத்த உற்சாக ஊற்றாக அமைந்திருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த நீமா கூறுகையில், "கடந்த சில மாதங்களில் மிக மோசமான ஒரு சமூக சூழலை நான் கடந்துவர வேண்டியிருந்தது. எனது வீட்டின் சௌகர்யங்களை இழந்து, ஒரு சிறு தனி அறையில் நான் தனியே வசிக்க வேண்டியிருந்தது. அந்த சூழலில் எனக்கு பித்துப்பிடிக்காமல் காப்பாற்றியது எனது ஆன்மீக பயிற்சிகள் மற்றும் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள் தொகுப்பு தான். சரியாக இதே நேரத்தில் தான் சத்குரு பௌர்ணமி சத்சங்க தொடரை அறிவித்தார். கேட்ட மாத்திரத்திலேயே நான் உள்ளே குதித்து விட்டேன்."

"இந்த சத்சங்க அனுபவம் என்னை மூழ்க வைப்பதாக இருந்தது. இதுவரை நாம் கலந்துகொண்டுள்ள மற்ற எந்த சத்சங்கத்தைப் போலவும் இது இல்லை. இது சிறப்பானதாக இருக்கிறது. சத்குருவின் முன்னிலையில் நான் நேரிலேயே அமர்ந்திருக்கும் ஒரு அனுபவத்தை கொடுத்தது. இது எனக்கு அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது.”

திரைக்கு பின்னால்: உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் அடையும் முயற்சி - சத்சங்க நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான நிதேஷ்ஜெயின் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்:

"இந்த நிகழ்ச்சி எந்த அளவு வீச்சு கொண்டுள்ளது என்பது பற்றி மக்கள் உணரவில்லை என்றே நான் நினைக்கிறேன். சத்சங்கம் நேரலையில் ஒளிபரப்பாகும்போது, ஒரு நிமிடத்திற்கு 9000க்கும் மேற்பட்ட இணைப்புகள் மூலம் மக்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சத்சங்க நேரலை ஒளிபரப்பில் 1,20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரலையில் இணைகிறார்கள்.  ஈஷா மஹாசிவராத்திரிக்கு அடுத்து, 'முழு நிலவில் அருள் மடியில்' சத்குரு சத்சங்கங்கள் மக்களை நேரலையில் இணைக்கும் மிகப் பிரம்மாண்டமான நிகழ்வாக இருக்கிறது.

தனிப்பட்ட அளவில் கூறுவதென்றால், நான் ஆஸ்திரேலியாவில் பணியாற்றிய போது ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றேன். ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவைத் தவிர,  சத்குருவுடன் நேரடி தொடர்பில் இருக்க எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு, அவரது யூடியூப் வீடியோக்கள் மட்டும்தான். "ஈஷா சந்திர குண்டத்தின் முன்புறம் நிகழ்ந்த சத்சங்க வீடியோக்கள்" மிக மதிப்பானதாகவும் என்னுள் மாற்றம் ஏற்படுத்துவதாகவும் இருந்தன. அந்த நேரத்தில், இது நமக்கு கிடைப்பதற்காக உழைத்த மக்களுக்கு நான் தலைவணங்கி நன்றி செலுத்தினேன். தன்னார்வலராக நான் ஈஷா யோகா மையம் வந்தபோது, பௌர்ணமி தினங்களில் அங்கே சத்குரு சத்சங்கம் நிகழ்த்துவது வழக்கம் என்பதையும், அந்நாளில் தனித்துவமான தியான செயல்முறைகள் இருக்கும் என்பதையும் நான் கண்டறிந்தேன். உலகம் முழுவதுமுள்ள அனைவருக்கும் அந்த நெருக்கத்தை சத்குரு தற்போது விரிவுபடுத்தி இருக்கிறார். சத்குரு வழங்கும் இந்த சத்சங்கங்க நிகழ்வில் நான் ஒரு சிறிய அங்கம் வகிப்பதே ஒரு பெருமையாக இருக்கிறது. பங்கேற்பாளர்களுடன் நான் தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன். ஏனெனில், அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் நான் ஆறு வருடங்களுக்கு முன் இருந்தேன்."

சுனில், முழு நிலவில் அருள் மடியில் நிகழ்ச்சியின் மென்பொருள் வடிவமைப்பாளர், பகிர்கிறார்:

"சத்குருவின் இலக்கான 'ஒரு துளி' ஆன்மிகம் எனும் நோக்கம் நிறைவேற உதவுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சத்குருவின் இருப்பில் இந்த தியானங்களில் ஈடுபடுவது ஆழமான அனுபவத்தை தருவதாக பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர். இது உண்மையிலேயே அற்புதமானதாகவும்,  சத்குரு நம் தலைமுறையினருக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதமாகவும் நான் கருதுகிறேன்."

