பெண்களுக்கான சிவாங்கா சாதனா என முன்னர் வழங்கப்பட்ட பைரவி சாதனா, முதல்முறையாக பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலருக்கும் வழங்கப்படுகிறது.

தீட்சை மற்றும் நிறைவு செயல்முறை ஆன்லைனில் நிகழும்.

 

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தீட்சை: ஜனவரி 7, 2021

 

 
பெண்களுக்கான சிவாங்கா சாதனா என முன்னர் வழங்கப்பட்ட பைரவி சாதனா, முதல்முறையாக பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலருக்கும் வழங்கப்படுகிறது.

தீட்சை மற்றும் நிறைவு செயல்முறை ஆன்லைனில் நிகழும்.

 

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தீட்சை: ஜனவரி 7, 2021

 

seperator
 

"உங்களை நீங்கள் வெறுமையாக்கினால், உங்களுடன் இருப்பதைத் தவிர தேவிக்கு வேறு வழியில்லை. தேவி உங்களுடன் இருந்தால், எனக்கும் வேறு வழியில்லை." - சத்குரு

பைரவி சாதனா என்பது, நமக்குள் இருக்கும் பக்தியுணர்வை வெளிப்படுத்துவதற்கான ஓர் அற்புத வாய்ப்பு. முதல்முறையாக, பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலரும் இதில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வடக்கு அரைக்கோளத்திற்கு சூரிய கதிர் திருப்பம் மாறக்கூடிய உத்தராயணத்தின் துவக்கத்தில், சாதனா தொடங்குகிறது. இது ஆன்மீக அருளினை கிரகிப்பதற்கு உகந்த காலமாகும்.

புனிதமிக்க தை பூசத் திருநாளில் (தை மாதப் பௌர்ணமி) பெண்களுக்கான சாதனா நிறைவு செய்யப்படும். தேவி பைரவி ஆராதனை எனக் கொண்டாடப்படும் லிங்கபைரவி பிரதிஷ்டை நாள், ஆண்டு விழாவாகவும் இந்நாள் அமைகிறது. 2021ம் ஆண்டு தைப்பூசம், லிங்கபைரவி பிரதிஷ்டையின் 11 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது. மேலும் குறிப்பாக, 11 என்பது தேவிக்கு உகந்த ஒரு எண் ஆகும்.

தை அமாவாசையன்று ஆண்களுக்கான சாதனா நிறைவுசெய்யப்படும்.

 
பைரவி சாதனாவின் சிறப்பம்சங்கள்
seperator
 
  • பைரவி சாதனா என்பது, தேவியின் அருளை கிரகிக்கும் ஒருவரின் தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு தீவிரமான செயல்முறையாகும்.
  • பிரத்யேகப் பயிற்சிகள், சுயகட்டுப்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புகள் மூலம் சாதகர்கள் தேவியின் அருளைப் பெறுகிறார்கள்.
  • ஆன்லைன் மூலமாக தீட்சை மற்றும் நிறைவு நாள் செயல்முறைகளில் ஒருவர் பங்கேற்க முடியும்.

ஆரோக்கியம், வளம், அறிவு அல்லது ஆன்மீக வளர்ச்சி என ஒருவரின் தேவைகள் எதுவாக இருந்தாலும், அவற்றோடு மேலும் அனைத்து வளங்களையும் சிறப்புகளையும் வாரி வழங்கும் தயாள குணமிக்கவளாய் தேவி இருக்கிறாள்.

 
சாதனா நாட்கள்
seperator
 

தீட்சை நாள்: ஜனவரி 7, 2021

பெண்களுக்கான சாதனா நிறைவு: ஜனவரி 28, 2021

ஆண்களுக்கான சாதனா நிறைவு: பிப்ரவரி 11, 2021

 
வழிகாட்டுதல்கள்
seperator
 
  • சாதகர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த ஸ்துதி உச்சாடனை மற்றும் தேவி தண்டம் ஆகியவற்றிற்கான தீட்சை வழங்கப்படும்.
  • ஜனவரி 28, 2021 அன்று பெண்களுக்கும், பிப்ரவரி 11, 2021 அன்று ஆண்களுக்கும் நிறைவு செயல்முறைக்கு ஏற்பாடு செய்யப்படும்.
  • சாதனாவிற்காக தைபூசம் கிட் (தேவையான பொருட்கள்) தேவைப்படும். ஈஷா லைஃபில் இந்த கிட்டை ஆர்டர் செய்து பெறலாம்.
  • சோப்புக்கு பதிலாக மூலிகை குளியல் பொடி (ஸ்நானப் பொடி /பாசிப் பருப்பு பொடி) பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கவும்.
  • சாதனா காலத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அசைவ உணவு சாப்பிடுவது கூடாது.
  • ஒரு நாளில் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். முதல் உணவு மதியம் 12 மணிக்குப் பிறகு இருக்க வேண்டும்.
  • சாதனா காலத்தில் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளையே அணிய வேண்டும்.
 
தொடர்பு விவரங்கள்
seperator
 

மேலும் விவரங்களுக்கு அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, தயவுசெய்து எங்களை அணுகவும்:

இமெயில்: shivanga@lingabhairavi.org

தொடர்பு எண்: +91-94433 65631 அல்லது +91-94864 94865

 

பகிர்வுகள்