பாறைகளின் அசைவின்மை

பாறைகளின் அசைவின்மையும்
துடித்துக் கொண்டிருக்கும் உயிரின் அசைவின்மையும்
ஒன்றே எனினும்
உலகளாவிய வேறுபாடு உண்டு இரண்டுக்கும்.
ஒன்றின் அசைவின்மையால்,
படிவுகள் ஓரிடத்தில் சேர்ந்திருக்கிறது
மற்றொன்றின் அசைவின்மையால்,
புலனுணர்வுகளை கடந்த நுண்ணர்வு வெளிப்படுகிறது.

- சத்குரு