ஈஷா சமையல்

பேக் செய்யப்படாத கேரட் வால்நட் கேக்

தேவையான பொருட்கள்:

கேக்கின் மேல் ஐசிங் செய்ய விரும்பினால்

1¼ கப் முந்திரி

½ கப் திக்கான தேங்காய் பால்

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

3 டேபிள் ஸ்பூன் தேன்

1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

கேக் செய்ய தேவையான பொருள்

2 கப் நைசாக துருவிய கேரட்

2 கப் விதை நீக்கிய பேரீச்சம்பழம்

2½ கப் வால்நட் பருப்பு

2 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

¼ டீஸ்பூன் உப்பு

1¼ டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி

¾ டீஸ்பூன் சுக்குப்பொடி

1 சிட்டிகை ஜாதிக்காய் பொடி

½ கப் பொடியாக்கப்பட்ட கொப்பரை

¼ கப் உலர் திராட்சை


செய்முறை

  1. 1) கேக்கின் மேல் ஐசிங் செய்ய விரும்பினால், முதலில் 1லிருந்து 1.30 மணி அளவு முந்திரி பருப்பை வெந்நீரில் ஊற வைக்கவும். பிறகு அலம்பி, வடிகட்டி, அதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய் பால், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நைசாக, நுரை வரும்வரை அரைக்கவும். அதன்பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, பிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.
  2. 2) காரட்டை நைசாக துருவிக்கொள்ளவும்.
  3. 3) ஒரு பெரிய மிக்சரில் விதை நீக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு சிறு சிறு துண்டுகளாகவோ அல்லது ஒன்றாக சிறு பந்து போலவோ ஆகும் வரை அரைக்கவும்.
  4. 4) மிக்ஸரில் வால்நட் பருப்பு, வெண்ணிலா எசென்ஸ், உப்பு மற்றும் சுக்குப்பொடி, லவங்கப்பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பான ஒரு கலவையாக வரும் வரை அரைக்கவும். இத்துடன் அரைத்து வைத்த பேரீச்சம்பழம், கேரட் துருவல் சேர்த்து, எல்லா பொருளும் கேரட்டுடன் சேர்ந்து தளர்வான மாவு பதத்துக்கு வரும் வரை மிக்சியை பல்ஸில் வைத்து விட்டு விட்டு ஓட விடவும். மிகவும் கவனமாக ஓட விடவும். நமக்கு தேவையான ரொட்டி மாவு பதத்தில் இருக்க வேண்டும், பியூரி பதம் இல்லை.
  5. 5) ஒரு பெரிய பாத்திரத்தில் இந்த கலவையை மாற்றி, தேங்காய் பொடி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறவும்.
  6. 6) 8 x 8 அளவில் உள்ள ஒரு கேக் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு கலந்து வைத்திருக்கும் கேக் கலவையை ஊற்றி, ஒரே அளவிற்கு தட்டி சமன்படுத்தவும். அடி தட்டையாக உள்ள கண்ணாடி டம்பளர் கொண்டு சமன்படுத்தலாம். (அல்லது வழித்து எடுத்து உருண்டையாகவும் கேக்-பைட்சாகவும் செய்யலாம்)
  7. 7) சமன்செய்த பின், லேசாக ஒரு கத்தியை அடியில் விட்டு எடுத்து கேக்கை ருசிக்கலாம். அல்லது கேக் மேலே ஐசிங் செய்ததை ஊற்றி, குமிழிகள் வராதவாறு பரப்பி விடவும். அதன்மேல் பேக்கிங் சீட் வைத்து, மாவு பதப்படும் வரை 3 - 4 மணி வரையில் பிரிட்ஜில் வைக்கவும்.
  8. மிகவும் கெட்டியாக, விறைத்து போகாமல், நைசாக துண்டு போடும் பதத்தில் எடுத்து, மேலும் சில நட்ஸ் வகைகளை பொடித்து தூவலாம். சூடான கத்தி கொண்டு வில்லைகளாக போடலாம். குளிர்ந்த நிலையில் சாப்பிட ருசியாக இருக்கும்.