seperator

"பௌர்ணமி இரவுகளில் நமக்குள்ளும் வெளியிலும் உயர்ந்த சக்திநிலை இருக்கிறது. இந்த சக்தியை நம் ஆரோக்கியம், பேரானந்தம் மற்றும் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன." - சத்குரு

பௌர்ணமி இரவுகள், இயற்கை இலவசமாக சக்திவெள்ளத்தை வழங்குவதாக இருப்பதால், அவை ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களது தியானத்திற்கு உகந்தவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு பௌர்ணமி இரவையும் உங்கள் உச்சபட்ச தன்மையை உணர்வதற்கான படிக்கல்லாக மாற்ற இந்த சத்சங்கம் ஒரு ஈடு இணையற்ற வாய்ப்பினை உங்களுக்கு வழங்க முடியும்.

buring questions
 
உங்களுக்குள் தீயாய் எரியும் கேள்விகளுக்கு பதிலறியுங்கள்
meditations
 
சக்திவாய்ந்த தியான செயல்முறைகளில் கலந்துகொள்ளுங்கள்
satsang
 
உயிர்வாழும் ஞானியுடன் வாழ்வின் ஆழமான பரிமாணத்தை அறிந்துணருங்கள்

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

seperator
  • முன்பதிவு அவசியம், இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம்.
  • மார்ச் 28, 2021 அன்று துவங்கி 12 பௌர்ணமிகளுக்கு சத்சங்கங்கள் நடைபெறும்.
  • பௌர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு இந்த சத்சங்கம் துவங்கும்
  • 1.5 முதல் 2 மணி நேரம் இதற்கென முழுமையாக ஒதுக்கத் தயாராக இருங்கள்.
  • அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம், வயதுவரம்பு கிடையாது.
  • இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், ரஷ்ய, ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், மாண்டரின் மற்றும் அரபு மொழிகளில் இந்நிகழ்ச்சி நேரலையில் வழங்கப்படுகிறது.

இலவசமாக பதிவுசெய்யுங்கள்

சத்சங்கத்தை சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்ள

seperator

உங்கள் கிரகிப்பாற்றலை உயர்த்தி இந்த வாய்ப்பினை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள சில வழிகாட்டிகள்:

  • சத்சங்கத்தை அதன் புனிதம் மாறாமல் உணர்வது அவசியம். இந்நேரத்தை இதற்கென பிரத்யேகமாக ஒதுக்கிடுங்கள், இடையே எந்த இடையூறுகளும் தொந்தரவுகளும் இல்லாதவிதமாக முன்னேற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் (1.5 முதல் 2 மணி நேரம் இடையே கழிப்பறை செல்வதோ, அலைபேசி பயன்படுத்தவோ கூடாது).
  • தடங்கல் இல்லாத இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
  • மடிக்கணினி அல்லது மேசைக்கணினி வழியாக கலந்துகொள்வது சிறந்தது.
  • சத்சங்கம் துவங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே லாக் இன் செய்து தயாராக இருக்கவும். தாமதமாக வருவோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது.
  • சத்சங்கத்திற்கு 2.5 மணிநேரத்திற்கு முன்பே உணவை முடித்துக்கொண்டு, நிகழ்ச்சியின்போது வயிறு லேசாக இருக்கும்விதமாக திட்டமிட்டுக் கொள்ளவும், சத்சங்கத்தின் போதும் எதுவும் உண்ணவேண்டாம்.
  • அருகில் எண்ணெய் விளக்கேற்றி வைத்தால், அது இன்னும் உகந்ததொரு சூழ்நிலையை உருவாக்கும்.
  • தரையில் அமர்ந்திருப்பது சிறந்தது, அது முடியாவிட்டால் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம்.

அடுத்துவரும் சத்சங்கங்கள்

seperator

மார்ச் 2021 முதல், ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சத்சங்கங்களை சத்குரு வழங்கி வருகிறார் .

ஜனவரி 18, 2022

FAQ

தொடர்புகொள்ள