சிந்தையை தூண்டும் சில கேள்விகளை சத்குரு மீது தொடுத்தார் டேவ் அஸ்ப்ரே: "விழிப்புணர்வு எங்கிருந்து வருகிறது?"; சத்குருவைப் போல படிப்பறிவை ஒதுக்கிவிட்டு ஒருவர் எப்படி இருப்பது?; சத்குருவின் சமீபத்திய புத்தகத்தின் அட்டைப்படமாக என்ன இடம் பெற்றுள்ளது?; மற்றும் "எது முக்கியமானது: நோக்கமா அல்லது கிடைக்கும் முடிவா?" இப்படியாக நடந்த உரையாடலில், கர்மா புத்தகத்தின் அட்டைப்படமாக இடம்பெற்றுள்ள பூதசுத்தி செயல்முறை பற்றி, விழிப்புணர்வின் எல்லையற்ற தன்மை பற்றி விளக்கமளித்த சத்குரு, எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையே முக்கியமானது என்றார்.
விழிப்புணர்வான சமூகம், தொழில்நுட்பம் மற்றும் மகிழ்ச்சியான Vs கொள்கைக்காக வாழும் மக்கள் போன்ற பல தலைப்புகளிலும் சத்குரு சஹாரா ரோஸ் உடன் அவரது 'Highest Self' வலையொலி நிகழ்ச்சியில் உரையாடினார். நிகழ்ச்சியின் போது சஹாரா, "ஆன்மீக குறுக்கு வழி" பற்றி, ஆன்மீகத்தின் பெயரால் மக்கள் நிதர்சனத்தில் இருந்து தங்களைத் தாங்களே திசைதிருப்பிக் கொள்கிறார்களே என்ற கேள்வியை முன் வைத்தார். தெள்ளத்தெளிவாக இதற்கு பதிலளித்த சத்குரு, உண்மையான ஆன்மீகம் என்பது தப்பிக்கும் வழி அல்ல, இதுவே வாழ்க்கையோடு ஒருவர் கொள்ளக்கூடிய மிக ஆழமான ஈடுபாட்டிற்கான வழி என்பதை நினைவூட்டினார்.
பிபிசி வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பீட் டாங் அவர்களுடன் சத்குரு கிளாஸ்கோ-வில் நடைபெற்ற குளோபல் லேண்ட்ஸ்கேப்ஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். உண்மையை உடைத்து பேசிய சத்குரு, தற்போது நமக்கிருக்கும் சுற்றுச்சூழல் சவால்களை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது போன்ற எல்லா கவலைகளையும் சுக்குநூறாக்கினார். இதை நாம் நிகழ்த்துவோமா இல்லையா என்பது மட்டுமே கேள்வி என்று வலியுறுத்திப் பேசிய சத்குரு, இந்த சவாலை எதிர்கொள்ள தனிமனித விருப்பம் மட்டுமே போதாது, அரசியல் ரீதியான ஆதரவும் தேவை என்றார்.
ஆன்லைனில் தனிமனித வளர்ச்சி மற்றும் கல்வி தளமாக விளங்கும் மைன்ட்வேலி-ல் (Mindvalley) புதிய நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளார் சத்குரு. இதில் ஒருவர் ஒரு மணிநேர இலவச வகுப்பு அல்லது மைன்ட்வேலி சந்தாதாரர்களுக்கான 15 நாள் பிரத்யேக நிகழ்வில் பங்கேற்க முடியும். இந்த நிகழ்ச்சி, வேதனையை கடந்து செல்வது, விளையாட்டாய் வாழ்வை நடத்த ஒருவரது எண்ணம் மற்றும் உணர்ச்சிகளை கையாளும் முறைகளைப் பற்றிய சத்குருவின் ஆழமான பார்வையையும், கருவிகளையும் வழங்குகிறது.
தீபாவளியை முன்னிட்டு CNBC Awaaz தொலைக்காட்சியின் நீரஜ் பாஜ்பாய் சத்குருவை பேட்டி எடுத்தார். லட்சுமி, செல்வம் மற்றும் நல்வாழ்வு குறித்து பேசியபடி அவர்கள் உரையாடலை துவங்கினார்கள். அடுத்து இந்திய தொழில் முனைவோர் குறித்து உரையாடல் திரும்பியது. வெற்றிக்கு எந்த மந்திரமும் இல்லை என்ற சத்குரு, வெற்றிகரமாக திகழ ஒருவருக்கு நுட்பமான பார்வையே உண்மையில் தேவை என்று குறிப்பிட்டார். ஈஷா இன்சைட் (Isha Insight) நிகழ்ச்சி, ஒருவர் வாழும் சூழ்நிலை பற்றிய தெளிவான பார்வையையும், புரிந்துகொள்ளும் தன்மையையும் ஆழப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது என்று விளக்கினார்.