பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

எந்திர மலைகள்

மனிதன், எந்திரம், மலைகள்...

கரடுமுரடான பாதை - காதல் அதன்பால்,

வலுவான எந்திரம், அதோடு

வெல்ல இயலா மலைகளை வெல்லும்

விருப்பத்தால் விளைந்த உறுதி.

எந்திரத்தின் உறுமல்

எண்ணிலடங்கா கியர் மாற்றங்கள்

பாறைகள் பள்ளங்கள் குண்டு குழிகள்.

செய்வதனைத்திலும் முதலிடம் வேண்டும் எனும்

மனிதனின் மூடத்தனமான முனைப்பில்

வாரியிறைக்கும் நீரும் சேறும்.

முழுமையாய் அறிந்திருக்கிறோம்  -

பேரார்வமும் சிலிர்ப்பும் இருந்தாலும்

நிலையற்ற நாம்

சிவனின் விருப்பத்தின்படியே

நிலைத்திருக்கிறோம்.

- சத்குரு
பகிருங்கள்