எதிர்வரும் நிகழ்வுகள்

மஹாசிவராத்திரி 2022

மஹாசிவராத்திரி, வருடத்தின் இருள் மிகுந்த இந்த இரவு, சிவனின் அருளையும், யோகப் பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. பூமியில் நிகழும் அத்தகைய கொண்டாட்டங்களில், பிரம்மாண்டத்திலும், கோலாகலத்திலும் மிகப்பெரும் கொண்டாட்டமாக ஈஷா மஹாசிவராத்திரி மலர்ந்துள்ளது.

இந்த ஆண்டு மஹாசிவராத்திரி மார்ச் 1, 2022 அன்று மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணிவரை கொண்டாடப்படும். இரவு முழுவதும் நீடிக்கும் துடிப்பும் துள்ளலுமான இந்த விழாவானது, சிவனே சிறிது காலம் தங்கியிருந்த புனிதமான வெள்ளியங்கிரி மலைகளின் அடிவாரத்தில், ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் முன்னிலையில் நிகழவிருக்கிறது. சக்திமிக்க தியானங்கள், சத்குருவுடன் சத்சங்கம் மற்றும் வியக்கவைக்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் இந்த இரவை நிறைக்கும்.

கடந்த யக்ஷா நிகழ்ச்சிகள்

மஹாசிவராத்திரி இரவை, 7 நாள் கொண்டாட்டங்கள் பின்தொடரும். மஹாசிவராத்திரிக்குப் பிறகு யக்ஷா – இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்தும் துள்ளலான ஒரு கலாச்சார விழா, மார்ச் 2 லிருந்து 4 வரை, தினமும் மாலை 5.30 முதல் 7.00 மணி வரை நடைபெறும். இந்த மூன்று நாட்களிலும், வண்ணமயமான கலைகளைப் பிரதிபலிக்கும் சாஸ்திரீய கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்கடுத்த நான்கு நாட்களும், அனைவரையும் கொள்ளைகொள்ளும் உள்ளூர் கலைஞர்களின் வசீகரிக்கும் நிகழ்ச்சிகள் பின்தொடரும்.

ஒவ்வொரு மாலை நேரமும், ஆதியோகி திவ்ய தரிசனம் கண்களுக்கு விருந்தாக அமையும். மனிதகுலத்துக்கு ஆதியோகியின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் வர்ணிக்கும் பிரமிப்பின் ஊற்றாகிய ஒளி, ஒலிக் காட்சி வழங்கப்படுகிறது.


மஹா அன்னதானம், அனைவருக்கும் உணவு வழங்கும் ஒரு புனித அர்ப்பணிப்பாக இருக்கிறது. இது யோகக் கலாச்சாரத்தை முழுமையாக்கும் ஒரு பகுதி. உணவை உடல் ஊட்டத்துக்காக மட்டுமின்றி, ஒரு புனிதக் கடமையாகவும் கருதி அர்ப்பணிக்கப்படும் அன்னதானம் இல்லாமல், எந்த விழாவும் அல்லது சடங்கும் நிறைவடைவதில்லை.


சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சத்தை, இலவசமாக வீட்டிலிருந்தபடியே பெறுவதற்கு, isha.co/RD என்ற இணையதளத்துக்கு வருகை தரவும்.

“தெய்வீகத்தை உணர விரும்பும் அனைவருக்கும் மஹாசிவராத்திரி மிக முக்கியமான ஒரு நாள். இந்த இரவு உங்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தட்டும்.” — சத்குரு

மேலும் தகவலுக்கு மற்றும் ஆன்லைனில் அல்லது நேரில் இணைவதற்கு, தயவுசெய்து Mahashivratri.com இணையதளத்துக்கு வருகை தரவும்.