"இவ்வளவு பெரிய ஒரு நிகழ்ச்சியை, அடிப்படையில் இருந்து நாமே சொந்தமாக வடிவமைத்த ஒரு தளத்தில் கொண்டு செல்வது என்பது இமாலய கனவாகவே இருந்தது. ஏனெனில் நம்மிடம் போதுமான தொழில்நுட்ப வசதிகள்  இல்லை. ஆனால் எப்படியோ ஒரு வழியாக நமது குருவின் அருளோடு, இந்த தொழில்நுட்ப தடைகளை எல்லாம் கடந்து இன்று மிகச் சிறப்பாக வடிவமைக்கப்படும் தளங்களுக்கு இணையாக, பெரிய தொழில்நுட்ப வசதியோ அல்லது தொலைத்தொடர்பு வசதிகளோ அற்ற தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் கூட இந்த சத்சங்கங்களை எடுத்துச்செல்ல முடிந்திருக்கிறது."

"இந்த தளத்தை கட்டமைத்து, கிடைத்திருக்கும் முடிவுகளை பார்க்கையில் அனைவருக்கும் ஒரு துளி ஆன்மீகம் என்பது இந்த உலகில் விரைவில் சாத்தியமாகும் என்பதை நிச்சயமான ஒன்றாகவே பார்க்கிறேன்.

உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்கள்

இந்த சங்கத்தின் முதல் நான்கு தொகுதியில் 177 நாடுகளைச் சேர்ந்த 3,80,513 பங்கேற்பாளர்கள் பங்கேற்று ஆன்மீக சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சத்சங்கம், தமிழ், இந்தி, ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட ஆறு மொழிகளிலும் நேரலையில் மொழி பெயர்க்கப்படுகிறது.

மிகுயேல், ஸ்பெயின் மாணவர் பகிர்ந்துகொள்கிறார்:

"ஐ லவ் சத்குரு! இவர் பேசுவது எனக்கு பெரிதும் பொருளுள்ளதாக இருக்கிறது. சத்குரு ஆன்லைனில் என்ன வழங்குவதாக இருந்தாலும் அதில் பங்கேற்பதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். ஏதோ ஒரு வடிவத்தில் எனது பெற்றோர்கள் சத்குருவால் தொடப்பட வேண்டும் என நான் விரும்பினேன், ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் புரியாது என்பதால் இதுவரை அது முடியாததாகவே இருந்தது. ஆனால் இப்போது இந்த சத்சங்கங்கள் நேரலையில் ஸ்பானிஷ் மொழியிலும் கிடைப்பதால் அவர்களாலும் பங்கேற்க முடிகிறது. வழிகாட்டுதல் தியானங்கள் மிக எளிமையான அனிமேஷன் குறிப்புகளுடன் புதிதாக பங்கேற்கும் அவர்களாலும் மிக எளிதாக பின்பற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. சத்சங்கம் நிறைவடைந்த பிறகு அவர்கள் முகத்தில் ஒரு தனி ஜொலிப்பை நான் காண்கிறேன். அவர்கள் வாழ்வில் இது நிகழ்ந்திருப்பதற்காக சத்குருவிற்கு நான் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது."

பண்டைய  அமெரிக்க மறைஞான தளத்திலிருந்து

சத்குருவிடம் அடுத்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றி உங்களால் எப்போதுமே அனுமானித்துவிட முடியாது. ஜூன் 24 மாலை சத்சங்கத்தில் இணைந்த பங்கேற்பாளர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பண்டைய அமெரிக்க மறைஞான கலாச்சாரத்தை சேர்ந்த மாதோ திபிலா எனும் கம்பீரமாக காட்சியளிக்கும் இடத்திலிருந்து சத்சங்கத்தை நிகழ்த்தினார் சத்குரு. கடந்த வருடம் தென் அமெரிக்காவின் மறைஞானம் குறித்து பயணம் மேற்கொண்டிருந்த போது சத்குரு இந்த பாரம்பரிய இடத்தை கண்ணுற்றிருந்தார். அந்த சுற்றுச்சூழல் அனைவரையும் வார்த்தைகளற்றுப் போகச் செய்த நிலையில், அப்போது சத்குரு வழிநடத்தி வழங்கிய சக்திவாய்ந்த நெருப்பு தியானம் அனைவருக்கும் சக்தியூட்டுவதாக அமைந்தது.

பலருக்கும் சத்குருவுடனான இந்த 'முழு நிலவில் அருள் மடியில்' சத்சங்கங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அன்பு பொங்கும் அருள் தொடர்பாக மாறி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன்-ஐ சேர்ந்த மருத்துவத்துறை வல்லுநரான ஜோஸ்  உரியாஸ்இப்படி பகிர்கிறார்:

"ஒரு முழு நிலவு நாளில் ஒரு யோகியால் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாக உணருங்கள். என்னளவில் இது என்னை மாற்றியமைக்கும் துணிகர சாகச அனுபவமாக இருந்தது."